May Monthly Rishabam Rasi Palangal 2019 Tamil, May month Rishabam Rasi Palan 2019 Tamil

Solar Eclipse 2023: Get Relief from Eclipse Afflictions Through AstroVed’s Solar Eclipse Remedial Rituals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2019 May Month’s Rasi Palan for Rishabam

March 25, 2019 | Total Views : 3,569
Zoom In Zoom Out Print

ரிஷப ராசி - பொதுப்பலன்கள்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் தனித்து நின்று சிங்கம் போல செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரச்சினை நேரத்தில் அவர்கள் உங்களுக்கு கை கொடுத்து தூக்கி விடுவார்கள்.  இருந்த போதிலும் நீங்கள் உங்கள் செயல்களை எச்சரிக்கையுடன் மேற்கொள்வது நல்லது.  பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் தீர ஆராய்ந்து, சாதக பாதகங்களை உணர்ந்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பது நல்லது.  சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது இருந்தால் அந்த எண்ணங்களை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். இந்த மாதம் எந்த விஷயத்திலும் நீங்கள் தனித்து எடுக்கும் முடிவுகளும், குடும்ப உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து எடுக்கும் முடிவுகளும் உங்களுக்கு நல்ல பலன்களையே அளிக்கும்.  

ரிஷப ராசி - காதல் / திருமணம்

இந்த மாதம் உறவு முறைகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று கூற இயலாது. உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்வீர்கள். எந்த விஷயத்திலும் அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்திலும் சரி வெளியிடத்திலும் சரி நீங்கள் உறவை நன்கு பராமரிக்க வேண்டியிருக்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை

ரிஷப ராசி - நிதி

வரவு நூறு  ரூபாய்  எனில் செலவு நூற்றி இருபது ரூபாய் என்பது போல உங்கள் வரவைக் காட்டிலும் செலவு இந்த மாதம் அதிகம் காணப்படும். எனவே உங்கள் செலவுகளை எதிர்கொள்ள சேமிப்பு பணத்தை நீங்கள் நாட வேண்டியிருக்கும். உங்களுக்கு வர வேண்டிய தொகை ஏதேனும் இருந்தால் அதனை வசூல் செய்ய நீங்கள் இந்த மாதம் கடினப் பிரயாசை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீக காரியங்களுக்கு நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.  

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை

ரிஷப ராசி - வேலை

பணி மற்றும் பணியிடதைப்  பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் தாமதமாகும் காரணத்தால் எரிச்சலடைவீர்கள். இதே மன உணர்வோடு பணியாற்றுவதால் பணியில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. உங்கள் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த முடியாமல் வாக்கு வாதங்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. மௌனமே எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து என்பதால் நீங்கள் மௌனமாக இருந்து விடுவது நல்லது. பணியில் ஆக்கப்பூர்வமாக உங்களை ஈடுபடுத்திக் கொள்வது சிறந்தது. 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை

ரிஷப ராசி - தொழில்

தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள்,  வாடிக்கையாளர்களுக்கு பணியை முடித்து அளித்து விட்டு, அதோடு தங்கள் கடமை முடிந்தது என்று இருக்காமல் தொடர்ந்து அவர்களுடன் நல்லுறவை பாராமரிக்க முயல வேண்டும். முன்னேற்றம் காண்பதற்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். திடமான உறுதியான மன ஆற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலம் சூழ்நிலையை சிறப்பாக கையாளலாம். இந்த மாதம் உங்களுக்கு தொழிலில் லாபமும் இன்றி நஷ்டமும் இன்றி நடுநிலையாக இருக்கும். 

ரிஷப ராசி - தொழில்வல்லுநர்

நீங்கள் தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொண்டு அதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்த எண்ணங்கள் இந்த மாதம் உங்களுக்கு செயல் வடிவம் பெறும். ஆனால் அதிலும் நீங்கள் சில சிக்கல்களை கையாள வேண்டியிருக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு என்றால் உங்கள் வருமானமும் உயரத்தானே செய்யும். அந்த வகையில் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதன் மூலம் நீங்கள் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கலாம். 

ரிஷப ராசி - ஆரோக்கியம்

இந்த மாதம் நீங்கள் சாதாரண ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும், உடல் வலிமை பெறவும் நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழ வகைகள் உண்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

ரிஷப ராசி - மாணவர்கள் 

கல்வி பயில்வதை விட எந்த கல்வி மேற்கொள்வது என்று முடிவெடுப்பது தான் முக்கியம். அந்த வகையில் முடிவெடுக்க வேண்டிய இந்த தருணத்தில் உங்கள் மனதில் குழப்பம் காணப்படும். உங்களுக்கு சோதனையான நேரமாக இந்த மாதம் அமையும். ஆலோசனை கூற உங்களைச்  சுற்றி நாலு பேர் இருந்தாலும் நீங்கள் சுயமாக முடிவெடுத்து முன்னேறுவது நல்லது. எனவே சாதக பாதகங்களை ஆராய்ந்து சரியான முடிவை நீங்கள் எடுப்பது சிறந்தது. 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:  1,2,6,7,9,10,11,14,15,16,18,20,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்:  3,4,5,8,12,13,17,19,21,22,23,27,28.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos