கும்பம் ராசி - பொதுப்பலன்கள்
மாதத்தின் முதற் பாதி பகுதியில் நீங்கள் வெற்றி பெற முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். முடிவுகள் எடுப்பதில் குழப்பம் காணப்படும். எனவே இந்த மாதம் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மாதத்தின் முதற் பாதி பகுதியில் நீங்கள் உணர்ச்சிவசப்பட நேரலாம். இதனால் பணிகளை முடிப்பது கடினமாக காணப்படும்.என்றாலும் மாதத்தின் பின் பாதி பகுதியில் ஏற்றமான போக்கு காணப்படும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
கும்பம் ராசி - காதல்/ திருமணம்
காதலைப் பொறுத்தவரை உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நீங்கள் இந்த மாதத்தில் நடத்த வேண்டாம். உங்கள் துணையுடன் சுமூகமான உறவு காணப்படாது. உறவில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் காண நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம்: துர்கா ஹோமம்கும்பம் ராசி - நிதிநிலைமை
இந்த மாத ஆரம்பம் சிறிது போராட்டமாக இருக்கும். வரவுடன் செலவும் சேர்ந்து வரும்.அதனால் உங்களால் சேமிக்க இயலாது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதனால் கடன் வாங்க நேரிடும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத பண வரவு காணப்படும். இதன் மூலம் மாத இறுதியில் அதிக பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி பூஜைகும்பம் ராசி - வேலை
பணியில் வளர்ச்சி காண மாதத்தின் முதற் பகுதி சாதகமாக இல்லை. பணிகளும் அதிகமாக காணப்படும். என்றாலும் இந்த மாதத்தின் இரண்டாவது பகுதியில் நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கும்பம் ராசி - தொழில்
தொழிலைப் பொறுத்த வரை உங்களுக்கு இந்த மாதத்தில் பலன்கள் கலந்து காணப்படும். மாதத்தின் இரண்டாவது பகுதியில் உங்களின் முயற்சி மற்றும் புதிய தொழில் யுக்திகள் மூலம் நீங்கள் தொழிலில் லாபம் பெறுவீர்கள். என்றாலும் மாதத்தின் முதற் பகுதியில் நீங்கள் உங்கள் தொழில் வட்டாரத்தில் கடுமையான போட்டியாளர்களை எதிர் கொள்ள நேரும்.
கும்பம் ராசி - தொழில் வல்லுநர்கள்
தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட புதிய பணிகளை மேற்கொள்வதில் கடினம் காணப்படும். அதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவார்கள். ஆனால் மாதத்தின் பின் பகு தியில் நற்பெயரும் கீர்த்தியும் பெறுவார்கள்.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சி மேம்பட பரிகாரம் : கேது ஹோமம்கும்பம் ராசி - ஆரோக்கியம்
மாதத்தின் முதற் பாதியில் ஆரோக்கியம் மிதமாக காணப்படும். கண்களில் பிரச்சினை மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தக்க நேரத்தில் உணவை உண்டு ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு தகுந்த மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை ஸ்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் ஆரோக்கியத்தில் மேம்பாடு காணப்படும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைகும்பம் ராசி - மாணவர்கள்
மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் கவனம் இழப்பீர்கள். குறைந்த மதிப்பெண் பெறுவீர்கள். எனவே கல்வியில் வெற்றி பெற நீங்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். என்றாலும் மாதத்தின் பின் பகுதியில் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள் :
1,3,4,6,7,8,11,12,13,14,18,19,21,22,23,26,27,28
அசுப தினங்கள் :
2,5,9,10,15,16,17,20,24,25,29,30,31
Tags: 2018 Kumba Rasi Palan March March Month Kumba Palan 2018 Matha Rasi Palan 2018 Kumba Tamil Rasi Palangal 2018 March Kumba Tamil March Month Kumba Palan 2018 2018 Kumba Rasi Palan March Matha Rasi Palan 2018 Kumba Rasi Palangal 2018 March Kumba
Leave a Reply