இன்றைய மிதுனம் ராசி பலன் – வேலை & பண பலன் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் வருட ராசி பலன் 2026

மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டு சமூக உறவுகள் அதிகரித்து மனதில் மகிழ்ச்சியையும் நன்மைகளையும் தரும் காலமாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பான மற்றும் சந்தோஷமான தொடக்கத்தை பெறும். ஆண்டின் ஆரம்பத்தில் சில எழுச்சிகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம்; ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் பண வரவு சிறப்பாக இருக்கும் மற்றும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் நல்ல பலன்களை கொடுக்கும். தந்தை மற்றும் இளைய சகோதரர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவற்றை சமாளிக்க முடியும். இது கடுமையாக உழைக்க வேண்டிய ஆண்டாக இருக்கும்; இதனால் சமூகத்தில் மதிப்பும், நல்ல பலன்களும் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் சிறு உடல் சிக்கல்கள் இருப்பினும், தெய்வீக அருளால் அதனை எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் புதிய முயற்சிகளில் எதிர்பாராத செலவுகள் மற்றும் தடைகள் வர வாய்ப்பு உள்ளது.

வருட ராசி பலன் 2026

மிதுனம்: குணாதிசயங்கள்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் பல திறமைகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் பொதுவாக வணிக நுட்பத்தில் திறமைசாலிகள். சிறந்த தொடர்புத்திறன், புதுமையான சிந்தனை மற்றும் வித்தியாசமான அறிவாற்றல் இவர்களிடம் காணப்படும். இருப்பினும்,இவர்கள் தீர்மானமான முடிவை எடுக்கத் தயங்குவார்கள். சில நேரங்களில் அவசரமாகச் செயல்பட்டு, வேகமாக முடிவெடுக்கிறதால் சில தவறுகள் நிகழலாம்; ஆனால் அந்த தவறுகளை சரி செய்யும் திறனும் இவர்களில் இருக்கும். இவர்கள் யதார்த்தமான முறையில் செயல்பட்டு, தங்களது குறிக்கோளை அடைவதில் உறுதியாக முனைந்திருப்பவர்கள்.

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரும். திங்கட்கிழமைகளில், விநாயகர் அபிஷேகத்திற்கு பால் வழங்குவது வீட்டில் நல்லிணக்கத்தையும் மன அமைதியையும் ஏற்படுத்தும். விநாயகருக்கு தீபம் ஏற்றி, திங்கட்கிழமைகளில் விநாயகர் ஸ்லோகங்களை உச்சரிப்பது தடைகளைத் தாண்ட உதவும். தினமும் அல்லது குறைந்தபட்சம் புதன்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை

கல்வியில் சிறந்து விளங்க : பக்த ஹனுமான் ஹோமம்

திருமண உறவில் நல்லிணக்கம் காண : பிருகஸ்பதி பூஜை

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சத்யநாராயனர் பூஜை

சாதகமான மாதங்கள் : மார்ச், ஏப்ரல், மே, செப்டம்பர், நவம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC