மகர ராசி - பொதுப்பலன்கள்
மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் கற்பனை மற்றும் கனவுகள் கண்டு கொண்டு இராமல் யதார்த்தமாக செயல்பட வேண்டிய நேரம் இது. எந்த விஷயத்திலும் யோசித்து செயல்பட வேண்டும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறு என்று இருக்கும் சூழ்நிலை காணப்படும். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட நினைப்பீர்கள். ஆனால் நடை முறையில் அதற்கான சூழ்நிலை அமையாது. இவற்றின் காரணமாக உங்களுக்கு பதட்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எல்லாம் எதிர்மறை பலன்கள் தானா என்று மனம் தளராதீர்கள். உங்களுக்கு இந்த மாதம் நன்மை தீமை என இரண்டு பலன்களும் கலந்து காணப்படும். கடினமாக முயற்சி செய்தால் முன்னேற முடியும். வெற்றி காண முடியும். உங்களின் நேர்மையான முயற்சி மூலம் உங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். அலுவலகத்தில் பணிகள் அதிகம் இருந்த போதிலும் நீங்கள் உங்கள் வாக்கு வன்மையால் அவற்றையெல்லாம் சாதுரியமாகக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மகர ராசி - காதல் / திருமணம்
மகர ராசி காதலர்களுக்கு காதல் கை கூட சிறிது காலம் காத்திருக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதனை கருத்தில் கொண்டு பொறுமையாகக் காத்திருங்கள். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். என்ற போதும் நீங்கள் சில சமயம் மனம் திறந்து பழகுவீர்கள். சில சமயம் தனிமையில் மூழ்கி விடுவீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் உங்கள் மனம் விரும்பும் வரன் வரும் வரை பொறுமை காக்க வேண்டியிருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மகர ராசி - நிதி
இந்த மாதம் அதிக பண வரவும் இன்றி பணப்பற்றாக்குறையுமின்றி சாதாரண நிலை இருக்கும். நீங்கள் ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்ய எண்ணுவீர்கள். உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய மாதம் இது. பணத்தை சிக்கனப்படுத்தி எதிர்காலத்திற்காக சேமிப்பது நல்லது. கையில் பணம் இருக்கிறதே என்று நண்பர்கள் அறிந்தவர்கள் என்று உதவி செய்தீர்கள் என்றால் பண விஷயத்தில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரும்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜை
மகர ராசி - வேலை
பணியிடச் சூழல் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இல்லாமல் சாதாரணமாக காணப்படும். நீங்கள் உங்கள் பணிகளை சக பணியாளர்களுக்கு பிரித்து அளிப்பதன் மூலம் உங்கள் பணி இலகுவாகும். பணியிடத்தில் பிரச்சினைகளும் சிக்கல்களும் காணப்படும் நேரம் இது. சிக்கல்களை களைய நீங்கள் ஆலோசனைகளை அளிப்பீர்கள். சிறந்த ஆலோசகர் என்ற பெயரும் எடுப்பீர்கள். நீங்கள் பல பணிகளை எளிதாகக் கையாள்வீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய் பூஜை
மகர ராசி - தொழில்
மகர ராசி வியாபாரிகள் அல்லது தொழில் செய்பவர்கள் இந்த மாதம் உங்கள் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து முடிக்க முயல்வீர்கள். சிறிது தாமதம் ஏற்பட்டாலும் எடுத்துக் கொண்ட லட்சியங்களை கண்டிப்பாக முடிப்பீர்கள். தொழில் விசயத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கூட்டாளிகளிடம் பணிகளை ஒப்படைத்து விட்டு கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள். அவர்கள் ஏதாவது சாக்கு போக்கு கூறி உங்கள் பணிகளை முடிக்காமல் தாமதப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களைக் கண்காணியுங்கள்.
மகர ராசி - தொழில்வல்லுநர்
கவனமுடன் பணியாற்றினால் பல பிரச்சினைகளை தீர்க்கலாம். முடிக்கப்படாமல் உள்ள பணிகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடை நிலை ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் பணி மேலும் பாதிக்கப்படும். உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக சூழ்நிலையைக் கையாளுங்கள். அதன் மூலம் உங்கள் பணிகளை அதிக ஏமாற்றமின்றி முடிக்க ஏதுவாக இருக்கும். கூடுதல் பணிகளை முடிக்க நீங்கள் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வீர்கள்.
மகர ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலமும் பாதிக்கப்படும். மன அழுத்தம் ஏற்பட்டால் மூட்டுவலி, இரத்த அழுத்தம், போன்ற பல நோய்கள் உங்களை அணுகும். எனவே மன அழுத்தம் இல்லாமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகள் போன்ற சத்தான சிறந்த உணவை உண்ணுங்கள். தினந்தோறும் தியானம் மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
மகர ராசி - மாணவர்கள்
மகர ராசி மாணவர்களே! மூத்தோர் சொல் வார்த்தை கேட்டு நடப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு அவர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். அறிவுரை மற்றும் உங்கள் சொந்த அனுபவம் மூலம் உங்களுக்குள் ஏற்படும் சிந்தனை மற்றும் எண்ணங்கள் உதவி கொண்டு நீங்கள் உங்கள் மேல்படிப்பிற்கான திட்டங்களை வகுப்பீர்கள். யதார்த்தத்துடன் செயல்பட்டு வெற்றியும் காண்பீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,2,3,6,7,9,10,11,15,16,18,20,21,23,24,25,26,29,30,31.
அசுப தினங்கள்: 4,5,8,12,13,14,17,19,22,27,28.
Leave a Reply