AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Viruchigam Rasi Sani Peyarchi Palangal 2023-2026

dateMarch 14, 2022

விருச்சிக ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப் பலன்:    

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு சனி பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடு மற்றும் நான்காம் வீடு சனியின் ஆட்சி  வீடாகும். மூன்றாம் வீடு முயற்சிகள், தகவல் தொடர்பு, இளைய உடன்பிறப்புகளைக் குறிக்கின்றது. நான்காம் வீடு தாய், நிலம், வீடு மற்றும் சுக போகங்களை குறிக்கின்றது. சொந்த வீட்டில் பெயர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேற்குறிப்பிட்ட அந்த வீடுகளின் தன்மைகேற்ற பலன்களை உங்களுக்கு அளிப்பார்.

 சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்


உத்தியோகம்:

தொழில் ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டை சனி ஏழாம் பார்வை பார்க்கிகறார். எனவே பணிகள் அதிகமாக காணப்படும். வளர்ச்சியில் தாமதங்கள் இந்த காலக்கட்டத்தில் இருப்பது சகஜமே. உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் சில தொல்லைகளை அளிப்பார்கள்.  உங்கள் பணிகளை நீங்கள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். உங்களால் முடிக்க முடியும் என்று கருதும் பணிகளை மட்டும் ஒத்துக் கொள்ளுங்கள். பணியில் சில மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும். என்றாலும் இந்த நிலைமையை சமாளிக்க போதிய திறமை உங்களிடம் இருக்கும்.  

காதல் / குடும்ப உறவு:

உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உங்கள் தாயின்  ஆதரவு கிட்டும். ஆனால் தந்தையின் ஆதரவு கிட்டாது. உங்கள் தந்தையுடனான உறவு சுமுகமாக இருக்க வாய்ப்பில்லை. உடன்பிறப்புகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற  துணையை கண்டு கொள்வார்கள். திருமண வாழ்வில் அமைதி இருக்கும்.

திருமண வாழ்க்கை:

திருமணமான தம்பதிகளின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். வாழ்வில் அமைதி இருக்கும். என்ற போதிலும் நீங்கள் அனுசரித்து செல்வதன் மூலம் கருத்து வேற்றுமைகள் நீங்கி நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.

நிதிநிலை:

இந்தக்காலகட்டத்தில் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் தொழில் மூலம் லாபங்கள் மற்றும் ஆதாயங்கள் கிட்டும். ஒரு சிலர் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து வெற்றி காண்பார்கள்.  இந்த முதலீடுகள் உங்கள் எதிர்காலத்திற்கு ஆதாரமாக விளங்கும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். நீங்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்வீர்கள். நிலம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை அளிக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். எதிர்பார்த்த லாபங்களை அடைவார்கள்.

மாணவர்கள்:

மாணவர்கள் கல்வியில் பிரகாசிப்பார்கள்.  தங்கள் இலக்குகளை நோக்கி ஈடுபாட்டுடன் பயணிப்பார்கள்.  தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். ஆரய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த பலனைக் காண்பார்கள். ஒரு சிலர் மேற்கல்வி  பயில உதவித் தொகை பெறுவார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.   .

ஆரோக்கியம்:

கருப்பை மற்றும் சிறுகுடல் சார்ந்த பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே சரி செய்து கொண்டால் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்க்கலாம். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அர்தாஷ்டம பெயர்ச்சி என்பதால் உங்கள் ஆரோக்கியத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.  

பரிகாரங்கள் :-

  • சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
  • சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
  • அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
  • சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்

banner

Leave a Reply