Rama Navami Ceremonies & Grand Ram Lalla Statue Installation On Ram’s Birthday Powertime JOIN NOW
விருச்சிக ராசி பலன் 2024 | Scorpio Horoscope 2024 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
scorpio

விருச்சிகம் வருட ராசி பலன் 2024

இந்த வருடம் ஆன்மீக நாட்டம் மிகுந்து காணப்படும். உங்களுக்கு குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். அதிகமாக ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த வருடம் தாமதமான திருமணம் மற்றும் தாமதமான குழந்தை பாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் உன்னதமான வருடமாக திகழப்போகிறது. ஆன்மீக தொண்டுகளையும் தானங்களையும் இந்த வருடம் செய்வது உங்கள் பொருளாதார நிலை மற்றும் தொழிலில் நல்ல ஏற்றத்தை கொடுக்கும். சுயமாக தொழில் செய்யும் கட்டிட துறை பொறியாளர்கள் புதியதாக தொழில் தொடங்கி புதிய உயரத்தை அடைவார்கள். உயர்கல்வி சம்மந்தப்பட்ட தொழிலில் போட்டிகள் உருவாகும் நிலைவரும். உங்கள் தொழிலில் கவனமாக இருப்பது நலம். புதியதாக தன முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. எதிர் கால நலன் கருதி உங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரித்துக் கொள்வது சிறப்பு. சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கப்பெற்று தொழில் ரீதியில் ஆதாயம் பெறுவார்கள் ஆயினும் அவர்களிடம் பண விசயத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். வெளிநாட்டு பயணங்களில் ஆதாயத்தையும், நல்ல ஐஸ்வர்யங்களையும் ஏற்படுத்தி கொடுக்கும் ஆண்டாக இந்த வருடம் அமையப்போகிறது.

வருட ராசி பலன் 2024

விருச்சிகம்: குணாதிசயங்கள்

விருச்சிக ராசியினர் உணர்ச்சி, உள்ளுணர்வு மிக்கவர்கள். ஆராய்ச்சி செய்யும் இயல்புடையவர்கள். கவர்ச்சியானவர்கள், ஒழுக்கமானவர்கள், உணர்ச்சி மிக்கவர்கள், நல்ல நினைவாற்றல் கொண்டவர்கள். அவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்கள், ஆர்வமுள்ளவர்கள், தலையீடு செய்பவர்கள், இரகசியமானவர்கள், மேலும் அவர்கள் மிகைப்படுத்திக் பேசுவார்கள். காந்தம் போன்ற கவர்ச்சியும் புரிந்துணர்வும் அவர்களது பலங்கள். உடமைத்தன்மை மற்றும் பகை உணர்வு அவர்களது பலவீனங்கள். ராசி பலன்கள் 2020 - விருச்சிகம்

பரிகாரங்கள்:

  • செவ்வாய்க்கிழமை தோறும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பது எதிலும் வெற்றியை கொடுக்கும்.
  • முருகன் கோவிலுக்கு வருபவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.
  • பேராசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவது வாழ்வில் ஏற்றத்தை கொடுக்கும்.
  • இளவயதுடைய பெண்களுக்கு துவரம் பருப்பால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை தானமாக கொடுக்கவும்.
  • செவ்வாய் கிழமைகளில் சிவப்பு வண்ண ஆடை அணிவது யோகத்தை வரவழைக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் ஏற்பட செவ்வாய் பூஜை

சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC