AstroVed Menu
AstroVed
search
search

2019 May Month’s Rasi Palan for Kadagam

dateMarch 26, 2019

கடக ராசி - பொதுப்பலன்கள்

கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் அள்ளிக் கொட்டும் மாதம் ஆகும். வெற்றி மீது வெற்றி உங்களைத் தேடி நாடி ஓடி வரும். எடுத்த காரியங்கள் யாவும் சித்திக்கும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறக் காண்பீர்கள். சுற்றம் நட்பு என எல்லாரிடத்திலும் பெயரும் புகழும் பெறுவீர்கள். வெற்றி மீது வெற்றி என்றால் அதைக் கொண்டாடுவது மனித இயல்பு தானே. அதிலும் முயற்சிகள் அதிகமின்றி வெற்றி கிடைத்தால் யாருக்கு தான் சந்தோசம் இருக்காது. கரும்பு தின்னக் கூலியும் வேண்டுமா? நீங்களும் உங்கள் வெற்றியை உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வதன் மூலமாகக் கொண்டாடுவீர்கள். நேரம் காலம் கூடி வரும் போது நாளும் பொழுதும் நன்றாகவே இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரின் ஆதரவும் கிட்டும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். மனதில் அமைதி குடி கொள்ளும். வெற்றியும் அதனால்  கிடைக்கும் மகிழ்ச்சியிலும்  திளைத்து மகிழ்வீர்கள். 

கடக ராசி - காதல் / திருமணம்

குடும்பம் என்றால் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் துணைக்கு ஆதரவாக இருந்து அவர்களை மகிழ்விப்பீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து பிறகு முடிவுகளை எடுப்பீர்கள். உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு  தங்களுக்கு பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இந்த மாதம் கிடைக்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை

கடக ராசி - நிதி

பொதுவாகவே இந்த மாதம் உங்களுக்கு சந்தோசம் தரும் மாதம் அதிலும் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக விளங்கி உங்கள் சந்தோஷத்தை இரட்டிப்பாக ஆக்கித் தரும். நல்ல நிதிநிலைமை காரணமாக நீங்கள் பண விஷயங்களை சுறுசுறுப்புடன் மேற்கொள்வீர்கள். உங்கள் தேவைகள் நிறைவேறுவது மட்டுமன்றி பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள். இது உங்கள் வங்கியிருப்பை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமின்றி நீங்கள் முதலீடு செய்த தொகை மூலம் நிதி ஆதாயம் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பம் அல்லாத பொது நல விஷயங்களுக்காகவும் நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சுக்கிரன் பூஜை

கடக ராசி - வேலை

நீங்கள் ஊக்கமும் உற்சாகமுமாக பணிகளைச் செய்வீர்கள். நேர்மறை எண்ணத்துடன் பணியாற்றுவதனால் உங்களுக்கு கிடைக்கும் பலன்களும் நன்மை தரும் பலன்களாகவே இருக்கும்.  மேலதிகாரிகளால் வழங்கப்படும் பணிகளை நீங்கள் வெற்றிகரமாக செய்து  முடிப்பீர்கள். நீங்கள் புதுமையாக சிந்திப்பீர்கள். புத்துணர்ச்சி தரும் எண்ணங்கள் காரணமாக நீங்கள் வகுக்கும் திட்டங்கள் யாவும் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தரும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய்  பூஜை

கடக ராசி - தொழில்

கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் தொழில் வளர்ச்சி எதிர் பார்த்த அளவிற்கு இருக்கும்.  உங்கள் கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து தொழிலில் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் உங்கள் வளர்ச்சியை நீங்கள் மேலும் மேம்படுத்தலாம். உங்களிடம் பணி புரியும் ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் அவர்களின் ஆதரவை எளிதாகப் பெறுவதற்கு வழி வகுக்கும். வேலையும் குறித்த நேரத்திற்குள் முடியும்.

கடக ராசி - தொழில்வல்லுநர்

தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். இருக்கும் தொழிலில் முன்னேற்றம் அல்லது புதிய வாய்ப்பு என இரண்டில் நீங்கள் எதைப்  பெற விரும்பினாலும் இந்த மாதம் அதற்கான வாய்ப்புகளை நீங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்வீர்கள். சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கௌரவமும் பெறும் நேரம் இது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையாகவும் சிறப்பாகவும்  பணியாற்றி குறித்த நேரத்தில் பணிகளை முடித்து முன்னேற்றம் காண்பதற்கு இந்த மாதம் ஏதுவான மாதம் ஆகும். கவனமுடன் பணியாற்றுங்கள். வெற்றி உங்களை நிச்சயமாக நாடி வரும். 

கடக ராசி - ஆரோக்கியம்

எத்தனை செல்வங்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்தப் பயனும் இல்லை. ஆரோக்கியமே சிறந்த செல்வம். எனவே உங்கள் ஆரோக்கியத்தைக் கண்ணும் கருத்துமாக காத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாய் இருக்க நீங்கள் சரியான நேரத்தில் முறையான உணவு, அதாவது சத்து மிக்க உணவு உண்ண வேண்டும். காய்கறி மற்றும் பழங்கள் என இயற்கை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கு அடுத்தபடியாக ஆரோக்கியத்திற்கு அவசியமான தேவை,  சரியான தூக்கம். உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள முறையான தூக்கம் மேற்கொள்ளுங்கள்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை  

கடக ராசி - மாணவர்கள் 

இந்த மாதம் நீங்கள் கல்வியில் முன்னேற்றம் காண ஏதுவான மாதமாக இருக்கும். எனவே கல்விக்கு முக்கியத்துவம் அளித்து  முழு கவனம் செலுத்தி, கூடுதல் நேரம் செலவழித்து திட்டமிட்டு நீங்கள் படித்தால், உங்கள் திறமை மேம்படும். அதன் மூலம் வெற்றி கிட்டும். தற்போது நீங்கள் சிறப்பாக  கல்வி பயில்வதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். திறமையை வளர்த்துக் கொண்டு முன்னனேறும் வழியில் முந்திச் செல்லுங்கள். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் 

சுப தினங்கள்: 1,2,6,7,9,10,11,14,15,16,18,20,21,23,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்: 3,4,5,8,12,13,17,19,22,27,28.


banner

Leave a Reply