கன்னி ராசி - பொதுப்பலன்கள்
இந்த மாதம் நீங்கள் வெற்றி காண பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நன்மை தீமை இரண்டுக்கும் இடையே சமநிலையோடு இருக்க வேண்டும். முறையாக திட்டமிட்டு நம்பிக்கையுடன் செயல்பட்டால் மாதத்தின் முதல் பகுதியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது. சிக்கல்கள் காணப்படும். உங்கள் முடிவுகள் தவறாகலாம். மாதத்தின் இரண்டாம் பகுதியில் தேவையில்லாத பயணங்கள் காணப்படும்.
கன்னி ராசி - காதல் / திருமணம்
மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் துணையுடன் சுமூகமான உறவு காணப்படும். உறவில் நல்ல புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் காணப்படும். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ள உகந்த நேரம். என்றாலும், மாதத்தின் இரண்டாம் பகுதியில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லுறவு மேம்பட பரிகாரம் : சந்திர ஹோமம்
கன்னி ராசி - நிதி நிலைமை
மாதத்தின் முதல் பகுதியில் பண வரவு மகிழ்ச்சிகரமாக காணப்படும். பயனுள்ள முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயத்தில் மாதத்தின் முதல் பகுதியின் தொடக்கத்தில் அதிக பணம் செலவு செய்வதும் முக்கிய முடிவுகள் எடுப்பதும் சிறந்ததல்ல. மாதத்தின் இரண்டாம் பகுதியில் திடீர் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை உங்களால் திறமையாக நிர்வகிக்க இயலாது.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி குபேர பூஜை
கன்னி ராசி - வேலை
மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் பணி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். என்றாலும் பணி மாற்றத்திற்கு இது உகந்த நேரம் அல்ல. மாதத்தின் இரண்டாம் பகுதியில் இதற்கு நேர்மாறாக உங்கள் பணி வளர்ச்சி குறைந்து காணப்படும். இதனால் சாதகமற்ற விளைவுகள் ஏற்படும்.
கன்னி ராசி - தொழில்
மொத்தத்தில் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கான சூழ்நிலை சிறப்பாக காணப்படாது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் தொழிலில் கடுமையான போட்டி காணப்படும். தொழில் யுத்திகளை மாற்றுவதன் மூலம் தொழிலில் லாபமும் வெற்றியும் ஏற்படலாம். தற்போதைய தொழில் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சாதகமான மற்றும் வெற்றிகரமான விளைவுகள் கிடைக்கும்.
கன்னி ராசி - தொழில் வல்லுநர்கள்
உங்கள் தொழில் வளர்ச்சிக்கு இது உகந்த மாதம். பணியில் ஸ்திரத்தன்மை காண உங்கள் திறமையான பணியின் மூலம் நீங்கள் மேலதிகாரிகளின் மனதைக் கவர்வீர்கள். உங்கள் கருத்தை உங்கள் மேலதிகாரிகளிடம் கூற இது சரியான தருணம். மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் பொறுமையை சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.
வேலை மற்றும் தொழில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி ஹோமம்
கன்னி ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் கண்களில் பிரச்சினை மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் கவலைக்குள்ளாவீர்கள். இதனால் உங்கள் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படும். தியானம் மேற்கொள்வது மற்றும் இசை கேட்பதன் மூலம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : தன்வந்தரி ஹோமம்
கன்னி ராசி - மாணவர்கள்
உங்கள் சக மாணவர்களிடையே காணப்படும் கடுமையான போட்டி காரணமாக இந்த மாதத்தின் முதல் பகுதியில் நீங்கள் உங்கள் கற்றல் திறமைகளை மேம்படுத்த விரும்புவீர்கள். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்களின் உணர் திறன் சக்தி குறையும். அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்:
1,3,4,6,7,8,11,12,13,14,18,19,22,23,26,27,28,30
அசுப தினங்கள்:
2,5,9,10,15,16,17,20,21,24,25,29,31
2018 March Month's Rasi Palan for Mesham
February 19, 2018
|
Total Views :
2,054



Leave a Reply