கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Kadagam Rasi Palan 2021

கடகம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே ! இந்த மாதம் குடும்ப வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு இருக்கும். உங்கள் பொருளாதார நிலையும் உங்கள் மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில சவாலான தருணங்களை சந்திக்க நேரும். தொழிலில் போட்டிகள் நிறைந்து இருக்கும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
இளம் வயது கடக ராசி காதலர்கள் இந்த மாதம் பெற்றோரின் எதிர்ப்பு அல்லது தலையீட்டை சந்திக்க நேரும். திருமணமான தம்பதிகள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமையாக வாழ்வார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணவரவு கணிசமாக உயரும். செலவுகளை இந்த மாதம் நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு உங்களிடம் பணம் இருக்கும். நீங்கள் இந்த மாதம் பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள்.
நிதிநிலையில் உயர்வு பெற ராகு பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருக்கும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியிடத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். அதனை தீர்ப்பது உங்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கேற்ற பலன் இப்பொழுது கிடைக்காது. நீங்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். உங்கள் தகவல் தொடர்புத் திறனை நீங்கள் இந்த மாதம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
உத்தியோகத்தில் உயர்வு கிடைக்க சனி பூஜை
சுயதொழில்:
சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் அதிக அளவில் போட்டியாளர்களை சந்திக்க நேரும். உங்கள் முயற்சிகளுக்கான பலன் உடனடியாக கிடைக்காது என்றாலும் நீங்கள் மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.வரும் காலங்களில் அதற்கான நற்பலன்களைக் காண்பீர்கள். தொழில் சம்பந்தமான குறும் பயணம் உங்களுக்கு ஆதரவான பலன்களை அளிக்கும்.
தொழில் வல்லுநர்கள்:
கடக ராசி தொழில் வல்லுனர்கள் தாங்கள் தற்பொழுது மேற்கொண்டிருக்கும் பணியில் கவனம் செலுத்தி அதனை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் மற்றும் மனம் தளர்வு காரணமாக உங்கள் முயற்சிகளில் மந்த நிலை காணப்படும். தேவைபட்டால். பிறர் உதவியை நாடி உங்கள் பணிகளை மேற்கொள்ளவது நல்லது.
ஆரோக்கியம்:
இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குணமாகி விட்டது என்று நீங்கள் நினைத்த சில உடல் உபாதைகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்பு உள்ளது என்பதால் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. உடற் பயிற்சியும் தியானமும் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள உதவும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் கடக ராசி மாணவர்கள் மனதை ஒருமுகப் படித்தி படிப்பதில் சற்று சிரமம் காண்பார்கள். கவனக் குறைவும். ஞாபக மறதியும் உங்கள் முன்னேற்றத்தை தடை செய்யும். கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் முன்னேற வாய்ப்பு உண்டு.
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
10, 14, 16, 21, 23, 24, 28, 30, 31
அசுப நாட்கள்:
5, 6, 7, 11, 12, 26, 27
