May Monthly Simmam Rasi Palangal 2019 Tamil, May Month Simmam Rasi Palan 2019 Tamil

Solar Eclipse 2023: Get Relief from Eclipse Afflictions Through AstroVed’s Solar Eclipse Remedial Rituals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2019 May Months Rasi Palan for Simmam

March 28, 2019 | Total Views : 1,575
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி - பொதுப்பலன்கள்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் எல்லா விஷயங்களிலும் சாதாரண பலன்களையே காண்பீர்கள். ஆனாலும்  நீங்கள் கடினமான முயற்சிகளை ஒழுக்கத்துடனும்  நேர்மையாகவும்  மேற்கொள்வீர்கள். எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பது சிரமாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் எல்லா முயற்சிகளும், சிறிது காலம் தாழ்த்தியே பலன் தருவதைக் காண்பீர்கள். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படாத வண்ணம் அனுசரித்து நடந்து கொள்வது உங்களுக்கு நல்லது. இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை, அவர்கள் ஆரோக்கியம் குறித்த கவலை இந்த மாதம் உங்கள் மனதில் காணப்படும். இத்தகைய சூழ்நிலை உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். எனவே சிறந்த ஆரோக்கியத்திற்கு சத்தான உணவை, குறிப்பாக கால்சியம் சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்.  

சிம்ம ராசி - காதல் / திருமணம்

அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு இருந்தால் எந்த உறவும் நல்லுறவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். அவர்களின் தேவைகளைப் புரிந்து அவர்களை கவனித்துக் கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துணையிடம் காட்டும் அக்கறை அவர்களை சந்தோஷப்படுத்தும். இதனால் குடும்பத்தில் அமைதியும் திருப்தியும் நிலவக் காண்பீர்கள். திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கக் காத்திருப்பவர்களுக்கு இப்பொழுது காலம் கை கூடி வரும் தருணம்.

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

சிம்ம ராசி - நிதி

இந்த மாதம், உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளத்தக்க வகையில், பொருளாதாரம் காணப்படும்.  உங்கள் உறவினர்களுக்கு நிதி உதவி செய்யும் அளவிற்கு கூட உங்களிடம்  பணம் இருக்கும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். கையில் பணம் புழங்கும் போதே நீங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான முயற்சிகளில் இறங்குங்கள். மன ஆறுதலுக்காக நீங்கள் புனித பயணங்களை மேற்கொள்வதற்கு பணம் செலவு செய்யும் வாய்ப்பு உள்ளது. 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன்  பூஜை

சிம்ம ராசி - வேலை

இந்த மாதம் பணியிடத்தில் உங்கள் தரம் உயரக் காண்பீர்கள். உங்கள் ஊதியமும் அதிகரிக்கக் காண்பீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும். பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.  எல்லாம் உங்களுக்கு சாதகமாக, அனுகூலம் அளிக்கும் வகையில் இருந்தாலும் வேலையில் பதட்ட நிலையை எதிர்கொள்வீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பணிகளை முடிக்க அவர்களும் ஒத்துழைப்பார்கள்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை 

சிம்ம ராசி - தொழில்

எண்ணமும் செயலும் ஒன்றானால் எண்ணிய யாவும் திண்ணமாகும் என்பது உறுதி. தொழிலைப் பொறுத்த வரை சிந்தனை எல்லாம்  லாபம் பற்றியதாகத் தானே இருக்கும். நீங்கள் எண்ணியது ஈடேறிவிட்டால் லாபம் நிச்சயம் கொழிக்கும். உங்கள் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நீங்கள் தொழிலில் புதுமையான யுக்திகளைக் கையாண்டு உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் கூட்டாளிகளும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.  

சிம்ம ராசி - தொழில்வல்லுநர்

சிம்ம ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சீரான மற்றும் மிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். வேகம் விவேகத்தை குறைத்து விடும். எனவே வேகத்தை விடுத்து தெளிவான மனதுடன் சீராகப் பணியாற்றினால் நிச்சயம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பணிகள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக வேகமாக செயல்படாதீர்கள். சற்று சிரமங்கள் இருக்கத் தான் செய்யும். தன்னம்பிக்கையோடு அதனை எதிர்கொள்ளுங்கள். 

சிம்ம ராசி - ஆரோக்கியம்

நீங்கள் இந்த மாதம் சிறிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினையை சந்திப்பீர்கள். மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மனம் இருந்தால் தான் தேகம் ஆரோக்கியமாக இருக்கும். மனமும் உடலும் சரியாக இயங்க போதிய அளவு தூக்கம் மேற்கொள்ள வேண்டும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இரண்டையும் தவிர்க்க நீங்கள் தியானம் மேற்கொள்வீர்கள்.

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

சிம்ம ராசி - மாணவர்கள்

சிம்ம ராசி மாணவர்களே!  இந்த மாதம் நீங்கள் எறும்பைப் போல சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நன்றாகப் படித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். நீங்கள் உங்களுக்கென்று லட்சியங்களை அமைத்துக் கொள்வீர்கள். திறமையுடன் செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து நீங்கள் பெறவதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து  நடப்பது நல்லது. 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 6,7,9,10,11,14,15,16,18,20,21,23,24,25,26,31.
அசுப தினங்கள்: 1,2,3,4,5,8,12,13,17,19,22,27,28,29,30.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos