x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
capricorn

மகரம் வருட ராசி பலன் 2020

2020 ஆம் வருடத்தின் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள், மகர ராசி அன்பர்களுக்கு சிறந்த பல நன்மைகளைச் செய்யும் காலமாக விளங்கும். இந்த நேரத்தில், வேலை, தொழில், சொத்து வாங்கல் விற்றல், எதிர்பாராத லாபங்கள், பூர்வீக சொத்து கிடைத்தல் போன்ற பலவும் வெற்றிகரமாக அமையும். உங்கள் துணிவு பெருகும் தன்னலமற்ற சேவையிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். பொதுவாக, உங்கள் ஆரோக்கியமும், வருடம் முழுவதும் நன்றாகவே இருக்கும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், தாராளமான வருமானம் கிடைக்கும்; இருந்தாலும் தேவையற்ற செலவுகள், ஊக வர்த்தகம் போன்றவற்றைத் தவிர்க்கவும். இதேபோல, நிச்சயமற்ற விஷயங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.
வருட முற்பகுதி காலங்களான ஜனவரி முதல் மே வரை, திருமண முயற்சி, வேலை, தொழில், அதில் கூட்டாளிகளுடனான உறவு போன்றவற்றில் மந்த நிலையே இருக்கும். வீடு, நிலம் விற்பனைத் தரகர்கள், தொழிலில் கடினமான சூழ்நிலையையே சந்திப்பார்கள்.
ஆயினும், இந்த வருடம், பொதுவாக நல்ல உடல்நிலை, வருமானம், பணியில் முன்னேற்றம் ஆகியவற்றை அளிக்கும். ஆனால் விருந்து, கேளிக்கைகள் போன்றவற்றுக்காக தேவையற்ற செலவுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.

வருட ராசி பலன் 2020

மகரம்: குணாதிசயங்கள்

மகர ராசியினர் தன்னம்பிக்கை மிக்கவர்கள். சிறப்பு நிகழ்சிகளை அமைக்கும் திறம் பெற்றவர்கள். சகிப்புத்தன்மை, பொறுமை, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள். சவாலான செயல்களை மேற்கொண்டு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அவற்றை முடிப்பதை அவர்கள் முக்கியமாகக் கருதுவார்கள்.

பரிகாரங்கள்:

நல்ல ஆரோக்கியம், செல்வம், வளம் வேண்டி சத்யநாராயண பூஜை செய்யவும்.
வாழ்க்கைத் தரம் உயர, பகவான் பைரவரையும், சக்தி தேவியையும் வழிபடவும்.
மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகவும்; விலங்குகளிடம் அன்பு செலுத்தவும்.
‘ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்.
‘சர்வேஸம் ஸ்வஸ்திர் பவது, சர்வேஸம் சாந்திர் பவது, சர்வேஸம் பூர்ணம் பவது, சர்வேஸம் மங்களம் பவது’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

கோ பூஜை

சாதகமான மாதங்கள் : மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

ராசி பலன் - மகரம்

பொதுப்பலன்கள்: 2020 ஆம் வருடத்தின் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள், மகர ராசி அன்பர்களுக்கு சிறந்த பல நன்மைகளைச் செய்யும் காலமாக விளங்கும். இந்த நேரத்தில், வேலை, தொழில், சொத்து வாங்கல் விற்றல், எதிர்பாராத லாபங்கள், பூர்வீக சொத்து கிடைத்தல் போன்ற பலவும் வெற்றிகரமாக அமையும். உங்கள் துணிவு பெருகும் தன்னலமற்ற சேவையிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். பொதுவாக, உங்கள் ஆரோக்கியமும், வருடம் முழுவதும் நன்றாகவே இருக்கும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், தாராளமான வருமானம் கிடைக்கும்; இருந்தாலும் தேவையற்ற செலவுகள், ஊக வர்த்தகம் போன்றவற்றைத் தவிர்க்கவும். இதேபோல, நிச்சயமற்ற விஷயங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.
வருட முற்பகுதி காலங்களான ஜனவரி முதல் மே வரை, திருமண முயற்சி, வேலை, தொழில், அதில் கூட்டாளிகளுடனான உறவு போன்றவற்றில் மந்த நிலையே இருக்கும். வீடு, நிலம் விற்பனைத் தரகர்கள், தொழிலில் கடினமான சூழ்நிலையையே சந்திப்பார்கள்.
ஆயினும், இந்த வருடம், பொதுவாக நல்ல உடல்நிலை, வருமானம், பணியில் முன்னேற்றம் ஆகியவற்றை அளிக்கும். ஆனால் விருந்து, கேளிக்கைகள் போன்றவற்றுக்காக தேவையற்ற செலவுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.

வேலை: ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நீங்கள் கடமை உணர்வுடனும், கட்டுப்பாட்டுடனும் பணியாற்றுவீர்கள். இது பிறரது பாராட்டைப் பெறும் அதே நேரம், உங்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, சாதகமான இட மாற்றம் போன்றவையும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், தொழில் முன்னேற்றமும், கூட்டாளிகளுக்குள் நல்ல இணக்கமும் உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் துணிவுடன் செயல்பட்டு, வெற்றிகளை ஈட்டுவீர்கள்.

வேலை, தொழில் மேம்பட சத்ய நாராயண பூஜை

காதல் / திருமணம்: ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாத காலத்தில், வாழ்க்கைத் துணை தேடும் முயற்சி வெற்றி பெறும்; சில உறவுகள் திருமணமாக நிறைவு பெறும். ஆனால் ஆண்டின் மற்ற நேரங்களில் இது போன்ற முயற்சிகள் பலன் தராமல் போகலாம். துணைகளுக்கிடையே காதல் பரிமாற்றமும், சுமாராகத்தான் இருக்கும். துணையிடம் அன்பையும், பரிவையும் நன்கு வெளிபடுத்துவது, நெருக்கத்தை ஏற்படுத்தும்.

உறவுகள் சிறக்க பார்வதி சௌந்தர்ய ஹோமம்

நிதிநிலைமை: கடைசிக் காலாண்டில் பொருளாதார நிலை சிறந்து விளங்கும். பலவகையிலும், பணம் வந்து சேரும். செலவுகளும் குறையும். இவை நிதிநிலையில் ஸ்திரத்தன்மையை அளிக்கும். ஆனால் வருடத்தின் ஆரம்ப காலங்கள், இதற்கு நேர்மாறாக இருக்கக் கூடும். அப்பொழுது, வேலை நிலை திருப்தி தராமல் இருப்பதற்கும், செலவுகள் அதிகரிப்பதற்கும், சேமிப்புகள் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

நிதிநிலை ஏற்றம் பெற குபேர யந்திரம்

மாணவர்கள்: மகர ராசி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, கவனச் சிதறல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவர்கள், தங்கள் முழு ஆற்றலுடன் கற்க முடியாமல் போகலாம். எனவே, கல்வியில் இலக்குகளை எட்ட, முழு கவனம் செலுத்திப் படிப்பது அவசியம். கல்வி கற்க வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு விசா கிடைப்பதிலும், ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதிலும், தடைகள் ஏற்படலாம். ஆனால், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

கல்வியில் வெற்றி பெற சரஸ்வதி ஹோமம்

ஆரோக்கியம்: இந்த ஆண்டு நீங்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பீர்கள். நோய்கள், உடற்கோளாறுகள் போன்றவற்றால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் சிலரும், இப்பொழுது குணமடைய வாய்ப்புள்ளது. புதிதாக வியாதிகள் எதுவும் உங்களைத் தாக்கும் சாத்தியமும் இப்பொழுது இல்லை எனலாம். எனினும், உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகள், சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள் போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்கவும். இது, குறிப்பாக, கடைசிக் காலாண்டில், நீங்கள் நோய் வாய்ப்படாமல் பாதுகாக்கும்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க காயத்ரி ஹோமம்

பரிகாரங்கள்:

நல்ல ஆரோக்கியம், செல்வம், வளம் வேண்டி சத்யநாராயண பூஜை செய்யவும்.
வாழ்க்கைத் தரம் உயர, பகவான் பைரவரையும், சக்தி தேவியையும் வழிபடவும்.
மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகவும்; விலங்குகளிடம் அன்பு செலுத்தவும்.
‘ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்.
‘சர்வேஸம் ஸ்வஸ்திர் பவது, சர்வேஸம் சாந்திர் பவது, சர்வேஸம் பூர்ணம் பவது, சர்வேஸம் மங்களம் பவது’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

கோ பூஜை

சாதகமான மாதங்கள் : மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC