Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
துலா ராசி பலன் 2024 | Libra Horoscope 2024 in Tamil | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
libra

துலாம் வருட ராசி பலன் 2024

திருமணத்தில் தடை தாமதத்தை சந்தித்தவர்களுக்கு திருமணத்தையும் குழந்தை பிறப்பில் தாமதத்தை சந்தித்தவர்களுக்கு புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தி கொடுக்கும் உன்னத வருடமாக இந்த வருடம் இருக்க போகிறது. உங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்திற்குள் அமைதியும் சமாதானமும் நிலவினாலும் வருட ஆரம்பத்தில் அண்டை வீட்டில் வசிக்கும் நபர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். வெளி நாட்டில் உத்தியோகத்தில் உள்ள உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும், நீங்கள் கடுமையாக உழைத்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக முடித்து வெற்றி காண்பதுடன் சக பணியாளர்களிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். தனியார் துறையில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் சக பணியாளர்களுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று இணைந்து பணியாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய வீடு மற்றும் விவசாய நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது பிற்காலத்தில் அதிக லாபத்தை கொடுக்கும்.

வருட ராசி பலன் 2024

துலாம்: குணாதிசயங்கள்

துலாம் ராசியினர் வாழ்வில் விரைவான முன்னேற்றத்திற்கான லட்சியம் கொண்டவர்கள். இவர்கள் தலைசிறந்தவர்கள். மிகச் சரியான உள்ளுணர்வு, புத்திசாலித்தனமான அறிவாற்றல், விவேகத்துடன் முடிவெடுக்கும் திறன், மற்றும் இனிமையான தன்மை கொண்டவர்கள். இவர்கள் வியாபாரத்தில் ஆர்வம் கொண்டவர்கள். அல்லது சட்ட வல்லுனர்களாக ஆவார்கள்.

பரிகாரங்கள்:

  • வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜை அறையில் உள்ள காமதேனு விக்ரகத்திற்கு வேகவைத்த மொச்சையை நிவேதனமாக வைத்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபட்டு வருவதன் மூலம் தன நிலையில் ஏற்றம் உண்டாகும்.
  • மஹா லஷ்மி தேவியை வேண்டி வெள்ளிக்கிழமைகளில் காலை விரதம் இருந்து வருவதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
  • வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை ஆடைகளை அணிந்து வருவது வெற்றியை கொடுக்கும்.
  • உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் சின்னதாக சிங்க உருவ சிலையையோ அல்லது படத்தையோ வைத்து தினமும் பார்த்து வந்தால் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அனைத்து வளங்களையும் பெற அஷ்டலட்சுமி பூஜை

சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, மே, ஜூன், ஜூலை, அக்டோபர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC