இன்றைய மேஷம் ராசி பலன் – அதிர்ஷ்ட வாய்ப்பு | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் வருட ராசி பலன் 2026

இந்த ஆண்டின் தொடக்க காலத்தில், நீங்கள் ஆன்மீக மற்றும் மத நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டலாம். குடும்ப மகிழ்ச்சிக்கும் குலதெய்வ கோயில்கள் போன்ற தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கும் சிறந்த நேரமாக இருக்கும். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் மூதாதையர் சொத்துக்களை பெறுவதற்கும் இது உகந்த காலம். ஆனால், இந்த வருடத்தில் சில முயற்சிகளில் தடைகள் எதிர்கொள்ளப்படலாம். இருப்பினும், கடைசியில் வெற்றி உறுதி. குடும்பத்தில் மற்றும் தொழிலில் அதிக செலவுகள் ஏற்படக்கூடும். சில மனக்கசப்புகள் குடும்பத்தில் நிகழலாம். மேலும் கடன் சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது, மற்றும் குழந்தையின் உடல்நிலையில் குறைபாடுகள் ஏற்படலாம். வருட நடுப்பகுதியில், கிரகசஞ்சாரங்களின் தாக்கத்தால் தூக்கக்குறைவும், தேவையற்ற கவலையும் அதிகரிக்கும். ஆண்டின் இறுதிக்காலத்தில் மனச்சோர்வு மற்றும் குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும்.

வருட ராசி பலன் 2026

மேஷம்: குணாதிசயங்கள்

மேஷ ராசியினர் பிறப்பால் தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள். எந்தக் குழுவிலும் முன்னிலையில் இருந்து வழிநடத்த விரும்புவார்கள். இவர்களுக்கு பிறரின் கீழ் பணியாற்றுவது சிரமமாக இருக்கும். துணிவு, ஆற்றல், உற்சாகம் இவர்களின் முக்கிய குணங்கள். விளையாட்டு, சாகசம் போன்ற உடல் உழைப்பான செயல்களில் ஆர்வம் கொள்வார்கள். வேகமான முடிவுகளை எடுப்பதிலும், திடீர் நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மருத்துவம், தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகளில் ஆர்வம் காணப்படலாம். அவர்களின் தீவிரமான இயல்பு சில சமயம் சீக்கிரம் கோபப்படுத்தும். சுயநம்பிக்கை மற்றும் உறுதியான மனப்பாங்கு இவர்களுக்கு அதிகம். புதிய முயற்சிகளை தொடங்கும் ஆர்வம் இவர்களை எப்போதும் முன்னோக்கி நகர்த்தும்.இவர்களின் எதிர்மறை பக்கமாக, அவர்கள் சீற்றமுள்ளவர்களாகவும், அவசரமாகச் செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது நிதி நிலை மற்றும் தொழில்வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தையும் வளத்தையும் வழங்கும். திங்கட்கிழமைகளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது மனதில் தெளிவை ஏற்படுத்தி, சரியான முடிவுகளை எடுக்க உதவும். புதன்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவருக்கு பச்சை ஏலக்காயால் செய்யப்பட்ட மாலை சமர்ப்பித்தால், கல்வியில் சிறப்பான வெற்றியை அடையலாம். மாலை நேரங்களில், இயன்றவரை, தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபம் செய்வது நன்மைகள் பல அளிக்கும். சுப மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, அக்டோபர் அசுப மாதங்கள் : மார்ச், ஏப்ரல்,மே, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

உத்தியோகத்தில் / தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை

கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை

திருமண உறவில் நல்லிணக்கம் காண : மகா விஷ்ணு பூஜை

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : பக்த ஹனுமான் ஹோமம்

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, அக்டோபர்

சாதகமற்ற மாதங்கள் : மார்ச், ஏப்ரல்,மே, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC