Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

April Month Rasi Palan 2019 in Tamil

February 27, 2019 | Total Views : 14,810
Zoom In Zoom Out Print

கன்னி ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Kanni Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

நீங்கள் தனிப்பட்ட முன்னேற்றம் காணும் மாதம் இது. முக்கியமான மாற்றங்கள் சரியான முடிவுகள் எடுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும். உங்கள் புன்னகைத் தோற்றம் உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் நல்ல பலன்களை அளிக்கும். உங்கள் குறிக்கோள்கள் நிறைவேறும். நீங்கள் விரும்பும் வகையில் வளர்ச்சி காண நீங்கள் நேர்த்தியாக பணி புரிவீர்கள். உங்களுடைய பேச்சு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். வேலையில் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் நீங்கள் அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உங்களுடைய நல்ல நடத்தை மற்றும் தாராள மனப்பான்மை இயல்பினால் எல்லோராலும் நீங்கள் அறியப்படுவீர்கள். உங்களுடைய குறிக்கோள்களை நிறைவேற்றக் கடினமாக உழைக்கலாம். உங்கள் உடல்நலம் நடுநிலையாக இருக்கும்; சில சிறிய சிக்கல்களால் நீங்கள் பாதிப்படைய நேரிடலாம்மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

ரிஷபம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Rishabam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் தவறுகள் காரணமாக பதட்டமான மாதமாக இருக்கும். தவறுகள் செய்வதை தவிர்ப்பதன் மூலம் உங்கள் நற்பெயரை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளலாம். உங்களுடைய மனக்கிளர்ச்சியை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். உங்களால் விரைவாக விஷயங்களைச் சாதிக்க முடியும். சமயோஜித முடிவுகளை எடுக்கவும் முடியும். எதையும் நேர்மறையாகப் பார்க்கும் உங்கள் தன்மை மற்றும் அதிக நம்பிக்கையான நிலை சரியான நடவடிக்கைகளைக் கண்டறிய உங்களுக்கு உதவும். தியானம் செய்வது நல்லது. இது வேலையில் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. உங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுடன் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களால் முடியும் என்ற திடமான மன வலிமை மூலம் உங்கள் மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். சூழ்நிலைகளைச் சமாளிக்க நீங்கள் சமார்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

விருச்சிகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Viruchigam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது உங்களுக்கு ஒரு இனிமையான மாதமாக இருக்கும். உங்கள் மதிப்பை நிரூபிக்க சிறந்த வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் எல்லாச் செயல்களையும் முறையாக செய்து முடிப்பீர்கள். பல்வேறு ஆதாரங்களிலிருந்து நீங்கள் பொருளாதார நன்மைகளைப் பெறுவீர்கள். எல்லாக் கடினமான சூழ்நிலைகளிலும் உங்கள் அறிவாற்றல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் முன்னேற்றம் குறித்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் அளிக்கும் ஆதரவாலும் உற்சாகத்தாலும் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சமூக செயல்பாடுகள் உங்களுக்குத் திருப்தி கொடுக்கக்கூடியதாக காணப்படும். தொழில் ரீதியாக ஏற்படும் பயணங்களுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வலிமையையும் ஓய்வையும் அளிக்கக்கூடியதாக இருக்கும் தெய்வத்தை நீங்கள் வணங்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் 

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

தனுசு ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Dhanu Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது உங்களுக்கு வளர்ச்சியான மாதமாக இருக்கும். கொடுக்கப்பட்ட வேலைகளைக் கவனமாக முடிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை மெதுவாக வலுவடையும். மிகுந்த சிரமங்களை அனுபவித்த பின்னர் நீங்கள் அவற்றை இணக்கமாகத் தீர்ப்பீர்கள். வேலையில் தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். வழக்கமான வேலைகளுடன் கூட நீங்கள் கூடுதலான பொறுப்புகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு நேர நெருக்கடியை ஏற்படுத்தும். அலட்சியப் போக்குடன் செயல்படாதீர்கள். உங்கள் பணிகளை அதிக உற்பத்தி திறன் அளிக்க முயற்சி செய்யுங்கள். கடுமையான பணிகளில் உங்களுக்கு ஆதரவாக உங்கள் தனிப்பட்ட திறமைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்திற்கு உணவு கட்டுப்பாட்டை நீங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மீனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Meenam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது சிறப்பான நடவடிக்கைகளுக்கான ஒரு நல்ல நேரம். உங்களுடைய ஈடுபாடு மற்றும் முயற்சி காரணமாக எல்லாவற்றையும் முழுமையாக முடிப்பீர்கள். செயல்களில் நீங்கள் காட்டும் இயல்பான அணுகுமுறை எதிர்கால முன்னேற்றத்திற்கு நன்மை பயக்கும். சமூக வாழ்வில் நீங்கள் முக்கியமான அதிகாரிகளைச் சந்திப்பீர்கள். உங்கள் சுய முடிவுகள் உங்களுக்கு மன அழுத்தம் அல்லது பாதகமான விளைவைக் கொடுக்கலாம். எனவே அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக, உங்களுக்கு இது ஒரு பயனுள்ள காலமாக இருக்கும். உங்கள் வேலைக்காக நீங்கள் அங்கீகாரம் பெறலாம். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்கள் அறிவாற்றல் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பெயர் மற்றும் புகழ் அதிகரிக்கும். உங்கள் உடல்நலம் சாதாரணமாக இருக்கும். மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லதுமேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Thulam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்தபடி நிகழ்வுகள் யாவும் நேர்மறையாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் சுமூகமாகவும் நட்புடனும் இருப்பார்கள். நண்பர்களுடன் உங்களுக்குப் பரஸ்பர புரிதல் இருக்கும். உங்கள் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மற்றவர்கள் உங்களை நன்கு புரிந்துகொள்வார்கள். உங்கள் எண்ணங்கள் இப்போது உங்களுக்கு உண்மையாகவும், சாதகமானதாகவும் இருக்கும். மெதுவான மற்றும் நிலையான வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் பணிகள் நிமித்தமான சில பயணங்கள் இருக்கலாம். உங்கள் சமூக வட்டத்தில் நீங்கள் கலகலப்பாக பழகுவீர்கள். உங்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் குடும்பத்தில் நல்ல சுப நிகழ்வுகள் இருக்கும்.உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். நீங்கள் அதில் கவனம் செலுத்தவும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

சிம்மம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Simha Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒரு நேர்மறையான பலன்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட்ட வாழ்வில் வளர்ச்சி காணப்படும். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். முன்பு நீங்கள் நினைத்தது இப்போது உண்மையாகவும், சாதகமானதாகவும் ஆகிவிடும். மெதுவாக மற்றும் நிலையான வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலக் கட்டத்தில் பணிகள் நிமித்தமான சில பயணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் சமூக வட்டத்தினருடன் நீங்கள் கலகப்பாகப் பழகுவீர்கள். பொருளாதார ஆதாயங்கள் சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களால் நடத்தப்படும் ஆன்மீக நிகழ்ச்சிகள் அல்லது கருத்தரங்குகளில் நீங்கள் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் அண்டை வீட்டாருடன் தொடர்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் சமூக வட்டங்களில் புதிய நபர்களின் தொடர்புகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மிதுனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Mithunam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். எதிலும் மனதை தளர விடாமல் உங்கள் பணிகளை முடிக்க நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கூடுதல் முயற்சியுடன் உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள். தன்னம்பிக்கை இழப்பதன் மூலம் உங்கள் செயல் திறன் குறையும். நீங்கள் எல்லாவற்றையும் அறிந்தாலும் உங்களால் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் போகலாம். உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்துக்கொள்வதற்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். மன அழுத்தம் விரட்டவும் மன அமைதி பெறவும் தியானம் செய்வது உதவியாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மகரம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Makara Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்களை கையாளும் உங்கள் திறன் இந்த காலக் கட்டத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் உதவும் குணம் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு திருப்தி அளிக்கும். இதனால் உங்கள் நன்மதிப்பு கூடும். மன அமைதி வேண்டி நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் தொழில் ரீதியான உரையாடல்கள் உங்களுக்கு பலன்களை பெற்றுத் தரும். பொருளாதாரத்தில் காணப்படும் நிலைத்தன்மை உங்களுக்கு சாதமாக இருக்கும். பொதுவான செலவினங்களுக்கு எந்த தடையும் ஏற்படாது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் மூலம் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் முன்னேற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். எந்த பிரச்சினையும் இருக்காது.மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கடகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Kadagam Rasi Palan in Tamil 2019​​​​​​​

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு ஒரு சோதனைக்  காலம் ஆகும். முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம்; நீங்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.  வாகனத்தைப் பாதுகாப்பாக இயக்கவும் முடிந்தால் நீண்ட பயணங்களை தவிர்க்கவும். சில சூழ்நிலைகள் உங்களைச் சுயநலவாதியாகவும் ரகசியமானவராகவும் உருவாக்கும். மன நிம்மதி பெற நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துறவாட நேரம் செலவிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் நல்ல நட்புடன் இருப்பார்கள். நண்பர்கள் உங்களுடன் பரஸ்பர புரிதலோடு இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மற்றவர்கள் உங்களை  நன்கு புரிந்துகொள்வார்கள். நீங்கள் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் அது உங்களை அவர்களுடன் இணைந்திருக்கச் செய்யும். வீடு அல்லது வாகனம் வாங்க நேரிடலாம். நீங்கள் வாக்கு வாதங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படும். உங்கள் உடல்நலம் சுமாராக இருக்கும் மற்றும் நீங்கள் கண் சம்பந்தமான பிரச்சினைகள்  மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்படுவீர்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மேஷம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Mesham Rasi Palan in Tamil 2019​​​​​​​

பொதுப்பலன்கள்

இது உங்கள் பணிகளை விரைவாக செயலாற்றுவதற்கான ஒரு நல்ல மாதமாகும். உங்கள் நேர்மையான எண்ணங்களால் உங்கள் முக்கிய நோக்கம் நிறைவேறும். அன்றாட  வாழ்வில் சில நிலுவையிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி இருப்பதால் அதற்கு நீங்கள் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் இலக்கு நோக்கிச் செயல்படுவதால் உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்.  நீங்கள் விரும்பிய படி ஒரு புதிய வாகனம் வாங்குவீர்கள். பணம்  சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் அகந்தை இயல்பைத் தவிர்க்க வேண்டும். அது உங்கள் அன்புக்குரியவர்களை காயப்படுத்தலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைக்கும்  அதிர்ஷ்ட வாய்ப்புகளால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதே சமயம், முடிக்கப்படாத பணிகளுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த காலப்பகுதியில் உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கும்பம் ஏப்ரல் மாத ராசி பலன் 2019 - April Matha Kumbam Rasi Palan in Tamil 2019​​​​​​​

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான நேரமாக இருக்கும்.உங்கள் எண்ணம் மற்றும் செயல்கள் யாவும் ஈடேறும். உங்கள் அக மற்றும் புற  நடவடிக்கைகளில் ஒரு உறுதியான முன்னேற்றம் இருக்கும். நீங்கள் ஒவ்வொரு செயலையும்  நேர்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செய்வீர்கள்.  உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பற்றி எல்லாம்  நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதனால் உங்கள் நன்மதிப்பு குறைய வாய்ப்பில்லை. உங்கள் எதிர்கால இலக்குகளில் மிகுந்த ஆர்வத்தோடும் கவனத்தோடும் முனைப்பாக இருங்கள். பொருளாதார விஷயங்களில் மாற்றங்களைப் எதிர்கொள்ள தயங்க வேண்டாம். உங்கள் முயற்சியையும் கடவுளையும் நம்புங்கள். நீங்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிய தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

banner

Leave a Reply

Submit Comment