AstroVed Menu
AstroVed
search
search

நீங்கள் இழந்தது எதுவானாலும் அதனை மீண்டும் பெறுவதற்கான பரிகாரம்

dateJuly 25, 2023

இந்த உலகில் நமது வாழ்க்கைத் தரம் தான் நமது அந்தஸ்தை நிர்வகிக்கின்றது.நாம் வகிக்கும் பதவி நம்மிடம் இருக்கும் பணம், நாம் வைத்திருக்கும் சொத்துக்கள், நம்மிடம் இருக்கும் பொருட்கள் போன்றவை தான் நமக்கு அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. அந்தஸ்து மட்டும் இன்றி பெயர் புகழையும் பெற்றுத் தருகிறது. இதற்காக நாம் அரும்பாடுபட வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் நமது வாழ்வில் சம்பாதிப்பது எவ்வாளவு கஷ்டமோ அந்த அளவிற்கு’ அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதும்.

இவற்றுள் ஒன்றை இழந்தாலும் நமது மனம் படும் பாடு சொல்ல இயலாது. பயண நேரத்தில் பணம் தொலைந்து போவது, சொத்து வழக்குகளில் சொத்து நம் கை விட்டுப் போவது, மேல் அதிகாரியுடன் ஏற்படும் மோதலில் பதவியை இழப்பது இவற்றால் நாம் சம்பாதித்த பெயர் புகழ் இழப்பது என இவை எல்லாம் நமக்கு துக்கத்தை ஏற்படுத்துவது மட்டும் இன்றி மன உளைச்சலையும் உருவாக்கும்.

பொன் பொருள் பதவி அந்தஸ்து என எதை நீங்கள் இழந்திருந்தாலும் அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று  வாழ கீழே உள்ள ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தால் போதும்.

பரிகாரம்:1

வளர்பிறை திருவாதிரை நாளில் நர்த்தன விநாயகருக்கு கோதுமையால்  இனிப்பு பண்டம்  108 என்ற எண்ணிக்கையில்  செய்து நைவேத்தியம் செய்து பிறகு அவற்றை 108 பேருக்கு வழங்க வேண்டும்.

அல்லது

பரிகாரம் : 2

வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வழக்கமான பூஜை முடிந்த பின் ஒரு தாம்பூலத் தட்டில் சிறிய வாழை இலையை பரப்பி அதன் மேல் பச்சரி வைத்து நீங்கள் திரும்பப் பெற வேண்டியவற்றை கூறி வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்த நாள் அதனை பறவை அல்லது எறும்புகளுக்கு போட்டு விடுங்கள். அதே போல சனிக்கிழமையும்  செய்து  அடுத்த நாள் பறவை அல்லது எறும்புகளுக்கு போட்டு விடுங்கள்

பிறகு ஞாயிறு அன்று கால பைரவர் ஆலயம் செல்லுங்கள்  அங்கு 6 வெற்றிலையில் 6 அகல் வைத்து நல்லெண்ணய் தீபம் ஏற்றுங்கள். பைரவருக்கு சிகப்பு பூக்களை சார்த்தி உங்கள் வேண்டுதலை கூறிக்கொள்ளுங்கள்.

.இவ்வாறு 9 வாரம் செய்து வாருங்கள்.

நீங்கள் இழந்த பொருள், பதவி, பணம், நபர் எதுவாக இருந்தாலும் திரும்பப் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள்.


banner

Leave a Reply