August Matha Kanni Rasi Palan 2021
கன்னி ராசி 2021 பொதுப்பலன்கள்:
கன்னி ராசி அன்பர்களே ! இளம் வயது கன்னி ராசி அன்பர்கள் மனதில் இந்த மாதம் காதல் மலர்ந்து அது கை கூடும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். உறவில் இணக்கம் கூடும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் வீட்டாரிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வயதில் மூத்த உறுப்பினர்களிடம் நீங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நிதிநிலை இந்த மாதம் படிப்படியாகத் தான் சீராகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். செய்தொழிலில் உங்கள் முயற்சிக்கான முன்னேற்றம் இருக்கும். பொதுவாக கன்னி ராசி அன்பர்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் மத்திம வயதிற்கு மேல் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:
இளம் வயது கன்னி ராசி அன்பர்கள் மனதில் காதல் மலரும். தம்பதிகள் இடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி மனதில் அன்பு, காதல், பாசம் பொங்கிப் பெருகும் மாதமாக இந்த மாதம் இருக்கும். பரஸ்பரம் இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் தருணம் இது. இதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் உள்ள மூத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம் உறவில் இணக்கம் ஏற்படும்.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் பண விஷயங்களில் நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முனைவீர்கள். உங்கள் முயற்சிக்கான பலன் படிப்படியாக நீங்கள் அடைவீர்கள். அதன் மூலம் உங்கள் நிதிநிலை சிறக்கும். நீங்கள் பிறரிடம் வாங்கிய கடன் தொகைகளை திருப்பிச் செலுத்த இது ஏற்ற நேரமாக இருக்கும்.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். அதில் நீங்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். இருப்பீர்கள். நீங்கள் ஊடகங்களில் பணி புரிபவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நேரம் என்று கூறலாம். சக ஊழியர்கள் உங்கள் மேம்பாட்டிற்குத் துணை நிற்பார்கள். அதே சமயத்தில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
உத்தியோக உயர்விற்கு லக்ஷ்மி பூஜை
சுயதொழில்:
சொந்தமாகத் தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்தி வெற்றியும் லாபமும் காண்பார்கள். அதற்கான வாய்ப்பு உங்களை நாடி வரும். அதனை நீங்கள் சரியான முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். தொழில் என்றால் போட்டியாளர்கள் இருக்கத் தான் செய்வார்கள். என்றாலும் இந்த மாதம் நீங்கள் அவர்களை வெற்றி கொள்வீர்கள்.
தொழில் வல்லுநர்கள்:
நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் இந்த மாதம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சில விஷயங்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாகவும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டியிருக்கும். தொழில் புரியும் இடத்தில் உங்கள் பேச்சில் கவனம் தேவை.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்க வாய்ப்பு உள்ளது. மத்திம வயதில் இருப்பவர்கள் மூட்டு வலி, தசை வலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரும். சிறிய அளவிலான உபாதைகள் என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. உங்கள் உடல் நலனைக் காத்துக் கொள்ள அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
மாணவர்கள் :
மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டியது அவசியம். தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் கவனத்திறன் கூடும்.. உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி வெற்றி காண்பார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறை சார்ந்த மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஊக்கம் காரணமாக வெற்றி காண்பார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
14, 16, 21, 23, 24, 28, 30, 31
அசுப நாட்கள்:
10, 11, 26, 27







