Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
மகர ராசி பலன் 2024 | Capricorn Horoscope 2024 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
capricorn

மகரம் வருட ராசி பலன் 2024

இந்த வருடம் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் தங்களுடைய விவசாயத்திற்கு உரிய அனைத்து அரசாங்க உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் மேன்மை உண்டாகும். எதிரிகள் கட்டுக்குள் வருவார்கள். சொத்து சம்மந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டாகும். வயது மூத்தவர்கள் மற்றும் குழந்தைகள் உடனான உறவுநிலை பலப்படும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும். உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வருடம் உங்கள் பொருளாதார நிலையும் சமூக அந்தஸ்தும் ஏற்றம் காணும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. இந்த வருடம் வீட்டு பராமரிப்பு பணிகளுக்காக அதிக செலவு செய்வீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் யோகமும் உண்டு. தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதியதாக கல்லூரிக் கல்வி முடித்தவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் உண்டாகும். இந்த வருடம் தனியார் துறையில் பணிபுரியும் தொழில் வல்லுனர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அரசு துறைகளில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்கள் உங்கள் கடமைகளை உணர்ந்து பணியாற்றுவதன் மூலம் மேல் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள்.

வருட ராசி பலன் 2024

மகரம்: குணாதிசயங்கள்

மகர ராசியினர் தன்னம்பிக்கை மிக்கவர்கள். சிறப்பு நிகழ்சிகளை அமைக்கும் திறம் பெற்றவர்கள். சகிப்புத்தன்மை, பொறுமை, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள். சவாலான செயல்களை மேற்கொண்டு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அவற்றை முடிப்பதை அவர்கள் முக்கியமாகக் கருதுவார்கள்.

பரிகாரங்கள்:

  • சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றிவர தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • ஏழரை சனியின் பாதிப்பிலிருந்து விடுபட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து ஒரே ஒரு வேளை மட்டும் பழங்களை உண்டுவர வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
  • கருப்புசாமிக் கோவிலில் சனிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுத்துவர துண்பங்கள் நீங்கும்.
  • கருப்பண்ணசாமிக் கோவிலில் தீபமேற்ற விளக்கெண்ணை தானமாக கொடுத்துவர புகழ் கிடைக்கும்.
  • வயதான ஏழைகளுக்கு சனிக்கிழமைகளில் அன்னதானம் கொடுத்துவர வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.
  • ஏழை மாற்றுதிறனாளிகளுக்கு தன உதவி செய்துவர சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

வாழ்வில் சகல வசதிவாய்ப்புகளும் ஏற்பட சனி பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC