AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

2019 May Month’s Rasi Palan for Kanni

dateMarch 25, 2019

கன்னி ராசி - பொதுப்பலன்கள்

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் அவசரகதியில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் அது இயலாது. உங்களுக்கு வெற்றி படிப்படியாகத் தான் கிடைக்கும். தொழிலிலும் நீங்கள் கடுமையாக முயற்சி செய்து  தான் முன்னேற்றம் காண முயல்வீர்கள்.  உங்களில் ஒரு சிலர் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் பின்னடைவுகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் உங்கள் முயற்சிகளை மேற்க்கொள்வீர்கள். ஆனால் உங்கள் அனைத்து முயற்சிகளும் பலனளிக்கும் என்று கூற இயலாது. நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நெருக்ககமானவர்கள் உதவிகளைப் புரிவார்கள். நீங்கள் பணி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள் செய்யாமலும் பிறருடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமலும் இருப்பது நல்லது. உங்கள் உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டையும் பராமரிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள இயலும். 

கன்னி ராசி - காதல் / திருமணம்

பொறுத்தார் பூமி ஆள்வார்; பொறுமை கடலினும் பெரிது என்பதையெல்லாம் இந்த மாதம் கவனத்தில் கொண்டு நீங்கள் செயல்படுவீர்கள். அதிக பொறுப்புகளும் ஒய்வில்லாத நிலையும் உங்களை சோர்வடையச் செய்யும். அது உங்கள் மன அமைதியை குலைக்கும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சி வசப்படாமல்  உண்மையைப் பேசுவதன் மூலம் குடும்ப அமைதியை காக்க இயலும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு தக்க துணை அமையும்.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை

கன்னி ராசி - நிதி

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு இது நெருக்கடியான மாதமாகத் தான் இருக்கும். கையில் இருக்கும் பணம் செலவுக்கு போதியதாக இல்லாத காரணத்தால் நீங்கள் உங்கள் சேமிப்பில் கை வைக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் அதை வைத்து நீங்கள் சமாளிக்கப் பார்ப்பீர்கள். பிறரிடமிருந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை

கன்னி ராசி - வேலை

பணியில் உங்கள் முன்னேற்றம் மெதுவாகவும் சீராகவும் இருக்கக் காண்பீர்கள். நீங்கள் ஆக்கப்ப்பூர்வமாக பணியாற்றுவதன் மூலம் முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும் காணலாம். சக பணியாளர்களுடன் உணர்ச்சி வசப்படுவது அல்லது தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன்  பூஜை 

கன்னி ராசி - தொழில்

உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களின் திருப்தியே உங்களின் தாரக மந்திரமாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்களை திருப்திபடுத்தினால் தான் நீங்கள் தொழிலில் முன்னேற்றம் காண முடியும். உங்கள் தொழிலை நீங்கள் விளம்பரம் மூலமாக வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லலாம். கூட்டாளிகளின் நிர்வாகத்திறன் காரணமாக உங்கள் இலக்குகளில் பாதகம் வராமல் கவனித்துக் கொள்ளுங்கள். 

கன்னி ராசி -  தொழில்வல்லுநர்

கன்னி ராசி தொழில் வல்லுனர்களே! நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த தொழில் வாய்ப்பினைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் தலைமைத்துவ திறனை வெளிப்படுத்தி பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவீர்கள்.

கன்னி ராசி - ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமாக இருக்க மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மன ஆரோக்கியத்திற்கு மனதை எந்த காரணத்திற்காகவும் குழப்பிக் கொள்ளாமல் சலனமின்றி அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவு முறையில் கவனமாக  இருக்க வேண்டும். ஒய்வு மற்றும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

கன்னி ராசி - மாணவர்கள்

மாணவர்கள்  இந்த மாதம் படிப்பில் பின் தங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சக மாணவர்களோடு கருத்து வேறுபடும் இடங்களில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பேசிக் கொண்டிராமல் படிப்பில் கவனம் செலுத்துவதும் அமைதி காப்பதும் நல்லது.தன்னம்பிக்கையுடன் கவனமாக படித்தால் முன்னேற்றம் காணலாம்.  

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 1,2,7,9,10,11,14,15,16,18,20,21,23,24,25,26,29,30.
அசுப தினங்கள்: 3,4,5,6,8,12,13,17,19,22,27,28,31.


banner

Leave a Reply