Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

லக்கினத்தை வைத்து ஒருவருக்கு எப்போது யோக காலம் வரும்?

November 24, 2020 | Total Views : 2,867
Zoom In Zoom Out Print

மனித வாழ்க்கையில் ஜோதிடக் கலை ஒரு வழிகாட்டும் கலையாக விளங்குகிறது. இந்த ஜோதிடக் கலையின் வாயிலாக கணிக்கப்படுகின்ற ஜாதகமே ஒருவரது ஜனனம் முதல் மரணம் வரை பேசப்படுகிறது. அந்தளவுக்கு இந்தக் கலையை நமது முன்னோர்கள் துல்லியமாக கணித்து வைத்திருக்கிறார்கள். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எப்படி எதிர்கொள்வது, அதற்கான தீர்வுகளை எப்படி கண்டறிவது போன்ற பல வழிகாட்டுதல்களை ஒருவரது ஜாதகமே நிர்ணயிக்கிறது. அப்படிப்பட்ட ஜோதிடத்தில் நட்சத்திரம், ராசி போன்றவைகளை கணித்து சொல்லப்பட்டாலும், ஜாதகத்தின் உயிர்நாடியான லக்னமே முக்கியமான கருதப்படுகிறது. லக்கினம் என்பது ஆத்மாவைப் போன்றது. ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவரது முழு வாழ்க்கையில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை இந்த லக்னமே எடுத்துரைக்கிறது.

ஒரு குழந்தை இந்த பூமியில் பிறந்த இடத்தையும், நேரத்தையும், கணக்கில் எடுத்துக்கொண்டு ராசி கட்டத்தில் எந்த லக்னம் என்று குறிப்பதுதான் பிறந்த லக்னம், ஜென்ம லக்னம், ஜெனன லக்னம் என்று சொல்கிறோம். ஒரு குழந்தை ஜெனனமாகும் சமயத்தில் கீழ்வானத்தில் உதயமாகி நகர்ந்து கொண்டிருக்கும். ராசி இல்லமே ஒருவரின் பிறந்த லக்கினம். இந்த லக்கினம்தான் ஜாதகத்தில் மிகவும் முக்கியமான ஸ்தானம். இந்த இடத்தில் இருந்துதான் மற்ற ஸ்தானங்கள் கணக்கிடப்படுகின்றன. இதன் அதிபதி லக்னாதிபதி ஆவார்.

இந்த லக்னாதிபதியே ஒருவரது ஜாதகத்தையும், ஜாதகரையும் இயக்குபவர். இவர் தான் தலைமைப்பீடம். இந்த லக்னம் என்பது தான் உயிர். எந்த லக்னமாக இருந்தாலும் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு பிரச்னைகள் கிடையாது. எல்லா லக்னமும், லக்னாதிபதியும்  ஒவ்வொரு வகையில் சிறப்பு மிக்கவர்கள், அவரவர்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப ஜாதகருக்கு பலன்களைத் தருவார்கள். லக்னமும், லக்னாதிபதியும் சிறப்பாக, யோகமாக அமைவது அவரவர்கள் செய்த பூர்வ புண்ணிய பலம். அந்த வகையில் லக்னத்தை வைத்து ஒருவருக்கு எப்போது யோக காலம் வரும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

மேஷ லக்னம்

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு தெசையும், சூர்ய தெசையும் எப்போது நடைபெறுகிறதோ அதுவே யோக காலம் ஆகும். ஜாதகத்தில் இந்த தெசை எப்போது வருகிறது என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு அந்த கால கட்டங்களில் தெசைகளுக்கேற்றார் போல் செயல்பட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும். சரியாக திட்டமிட்டால் மிக எளிதில் வீடு, சொத்து, வாகனங்கள் வசதிகள் வந்து சேரும்.

ரிஷப லக்னம்

சனி தெசையும், புதன் தெசையும் நடைபெறும் காலமே ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு யோக காலமாகும். அந்த காலம் ஜாதகத்தில் எப்போது வருகிறது என்பதை அறிந்து திட்டமிட்டு செயல்பட்டால் நீங்களே எதிர்பார்க்காத வண்ணம் பணமழை பொழியும். வாழ்க்கையில் பலமடங்கு உயர்வைப் பெறுவீர்கள்.

மிதுன லக்னம்

மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி தெசையும், சுக்கிர தெசையும் நடைபெறும் காலம் யோக காலமாகும். இந்த தெசைகள் நடைபெறும் கால கட்டத்தில் விழிப்புணர்வோடு நடந்து கொண்டால் செல்வங்கள் வந்து குவியும். வீடு, மனை, வாகனங்கள் வாங்கலாம்.

கடக லக்னம்

குரு தெசையும், செவ்வாய் தெசையும் நடைபெறும் காலம் கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு யோக காலம். இந்த கால கட்டத்தில் திட்டமிட்டு செயலாற்றினால் வாழ்க்கையில் பெரும் வளர்ச்சியைக் காண்பீர்கள். வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகம் கைகூடும்.

சிம்மம் லக்னம்

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தெசையும், குரு தெசையும் நடைபெறும் காலம் யோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் புகழின் உச்சியை அடைவீர்கள். பதவி உயர்வு, சொகுசு வாகனம் வாங்குதல் போன்ற யோகம் எளிதில் கைகூடும்.

கன்னி லக்னம்

சனி தெசையும், சுக்கிர தெசையும் நடைபெறும் சமயம் கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு யோக காலம். எப்போது அந்த கால கட்டம் வருகிறது என்பதை அறிந்து செயல்பட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அது ஒரு வசந்தகாலமாக அமையும். அந்த கால கட்டத்தில் நீங்கள் விரும்பியதை அடையலாம். 

துலா லக்னம்

துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தெசையும், சனி தெசையும் நடைபெறும் வேளை யோக காலம் ஆகும். இந்த கால கட்டத்தில் திட்டமிட்டு செயலாற்றினால் உங்களது சமூக அந்தஸ்து உயரும். எண்ணிலடங்கா பல செல்வங்கள் வந்து சேரும்.

விருச்சிக லக்னம்

சந்திர தெசையும், குரு தெசையும் நடைபெறும் காலம் விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு யோக காலம். இந்த கால கட்டத்தில் திட்டமிட்டு செயலாற்றினால் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும். உங்களை தூற்றியவர்கள் கூட உங்களை தேடி வரும் காலம் இது.

தனுசு லக்னம்

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூர்ய தெசையும், செவ்வாய் தெசையும் நடைபெறும் சமயம் யோக காலம். அந்த கால கட்டத்தில் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். அனைத்து செல்வங்களையும் சேர்க்கும் காலம் இது.

மகர லக்னம்

சுக்கிர தெசையும், சனி தெசையும் நடைபெறும் வேளை யோக காலமாக அமைகிறது மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு. அந்த கால கட்டத்தை அறிந்து செயல்பட்டால் செல்வம் பெருகும், வீட்டில் சந்தோசம் அதிகரிக்கும். சமுதாய அந்தஸ்து கூடும்.

கும்ப லக்னம்

கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தெசையும், சனி தெசையும், சுக்கிர தெசையும் நடைபெறும் வேளை யோக காலமாகும். திட்டமிட்டு செயலாற்றினால் உங்களது வளர்ச்சி அபாரமாக இருக்கும்.  மற்றவர்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு உங்களது வாழ்க்கை நிலை மாறும்.

மீன லக்னம்

செவ்வாய் தெசையும், சந்திர தெசையும் நடைபெறும் சமயம் மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு யோக காலம் ஆகும். ஜாதகத்தில் எப்போது அந்த கால கட்டம் வருகிறது என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.

banner

Leave a Reply

Submit Comment