விருச்சிக ராசியினர் உணர்ச்சிகரமானவர்கள், உள்ளுணர்வு கொண்டவர்கள், ஆராய்ச்சி மனப்பான்மையுடையவர்கள், கவர்ச்சியானவர்கள், கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்கள், உணர்ச்சி மிகுந்தவர்கள் மற்றும் ஈர்க்கக்கூடியவர்கள். இவர்களுக்கு நல்ல நினைவாற்றலும் உண்டு. அவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்கள், ஆர்வமுள்ளவர்கள், பிறர் விஷயங்களில் தலையிடுபவர்கள், ரகசியமாக இருப்பவர்கள் அவர்களின் சிறந்த குணங்கள் காந்த ஈர்ப்பு தன்மையும் புரிந்துகொள்ளும் தன்மையும் ஆகும். எதிர்மறையான அம்சங்கள் — அதிக உரிமை கொண்டாடுபவர்கள் மற்றும் பழிவாங்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.
சனிக்கிழமைகளில், துர்கா சப்த ஸ்லோகி பாராயணம் செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமும், படிப்பில் கவனமும் கிடைக்கும். ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், விநாயகப் பெருமானின் அபிஷேகத்திற்கு பால் வாங்கி அளிப்பது, வேலை / தொழில் வாழ்க்கையில் சிறந்த பலன்களை தரும். சனிக்கிழமைகளில் ஹனுமானுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும். சுப்ரஹ்மண்ய புஜங்கம் தினமும் அல்லது குறைந்தது செவ்வாய்க்கிழமைகளில் பாராயணம் செய்தால் நல்ல ஆரோக்கியமும், செழிப்பும் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் பிரச்சினைகளை தடுக்க தினமும் விநாயக புஜங்கம் சொல்ல வேண்டும். வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சொல்லுவது, நிதி மற்றும் தொழிலில் சிறந்த பலன்களை தரும்.
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்
உத்தியோகத்தில் மேன்மை பெற : கேது பூஜை
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
கல்வியில் சிறந்து விளங்க : துர்கா பூஜை
திருமண உறவில் நல்லிணக்கம் காண: சனி பூஜை
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : முருகர் பூஜை
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர்
சாதகமற்ற மாதங்கள் : மார்ச், ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர், டிசம்பர்