தனுசு ராசி - பொதுப்பலன்
இம்மாத முதல் பகுதியில் சவால்கள் நிறைந்து காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் வெற்றி காண நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். நீங்கள் சிறப்பாக இருப்பது போல உணர்ந்தாலும் சில உள்ளார்ந்த பயங்களின் பாதிப்பு இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் இந்தச் சூழ்நிலை மாறும்.
தனுசு ராசி - காதல் / திருமணம்
இந்த மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் துணையுடனான தொடர்பு மகிழ்ச் சிகரமாக காணப்படாது. திருமணம் போன்ற முக்கிய நிகழ்சிகளுக்கு இந்த மாதம் உகந்ததல்ல. அகந்தை உணர்வின் காரணமாக மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாதத்தின் பிற்பகுதியில் நல்லிணக்கம் ஏற்பட்டு உறவு முறை சிறப்பாக இருக்கும்.
திருமண நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : சுக்கிர ஹோமம்தனுசு ராசி - நிதிநிலைமை
ஆரம்பத்தில் உங்கள் நிதி வளர்ச்சி மிதமாக காணப்படும். உங்கள் செலவுகள் அதிகரித்தாலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதிநிலைமையில் வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் முதலீடு செய்வதற்கும் சேமிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை பெறுவீர்கள். அதன் மூலம் மாத இறுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சத்திய நாராயண பூஜைதனுசு ராசி - வேலை
உங்கள் துடிப்பான செயலாற்றல் மூலம் நீங்கள் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விலகி இருக்கலாம். நன்மதிப்பு பெறுவதற்கு திறமையாக பணியாற்ற முயல வேண்டும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சுமூகமான உறவு காணப்படும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் சிறப்பாக பணியாற்றி தரமான பணிகளை வழங்குவீர்கள்.
தனுசு ராசி - தொழில்
மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் தொழில் திட்டங்களில் வெற்றி கிடைக்காது. தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் ஸ்திரத்தன்மை காணவும் லாபம் பெறவும் நீங்கள் ஆராய்ந்து திட்டமிடல் வேண்டும். இதனால் மாதத்தின் இரண்டாம் பகுதியில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசி - தொழில் வல்லுநர்கள்
மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் பணியில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதிய பணிகளை மேற்கொள்வீர்கள். திட்டமிட்டு செயலாற்றினால் வெற்றி காணலாம். இந்த மாத இறுதியில் நீங்கள் நற்பெயர் பெறுவீர்கள்
வேலை மற்றும் தொழிலில் சிறந்து விளங்க பரிகாரம் : ஹனுமான் ஹோமம்தனுசு ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். எனவே சிறிய ஆரோக்கிய பிரச்சினைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குள் இருக்கும் வலிமையை ஊக்குவிக்க இது சிறந்த மாதம். இலை வகையை சார்ந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்பட நல்ல தூக்கம் மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ தன்வந்தரி ஹோமம்தனுசு ராசி - மாணவர்கள்
மாணவர்களுக்கு இந்த மாதம் மிதமான பலன்கள் காணப்படும். நீங்கள் எந்தக் காரணமும் இன்றி உங்கள் படிப்பை தள்ளிப் போடுவீர்கள். நீங்கள் பாடங்களை நன்றாக புரிந்து கொண்டிருந்தாலும் விரும்பிய மதிப்பெண் பெற இயலாது. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக வெளியிடங்களுக்கு செல்ல விரும்புவீர்கள். இதனால் உங்கள் செலவு அதிகரிக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள்:
1,3,4,6,7,8,11,12,13,14,18,19,21,22,23,28,30
அசுப தினங்கள்:
2,5,9,10,15,16,17,20,24,25,26,27,29,31
Tags: 2018 Dhanusu Rasi Palan March March Month Dhanusu Palan 2018 Matha Rasi Palan 2018 Dhanusu Rasi Palangal 2018 March Dhanusu Tamil March Month Dhanusu Palan 2018 2018 Dhanusu Rasi Palan March Matha Rasi Palan 2018 Dhanusu Rasi Palangal 2018 March Dhanusu
Leave a Reply