மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Mithunam Rasi Palan 2021

மிதுனம் ஆகஸ்ட் மாத 2021 பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சுமாராக இருக்கும். குடும்பத்தில் சுமுக உறவை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டியிருக்கும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் இல்லாவிடில் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தின் அமைதி சீர் கெடும். அதிருப்தியும் மகிழ்ச்சியின்மையும் ஏற்படும். நீங்கள் இளம் வயதினர் என்றால் உங்கள் மனதில் காதல் அரும்பு மலரும். இந்தமாதம் பண வரவு சீராக இருக்காது. உங்கள் நிதிநிலை மேம்பட நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சில எதிர்பாராத செலவுகளை நீங்கள் எதிர் கொள்ள நேரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் விற்பனையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருக்கும் அன்பர்கள் கடின உழைப்பின் மூலம் தான் அங்கீகாரம் பெற வேண்டியிருக்கும். மாணவர்கள் விடா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை என்பதற்கிணங்க குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதிக பணிகள் காரணமாக உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதில் கடினம் காணப்படும். இதனால் உறவில் சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரும். மேலும் உங்கள் தாய் வழி உறவுகளிடம் கவனம் தேவை.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
நிதிநிலை:
உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள இந்த மாதம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் பண வரவில் ஏற்ற இறக்க நிலை காணப்படும். வெளிநாட்டுத் தொழில் மூலம் கணிசமான லாபம் காண இயலும். நீங்கள் எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் என்றால் இந்த மாதம் உங்கள் வருமானம் கணிசமாக உயரும். பிற துறையினர்கள் தங்களின் இலக்குகளை எட்டக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சுமாரான பலன்களையே காண்பார்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அதிக அளவில் சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் உங்கள் கடின உழைப்பிற்கான பலன் உடனடியாக கிடைக்காது. பொறுமை காக்க வேண்டும். பணியிடத்தில் நீங்கள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை
சுயதொழில்:
சொந்தத் தொழில் செய்யும் மிதுன ராசி அன்பர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் மூலம் ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். தொழில் சார்ந்த உங்கள் பயணம் வடதிசை நோக்கிய பயணம் என்றால் நீங்கள் சிறந்த வாய்ப்புகளைப் பெற இயலும்.
தொழில் வல்லுநர்கள்:
மிதுன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். கவனமின்மை காரணமாக நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். கடமையே கண்ணாக இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செயல்படுவதன் மூலம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்ற இயலும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மற்றும் பாராட்டைப் பெறவும் இயலும்.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்க வாய்ப்பில்லை. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சோம்பலும் களைப்பும் உங்கள் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் குலைக்கும். மனதில் ஏற்படும் பதட்ட நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சிறிய அளவிலான உடல் நலப் பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் மாணவர்கள் ஓரளவிற்கு படிப்பார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் சில முன்னேற்றங்களைக் காண இயலும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
கல்வியில் வெற்றி கிடைக்க கணேஷ பூஜை
சுப நாட்கள்:
10, 14, 16, 21, 23, 24, 28
அசுப நாட்கள்:
3, 4, 11, 12, 26, 27, 30,31
