ராசி பலன் - துலாம்
பொதுப்பலன்கள்: துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் சில பின்னடைவுகள் இருந்தாலும் மிகச் சிறப்பான பலன்கள் கிட்டும். கர்மகாரகன் என்று அழைக்கப்படும் சனி உங்கள் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்கள் தொழில் மற்றும் பணியில் முன்னேற்றங்கள் பலவும் காணப்படும். உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சனியுடன் குரு இணைந்து இருக்கும் காலம் வரை வீட்டில் எந்த வித பிரச்சினைகளும் இருக்காது. குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சில மாதங்கள் சஞ்சரிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் உங்கள் நான்காம் வீட்டில் சனி மட்டும் இருக்கும் காரணத்தால் நீங்கள் வீட்டில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். உங்கள் தாய் வழி உறவு மூலம் நீங்கள் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள். வேலை காரணமாக நீங்கள் சில காலம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க நேரும். உங்கள் தாயின் உடல் நிலையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் முதன்மையானதாக இருக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கும். இதன் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் உருவாகும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கோபம் கொள்ளாதீர்கள்.ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் செவ்வாய் உங்கள் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் பணியிடத்தில் சில பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ராகு உங்கள் வீட்டிற்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் சில தேவையற்ற செலவுகள் ஏற்படும் மற்றும் மறைந்து உள்ள சில விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வரும். உங்களுக்கு ஆன்மீக சூட்சுமங்கள் மற்றும் அமானுஷ்ய விஷயங்கள் அறிந்து கொள்வதில் உங்களுக்கு நாட்டம் இருக்கும். மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்கள் நன்மை தரும் காலமாக அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இந்த வருடத்தின் இரண்டாம் பகுதியில் குரு ஐந்தாம் வீட்டில் அமரும் நேரம் சில துலாம் ராசி அன்பர்களுக்கு திருமணம் நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்
வேலை: பணி செய்யும் துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் சிறந்த நற்பலன்கள் கிட்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் செவ்வாய் உங்கள் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது நீங்கள் உற்சாகத்துடன் பணிகளை செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் உங்கள் பெயரும் புகழும் ஓங்கும். பணியிடத்தில் சில சமயம் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். எனவே கவனமாகச் செயல்பட வேண்டும். சனி உங்கள் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏப்ரல் 2021 முதல் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடாகிய கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் பணியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். சிலருக்கு வேலை மாற்றம் கூட ஏற்படும். புதிய வேலை உங்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும். நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால் பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். வருடத்தின் முதல் நான்கு மாதங்கள் தொழிலில் சில நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள் அல்லது வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண : நவகிரக ஹோமம்
காதல் / திருமணம்: காதல் செய்யும் துலாம் ராசி அன்பர்கள் இந்த வருடம் நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்த பலன்களைக் காண்பார்கள். இந்த வருடம் சனி உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதன் காரணமாக நீங்கள் பணி காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாடு காரணமாகவோ குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் தாயின் உடல் நிலை குறித்த உங்கள் கவலை காரணமாக அவருடன் நீங்கள் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சிறிய பிரச்சினைகள் ஏற்பட வாய்புள்ளது.குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு இருப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டின் பராமரிப்பு மற்றும் மராமத்து பணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவீர்கள். உங்கள் உடன் பிறப்புக்களுடன் உறவு சீராக இருக்கும். செவ்வாய் உங்கள் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சமயம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சூடான சச்சரவுகள் ஏற்படும். எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சமயம், அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் உங்கள் கணவன் வழி உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டங்கள் திருமணம் நடக்க ஏதுவான தருணங்கள்
திருமண உறவில் நல்லிணக்கம் காண :
சுக்ரா ஹோமம்
நிதிநிலைமை: துலாம் ராசி அன்பர்களின் நிதிநிலை வருட ஆரம்பத்தில் சிறப்பாக இருக்கும். மார்ச், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உங்களுக்கு அதிக அதிர்ஷ்டமான காலக்கட்டமாக இருக்கும். வருட ஆரம்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அதற்கான செலவுகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். செப்டம்பர் மாதம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். இதனால் உங்களுக்கு பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பணத்தை கண்ணும் கருத்துமாக கையாளுங்கள். தரும காரியங்களைச் செய்ய முயலுங்கள். எட்டாம் வீட்டில் இருக்கும் ராகு திடீர் பண லாபம் மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்துவார்.உங்கள் வாழ்க்கைத் துணை உறவு மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வகையிலும் உங்களுக்கு பணம் கிட்டும். நஷ்டம் ஏதாவது ஏற்பட்டாலும் அதற்காக மனம் தளரவிடாதீர்கள். தாய்வழி உறவினர் மூலமும் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். பண வரவு மற்றும் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். எனவே உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
நிதிநிலை மேம்பட : குபேர ஹோமம்
மாணவர்கள்: துலாம் ராசி மாணவர்கள் இந்த வருடம் சிறந்த முறையில் கல்வி பயின்று முன்னேற்றம் காண்பார்கள். குறிப்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டங்களில் அதிர்ஷ்டம் கூடிவரும். கல்வி பயில்வதற்காக வெளிநாடு செல்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் கடினமாக உழைத்துப் படித்தால் தான் வெற்றி பெற முடியும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டங்களில் நீங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்போடு கல்வி பயின்று ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். மேற் படிப்பிற்காக வெளிநாடு செல்ல இந்த வருடம் உங்களுக்கு மிகவும் சாதகமான வருடம். சிறந்த பலன்களைக் காண்பீர்கள்.
கல்வியில் வெற்றிபெற : ஹயக்ரீவ ஹோமம்
ஆரோக்கியம்: துலாம் ராசி அன்பர்களின் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எட்டாம் வீட்டில் ராகு மற்றும் இரண்டாம் வீட்டில் கேது உங்கள் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். பழைய மீந்து போன உணவு, குளிர் சாதனப் பெட்டியில் வைத்த உணவு போன்றவற்றை உண்ணாதீர்கள். பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதம் சில சிறிய உடல் நல உபாதைகள் வந்து போகும். கும்பத்தில் இருக்கும் செவ்வாய் உங்களுக்கு ஆரோக்கியம் குறித்த கவனத்தை அளிக்கும்.
ஆரோக்கியம் மேம்பட : தன்வந்தரி ஹோமம்