Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

December Month Rasi Palan 2018 in Tamil

November 1, 2018 | Total Views : 9,351
Zoom In Zoom Out Print

கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Kumbam Rasi Palan in Tamil 2018

கும்பம் பொதுப்பலன்கள்

இந்த மாதம்  நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு நியாயமான முடிவுகளையும் வெற்றிகரமான பலன்களையும் பெற உகந்த மாதம். உங்கள் நேர்மறையான அணுகுமுறை உங்களைப்  பரந்த மனப்பான்மை கொண்டவராக மாற்றும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில்  சிறிய அளவில் உணர்வுப் பூர்வமாக செயல்பட நேரலாம். ஆனால் அது எந்த வகையிலும் உங்களைப் பாதிக்க நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள். இந்த மாதத்தில் தொழில் ரீதியாக ஏராளமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் கொண்ட பல்வேறு மக்களைச் சந்திப்பீர்கள். பயணத்தின்போது சில நபர்களை நண்பர்களாகக்  கருதுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனை அனைத்து விதத்திலும் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். உங்கள் உடல்நலம் சாதாரணமாக காணப்படும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Mesham Rasi Palan in Tamil 2018

மேஷம் - பொதுப்பலன்கள்

இந்த மாதம், உங்கள் அவசர தேவைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும். இதை நீங்கள் சரியான நேரத்தில் முறையாகக் கண்டுபிடிக்க வேண்டும். பொதுவான வேலையை எடுத்துச் செய்வதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.  தனிப்பட்ட பிரச்சினைகளைக் கையாளுவதில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்காதீர்கள். உங்கள் நண்பர்களிடமிருந்தும் சமூக வட்டத்திலிருந்தும் ஆதரவு பெற்று  சில முன்னேற்றங்களை அடைவீர்கள். இந்த மாதத்தில் கூட்டு குடும்பத்தில் நுழைய வேண்டும் என்ற உங்களுடைய நீண்ட கால ஆசை நிறைவேறும். உங்கள் சமூக வாட்டர வாழ்க்கை  பரபரப்புடன் காணப்படும்.  நீங்கள்  உங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். இது அனைவருக்கும் ஆத்ம திருப்தியை அளிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை  உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் குறித்த கவலை காணப்படும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Kadagam Rasi Palan in Tamil 2018

கடகம் பொதுப்பலன்கள்

இந்த மாதம், நீங்கள் அமைதியோடும் இணக்கத்தோடும் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். எதிர்கால அபிவிருத்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட திறன்கள் உதவும். உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி உங்களுக்கு முழு திருப்தியை அளிக்கும். தொழில் ரீதியாக நீங்கள் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.  நீங்கள் உங்கள் சமூக வாழ்க்கையை நிறைவாக அனுபவிப்பீர்கள். உங்கள்  புதிய தொடர்புகள் உங்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும். இந்த மாதம் ஒரு சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கையில் அதிகரித்துவரும் சிக்கல்களின் மீதான  உங்கள் நேர்மையான நடவடிக்கை உங்களுக்குச் சரியான முடிவுகளை பெற்றுத் தரும்.  உங்கள் வேலை தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்கள்  ஆரோக்கிய முன்னேற்றம் சாதாரணமாக காணப்படுகிறது. உடல்நலப் பிரச்சினைகள் இந்த மாதம் சாதாரணமாக காணப்படும். எனினும், நீங்கள் உங்கள் கொழுப்பு அளவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Makara Rasi Palan in Tamil 2018

மகரம் பொதுப்பலன்கள்

இது உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி அளிப்பதோடு ஒரு ஸ்திரமான  மாதமாக இருக்கும். உங்கள் வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் நல்ல வாய்ப்புகளை அனுபவிப்பீர்கள். அனைத்து வகையிலும்  சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்கள் சிந்தனைகளையும் வார்த்தைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உங்களுடைய அதீத  சுறுசுறுப்பு நடத்தை உங்கள் சமூக வட்டத்தில் நன்மதிப்பை ஏற்படுத்தும். வேலையில் உங்கள் உற்பத்தித் திறன் உங்களை வெற்றியடையச் செய்யும். பன்முக  பணியில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் குடும்பத்தில் புதிய ஒரு குழந்தை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வாரிசினால் ஏற்படும் மகிழ்ச்சி உங்கள் குடும்ப உறுப்பினர்களை அதிகபட்ச திருப்தியில் வைத்திருக்கும். இந்த மாதத்தில் பயணம் மேற்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கிய நிலை  மிக நன்றாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Mithunam Rasi Palan in Tamil 2018

மிதுனம் பொதுப்பலன்கள்

இது உங்களுக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். தவறான எண்ணங்கள் மற்றும் தவறான புரிந்துணர்வை தவிர்த்து நடைமுறைக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.  உங்களின் செயல்திறமை உங்களுடன் தொடர்பு உடையவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் சிறிய  விஷயங்ளுக்காக அலட்சியப்படுத்தக்கூடாது. பணியில் உங்கள் நேர்மை சந்தேகிக்கப்படலாம். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு  உதவியாக இருக்கும். உங்கள் சுயநலப் போக்கு அதிகரிக்கும் காரணத்தால் உங்கள் பதட்டமும் அதிகமாகும். கலைகளைக் கற்றுக்கொள்வதில் நீங்கள் காட்டும் சிறப்பு ஆர்வம் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.  எனினும் உங்கள் இடைவிடாத முயற்சிகள் மட்டுமே உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் நீங்கள் விரும்பிய பலன்களையும் அளிக்கும்.  உங்கள் உடல்நிலை மிகவும் சாதாரணமாக இருக்கும். இந்த மாதத்தில் சில விஷயங்களில் நீங்கள் தேவையற்ற பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.
                             
சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Simha Rasi Palan in Tamil 2018

சிம்மம் பொதுப்பலன்கள்

இந்த மாதம் அனைத்து செயல்களிலும் பொதுவாக  முன்னேற்றம் காணப்பட்டு  சாதாரணமாக இருக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அது உங்களுக்கு சாத்தியமாகலாம்.  சமூக, தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்களுடைய அலட்சியம் காரணமாக மறைந்திருக்கும் சிக்கல்கள் வெளிப்படும்.  எனவே ஒவ்வொரு வேலைகளையும் கவனமாக கையாளுங்கள். உங்கள் நன்மதிப்பின் மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாய்ப்பு அளிக்காதீர்கள். இந்த மாதம் உங்களுடைய தோற்றம் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்  நீதிமன்ற வழக்குகள் இந்த மாதம் முடிவுக்கு வரக்கூடும். நீங்கள் புதிய வெளிநாட்டு இணைப்புகளை உருவாக்கி அவர்களின் தொடர்புகளை மகிழ்ச்சியோடு அனுபவிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். இந்த மாதத்தில் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Thulam Rasi Palan in Tamil 2018

துலாம் பொதுப்பலன்கள்

இந்த மாதம் தொடர்ந்து உங்களுக்கு ஒரு சாதகமான மாதமாக இருக்கும். நிலுவையிலுள்ள அனைத்து வேலைகளையும் முடிப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்களுடைய நியாயமான முயற்சிகளில்  நீங்கள் விரும்பிய பலன்களைப்  பெறுவீர்கள். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிருங்கள். இது உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம். நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட மனப்பான்மையை  வெளிக்காட்டுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இந்த மாதத்தில் தொடர்ச்சியான வெற்றிகளை நீங்கள் பெறுவீர்கள். உங்களுடைய சமூக அலுவல்கள்  பரபரப்பாகவே காணப்படும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள். உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பங்கு பெறலாம். வேலையில் நீங்கள் காட்டும் உற்சாகம் வலுவாகவும்  பாராட்டத்தக்கதாகவும் இருக்கும். உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இந்த மாதம் நீங்கள் மூட்டுவலியால் அவதிப்படலாம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மீனம்  டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Meenam Rasi Palan in Tamil 2018
                                                                  
மீனம் பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் வாழ்க்கை சீராகவும் திருப்திகரமாகவும் காணப்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு இலக்கு சார்ந்த நபராக நீங்கள் ஆகிவிடுவீர்கள். உங்கள் நல்லொழுக்கம் காரணமாக உங்கள் அனைத்து செயல்களிலும்  உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அனைத்துச் செயல்களிலும் நீங்கள் காட்டும் நேர்த்தி நீங்கள் எதிர்பார்த்த துல்லியமான முடிவுகளைத்   தரும். பெரும்பாலான பணிகளை நீங்கள் ஒருவராகவே யாருடைய உதவியும் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நேர்மறை குணம் மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறை இந்த மாதம்  விரைவாக அதிகரிக்கும். உங்கள் நீண்ட கால ஆசையான அசையா  சொத்ததினை வாங்குவீர்கள்.  இந்த மாதத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் துறையில் ஒரு விருதைப் பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவராக ஆகலாம் உங்கள் உடல்நிலை இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

தனுசு டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Dhanu Rasi Palan in Tamil 2018

தனுசு பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் வாழ்க்கை சீராகவும் திருப்திகரமாகவும் காணப்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு இலக்கு சார்ந்த நபராக நீங்கள் ஆகிவிடுவீர்கள். உங்கள் நல்லொழுக்கம் காரணமாக உங்கள் அனைத்து செயல்களிலும்  உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அனைத்துச் செயல்களிலும் நீங்கள் காட்டும் நேர்த்தி நீங்கள் எதிர்பார்த்த துல்லியமான முடிவுகளைத்   தரும். பெரும்பாலான பணிகளை நீங்கள் ஒருவராகவே யாருடைய உதவியும் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நேர்மறை குணம் மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறை இந்த மாதம்  விரைவாக அதிகரிக்கும். உங்கள் நீண்ட கால ஆசையான அசையா  சொத்ததினை வாங்குவீர்கள்.  இந்த மாதத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் துறையில் ஒரு விருதைப் பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவராக ஆகலாம் உங்கள் உடல்நிலை இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Viruchigam Rasi Palan in Tamil 2018

விருச்சிகம் பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள்  மெதுவாகவும் முறையாகவும் செயல்பட வேண்டும்.  உங்களின் ஒரு சிறிய தவறு  முழு மாதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் வார்த்தைகள் மற்றும் மனப்பான்மையைக் கட்டுப்படுத்த வேண்டும்.  சில சமயம் உங்கள் வெளிப்படைத் தன்மை  தகவல் தொடர்பகளில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கலாம். அனைத்துப் பணிகளிலும் நீங்கள் மெதுவாக நிதானமாகச் செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் ஏற்பட்ட உங்களுடைய பிரச்சனைக்குரிய பணிகள்  தற்போது கண்முன்னே தோன்றலாம். அதற்கான தீர்வுகளை பெறுவதற்குப் பதில் கிடைக்காமல் போகலாம். உங்கள் சமூக வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் மிக மெதுவான பதில் பலன்கள்  கிடைக்கும். மேலும்  சில நேரங்களில் அதனால் எந்தப் பலனும் இருக்காது. உங்கள் பணத்தை நீங்கள் சேமிக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். காலம் தவறிய உணவு மற்றும் குறைந்த உடல் ஓய்வு காரணமாக உங்கள் ஆரோக்கிய நிலை சராசரியாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Rishabam Rasi Palan in Tamil 2018

ரிஷபம் பொதுப்பலன்கள்

இந்த மாதம், உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் நீங்கள் மிகவும் கவனமாக  இருக்க வேண்டும், இல்லை என்றால்  இது தேவையற்ற குழப்பங்கள் அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சில விஷயங்கள் தள்ளி போடப்படலாம். தேவையான பலன்களைப் பெற கடினமான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் பணிகளில் சிலவற்றை முடிக்க நீங்கள் சமரசம் செய்ய வேண்டியிருக்கலாம். உங்கள் துணிச்சலான இயல்பு உங்களைக் கடினமாக காலகட்டத்தில் இருந்து காப்பாற்றும். மற்றும் பணியை தன்னம்பிக்கையோடு செயல்படுத்துவதற்கு உதவும். நீங்கள் விரும்பிய நாட்டிற்குச் செல்வதற்கு வாய்ப்பைப் பெறுவீர்கள். அது தற்காலிகமானதாக இருந்தாலும் அதன் மூலம் உங்களுக்கு மிகுந்த திருப்தி கிடைக்கும். உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். தேவைப்பட்டால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை நீங்கள் எடுக்க வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2018 - December Matha Kanni Rasi Palan in Tamil 2018

கன்னி பொதுப்பலன்கள்

மரியாதை மற்றும் புகழ் பெற இது உகந்த மாதமாக இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை உங்களை வெற்றியடையச் செய்யும். நேரத்தை நிர்வகிக்கும் உங்களுடைய திறமை பாராட்டுகளைப் பெறும். உங்கள் நீண்ட கால ஆசைப்படி  ஒரு புதிய வீடு வாங்க நேரிடலாம். சுயநல நோக்கத்துடன் உங்களிடம் வருபவர்களிடம் நீங்கள் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். உங்கள் நிலுவையிலுள்ள வேலைகளைப் பற்றி எதிர்மறையாக யோசிக்காதீர்கள். பணிகளைத் தொடங்குவதற்கு ஆயத்தம் ஆகுங்கள். இந்த மாதத்திற்குள் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவீர்கள். கடுமையான நேரங்களில் உங்களுடைய பகுப்பாய்வு திறன் உங்களுக்கு உதவியாக இருக்கும். மக்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு உங்கள் வழிகாட்டல்களையோ ஆலோசனைகளையோ எதிர்பார்ப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை  அதிக வேலைப்பளு காரணமாக நீங்கள் மந்தமாகக் காணப்படுவீர்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

banner

Leave a Reply

Submit Comment