சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Simmam Rasi Palan 2021

சிம்மம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களே! குடும்பத்தின் சூழ்நிலை உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சுமுகமான உறவு காணப்படும். உங்கள் நிதிநிலையிலும் அதிர்ஷ்டகரமான சூழல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள், மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
இளம் வயது சிம்ம ராசி அன்பர்கள் மனதில் காதல் மலரும். காதல் உறவில் இனிமை நிறைந்து இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதன் மூலம் இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும்.
குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் இருக்கும். இது ஓரளவு உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம் என்று கூடக் கூற முடியும். உங்கள் பண வரவு கணிசமாக உயரும். உங்கள் நண்பர் மூலம் நீங்கள் வருமானம் பெறுவீர்கள். பங்கு நிறுவனங்களில் முதலீடு செய்ய இந்த மாதம் ஏற்ற காலமாக இருக்கும். வயதில் மூத்த நபர் ஒருவர் உங்களுக்கு நிதிநிலை குறித்த ஆலோசனைகளை வழங்குவார்.
தன வருவாய் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
உத்தியோகம்:
இந்த மாதம் உங்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பாராட்டும் அங்கீகாரமும் நீங்கள் மேலதிகாரிகள் மூலம் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை இந்த மாதம் அதிகரித்துக் காணப்படும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். பணியிடத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் அனுகூலமாக இருக்கும். புதிய பணிகள் உங்களுக்கு வழங்கப்படும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும்.
உத்தியோகத்தில் உயர்பதவி கிடைக்க சூரியன் பூஜை
சுயதொழில்:
சொந்தமாகத் தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் பல புதிய சவால்களை சந்திக்க நேரும். என்றாலும் நீங்கள் அறிவுக் கூர்மையுடன் செயல்பட்டால் வெற்றியை எட்டுவது நிச்சயம். தொழிலில் போட்டியாளர்களை நீங்கள் சந்திக்க நேரும். புதிய யுக்திகளைக் கையாள்வதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
தொழில் வல்லுநர்கள்:
இந்த மாதம் நீங்கள் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அதில் முன்னேற்றமும் காண்பீர்கள். புதியவாடிக்கையாளர்களைப் பெற்று தொழிலில் லாபமும் பெறுவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். தொழில் மூலம் சிறந்த ஆதாயம் காண்பீர்கள். பிறரின் விமர்சனங்களை இலேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் அவதிப்பட்டு வந்த அஜீரணக் கோளாறு உபாதைகள் நீங்கும். உண்ணும் உணவில் கவனம் தேவை. உடற் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம். முறையான உணவை சரியான நேரத்தில் உண்டு உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை
மாணவர்கள்:
பள்ளியில் பயிலும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க வேண்டும். கவனம் சிதறாமல் படிப்பதன் மூலம் முன்னேற்றம் காண இயலும். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள். சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள். படித்து முடித்து வேலை தேடும் மாணவர்கள் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள்.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
சுப நாட்கள்:
10, 14, 16, 21, 23, 24, 28, 30, 31
அசுப நாட்கள்:
8, 9, 11, 12, 26, 27
