சனி பகவானால் ஏற்படும் கஷ்டங்கள் விலக வேண்டுமா? இவற்றைச் செய்யுங்கள்!

நவக்கிரகங்களில் சனியைக் கண்டு பயப்படாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். சனி பகவானை போல கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது என்று சொல்லுவார்கள். நமது கர்ம வினைகளுக்கு ஏற்ப தான் சனி பகவான் நமக்கு பலன்களை அளிப்பார். நமது கர்ம வினை நல்லதாக இருந்தால் நன்மைகளை அள்ளிக் கொடுக்கத் தயங்க மாட்டார். நமது கர்ம வினை தீயதாக இருந்தால் படிப்பினையை தரவும் தயங்க மாட்டார்.
ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி என்று சனி பகவானின் சஞ்சாரங்களுக்கு ஏற்ப அவரின் பெயரும் பெயருக்கு ஏற்ப செயலும் இருக்கும். கடந்த காலத் தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பினை அளிப்பவர் சனி பகவான். அவரின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் சில வழி முறைகள் உள்ளன. ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கத்தில் இருந்து நாம் விடுபட இயலும். சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட விநாயாகருக்கு அருகம்புல் மாலை சாற்றி தினமும் வழிபட வேண்டும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, ஸ்ரீராமஜெயம் மாலை, துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். குறிப்பாக சனிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை 11 சுற்று சுற்றி வழிபட்டு வருவதன் மூலம் ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து கூட விடுபட இயலும்.
மேலும் சனிக்கிழமை அன்று ஏழை எளியவர்களுக்கு உதவுதல், முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்க்ளுக்கு உதவுதல் காக்கைக்கு அன்னம் இடுதல் போன்ற செயல்கள் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும்.
சனி தோஷம் நீக்கும் பரிகாரம்:
சனி பகவானுக்கு பிடித்த உலோகம் இரும்பு ஆகும். சனியின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறைய சிறிய இரும்பு கடாய் ஒன்று வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த கடாயை கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அதில் உங்கள் முகம் தெரியும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதை சனி பகவானின் முன்பு வைத்தது சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து முடித்த பின் அதில் உங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எண்ணெயுடன் கூடிய அந்தக் கடாயை அங்கேயே யாருக்காவது தானம் அளித்து விடுங்கள்.
