மீனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Meenam Rasi Palan 2021

மீனம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:
மீன ராசி அன்பர்களே ! இந்த மாதம் உங்களுக்கு பல நன்மை மிக்க பலன்கள் கிடைக்கும். திருமணமான அன்பர்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காண்பார்கள். கணவன் மனைவிக்கு இடையில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களுக்கு இடையே நல்லிணக்க உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். என்றாலும் உங்கள் கடின முயற்சியும் உழைப்பும் அவசியம் தேவைப்படும். வருமானம் பெருகும். அதே சமயத்தில் வீட்டுத் தேவைக்கான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் நீங்கள் உங்கள் திறமையின் மூலம் சமாளிப்பீர்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் அல்லது வியாபாரம் மேற்கொள்பவர்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். ஆனால் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வது உங்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனை தக்க வைத்துக் கொள்ள உடற் பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
இளம் வயது மீன ராசி காதலர்கள், இந்த மாதம் இனிமையான தருணங்களை எதிர்பார்க்கலாம். திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை மற்றும் உறவில் நல்லிணக்கம் கூடும். கணவன் மனைவி பரஸ்பரம் அன்புடனும் அனுசரணையுடனும் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். தம்பதியினர் மனம் விட்டுப் பேச பூங்கா, சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இந்த மாதம் உங்கள் உறவினர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் கூட அஷ்ட லக்ஷ்மி பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்களுக்கு பண வரவு மற்றும் பணப்புழக்கம் சீராக இருக்கும். நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம் என்று கூடச் சொல்லாம். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் யோசித்து செயல்படுங்கள். புதிய முதலீடு செய்வதற்கான முயற்சிகளை இந்த மாதம் நீங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் நீங்கள் கடன் கொடுத்தால் அது உங்களுக்கு திரும்பக் கிடைப்பது கடினம் என்பதால் பிறருக்கு கடன் அளிக்கும் விஷயத்தில் யோசித்து முடிவெடுங்கள்.
தன நிலையில் உயர்வு பெற சந்திரன் பூஜை
உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டைப் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் இருந்து உரிய ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். புதிய பணிகள் மற்றும் பொறுப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் செயல் திறன் பிறரால் பாராட்டப்படும்.
உத்தியோகத்தில் மேன்மை கிடைக்க ராகு பூஜை
சுயதொழில்:
நீங்கள் சொந்த வியாபாரம் செய்பவர் என்றால் இந்த மாதம் உங்கள் நிர்வாகத் திறமை கூடும். வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பல புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உங்களின் முயற்சி உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். படைப்புத் துறை, இசைத் துறை மற்றும் சினிமாத் துறையில் உள்ளவர்கள் இந்த மாதம் வெற்றி காண்பார்கள்.
தொழில் வல்லுநர்கள்:
மீன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் புதிய முதலீடுகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்கள் முயற்சி மூலம் நீங்கள் வெற்றியும் சிறந்த வருமானமும் காண்பீர்கள். நீங்கள் மருத்துவத் துறையில் தொழில் செய்பவர் என்றால் இந்த மாதம் சிறந்த லாபங்களைக் காண்பீர்கள். தொழில் சார்ந்த பேச்சு வார்த்தைகள் நடக்கும் போது வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இருக்காது. அமைதியான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் மனமும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படும் காரணத்தால் சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.
சிறப்பான உடல் ஆரோக்கியம் பெற வைத்தியநாத பூஜை
மாணவர்கள் :
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதைக் கருத்தில் கொண்டு நீங்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டால் இந்த மாதம் வெற்றி இலக்கை எட்டுவீர்கள். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். படிப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவீர்கள்.
கல்வியில் தடை நீங்கி வெற்றி கிடைக்க கேது பூஜை
சுப நாட்கள்:
10, 14, 16, 21, 23, 28, 30, 31
அசுப நாட்கள்:
11, 12, 24, 25, 26, 27
