மீனம் ராசி - பொதுப்பலன்
இந்த மாதத்தின் முதல் பகுதியில் வளர்ச்சி மிதமாக காணப்படும். உங்கள் செயல்களில் வெற்றி காண நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். கடினமான சூழ்நிலை காணப்பட்டாலும் கடவுளின் அனுக்கிரகம் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதி வெற்றிகரமாக காணப்படும். நீங்கள் சவால்களை சமாளித்து அனைத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். உங்கள் வளர்ச்சியும் மேம்படும். என்றாலும் நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
மீனம் ராசி - காதல் / திருமணம்
இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் திருமணம் குறித்து முடிவுகள் எடுக்கலாம். இந்த மாத பிற்பகுதியில் உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்பட்டாலும் எந்த விதமான காரணமும் இன்றி வாக்குவாதங்கள் ஏற்பட்டு உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். உறவில் அமைதியை பராமரிக்க அகந்தை உணர்வுடன் கூடிய இத்தகைய வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : சுக்கிர ஹோமம்
மீனம் ராசி - நிதிநிலைமை
இந்த மாதம் தேவையற்ற தவிர்க்க முடியாத செலவுகள் உங்கள் பணப்புழக்கத்தை பாதிக்கும்.எனவே உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி பண இழப்பைத் தவிர்க்க வேண்டும். அதிக செலவுகள் உங்களை கடனாளியாக ஆக்கும். மாதத்தின் பிற்பகுதியில் பண வரவு சிறப்பாக காணப்படும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி பூஜை
மீனம் ராசி - வேலை
மாதத்தின் பிற்பகுதியில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அவை உற்சாகமளிப்பதாகவும் வளர்ச்சி தருவதாகவும் காணப்படும். ஆரம்பத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சில சிக்கல்கள் காணப்படும். அதனால் நீங்கள் வேலை மாற்றம் விரும்புவீர்கள்.
மீனம் ராசி - தொழில்
மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் புதிய தொழிலில் இறங்குவீர்கள். ஆரம்பத்தில் போட்டியாளர்கள் கடுமையாக காணப்படுவார்கள். இதனால் உங்கள் லாபம் பாதிக்கப்படும். சிறப்பக திட்டமிட்டு புதிய யுத்திகளைக் கையாள்வதன் மூலம் நீங்கள் லாபம் பெறலாம்.
மீனம் ராசி - தொழில் வல்லுநர்கள்
இந்த மாதத்தின் இரண்டாம் பகுதி தொழில் வல்லுநர்களுக்கு அனுகூலமான நேரம். உங்கள் கடின உழைப்பிற்காக நீங்கள் ஊக்கத் தொகை மற்றும் பதவி உயர்வு காண்பீர்கள். என்றாலும் மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களை எதிர்கொள்வீர்கள்.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சி பெற பரிகாரம் : ஹனுமான் ஹோமம்
மீனம் ராசி - ஆரோக்கியம்
மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் குறைந்து காணப்படும். நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். அதனால் உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். இதனால் பதட்டம் மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ஆறுதல் பெறலாம்.மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : வைத்தியநாத பூஜை
மீனம் ராசி - மாணவர்கள்
மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் சிறந்த மதிப்பெண் பெறுவீர்கள். கவனமின்மை காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அக்கறையெடுத்துப் படித்தால் நீங்கள் சிறப்பாக செயலாற்ற இயலும். இதன் மூலம் நீங்கள் உங்கள் பொறுப்புகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் - சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்:
1,3,7,8,11,12,13,14,18,19,21,22,23,26,27,28,30
அசுப தினங்கள்:
2,4,5,6,9,10,15,16,17,20,24,25,29,31