AstroVed Menu
AstroVed
search
search

2019 May Months Rasi Palan for Thulam

dateMarch 28, 2019

துலாம் ராசி - பொதுப்பலன்கள்

துலாம் ராசி அன்பர்களே! நீங்கள்  இந்த மாதம் சிறிய அளவிலான சில பல பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.என்றாலும் துணிந்தவருக்கு துக்கமில்லை என்பதனை கருத்தில் கொண்டு நீங்கள் துணிவுடன் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். துணிவுடன் பொறுமையும் இருந்தால் நீங்கள் எதையும் வெல்ல முடியும். பண வரவு ஒரு பக்கம் வருகிறது என்றால்  அதற்கு சமமாக இன்னொரு பக்கம் செலவும் ஏற்படும். இதன் காரணமாக நீங்கள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலையை சந்திப்பீர்கள். உங்கள் ஆரோக்கியமும் உங்களுக்கு கவலை தரும் விதத்தில் இருக்கும். 

துலாம் ராசி - காதல் / திருமணம்

அன்பும், அரவணைப்பும் இல் வாழ்க்கையின் இரு கண்கள் என்று உணர்ந்து கொண்ட வகையில் நீங்கள் உங்கள் துணையிடம் அன்பாக அவரை அரவணைத்து செல்வீர்கள். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் நெருக்கத்தை மேலும் அதிகரித்துக்  கொள்வீர்கள். இந்த சூழ்நிலையில் குடும்பத்தில் அமைதியும் திருப்தியும் நிலவும். உறவுகளிடையே நல்லுறவு ஏற்படும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் மாதம் இது. திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் தக்க துணை அமையும்.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குருபூஜை

துலாம் ராசி - நிதி

துலாம் ராசி அன்பர்களின் பொருளாதார நிலை இந்த மாதம் ஸ்திரமாக காணப்படும். முதலீடுகளின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். சுய தேவைக்காகவும், ஆன்மீக காரியங்களுக்காகவும் பணம் செலவு செய்வதற்கான சாத்தியம் உள்ளது. தேவைக்கு அதிகமான செலவுகளுக்கு இடம் கொடுக்காமல் பணத்தை சேமிப்பது நல்லது. கையில் இருக்கும் பணத்தை சொத்தாக மாற்றுவதற்கு நீங்கள் திட்டங்களை அமைத்து அதன்படி செயல்படுவீர்கள்.

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்:செவ்வாய்  பூஜை

துலாம் ராசி - வேலை

இந்த மாதம் நீங்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு அவற்றை எல்லாம் எளிதாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறக் காண்பீர்கள். பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்களைக் களைய உங்கள் ஆலோசனை பிறரால் வரவேற்கப்படும். அதன் மூலம் நீங்கள் சிறந்த ஆலோசகர் என்ற பெயரையும் எடுப்பீர்கள். நீங்களே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யாமல் வேலைகளை பகிர்ந்து அளித்து தருவதன் மூலம் பணிகள் எளிதில் முடிவடையும்.

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:சந்திரன்  பூஜை

துலாம் ராசி - தொழில்

இந்த மாதம் நீங்கள் உங்கள தொழில் வளர்ச்சியை பாதுகாப்பீர்கள். வளர்சிக்காக பாடுபட்டு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயல்வீர்கள்.  அதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். தொழிலில் பிறருடன் போட்டியிட்டு முன்னணி வகிக்க பாடுபடுவீர்கள். 

துலாம் ராசி - தொழில்வல்லுநர்

துலாம் ராசி தொழில் வல்லுனர்களே!  இந்த மாதம் நீங்கள் வெளிப்படையாக,  எந்த ஒளிவு மறைவுமின்றி பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களின் வளர்ச்சி பொறுக்காத சிலர் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைவார்கள். எனவே உங்கள் சுய தேவைக்காக அலுவலகத்தில் பணியாற்றுபவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறாதீர்கள். அலுவலக விஷயமாக நீங்கள் அவர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். 

துலாம் ராசி - ஆரோக்கியம்

வேலைகள் அதிகம் இருந்தாலும் நீங்கள் உணவிற்கும் ஓய்விற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். எனவே சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சரியான முறையில் நீங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்காவிட்டால் உடல் சோர்வுக்கும் அசதிக்கும் நீங்கள் ஆளாவீர்கள்.

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

துலாம் ராசி - மாணவர்கள் 

அயராத உழைப்பும் தளராத முயற்சியும் வெற்றிக்கான ஏணிப்படிகள் ஆகும். நீங்கள் படிப்பை பொறுத்தவரை கடின முயற்சிகள் மூலம் முன்னேறுவீர்கள்.  அதன் மூலம் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தையும் பெறவீர்கள்.

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:  1,2,9,10,11,14,15,16,18,20,21,23,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்:  3,4,5,6,7,8,12,13,17,19,22,27,28.


banner

Leave a Reply