துலா ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Thulam Rasi Sani Peyarchi Palangal 2023-2026

துலா ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன்:
உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சனியின் சஞ்சாரம் நடைபெறுகிறது. நன்மை தரும் இடமாக இது கருதப்படுகிறது. உங்கள் ராசிக்கு சனி யோககாரகர் என்பதால் உங்களுக்கு இந்த பெயர்ச்சி அதிர்ஷ்டம் தரும். சோதனைக் காலங்களை கடந்து விட்டீர்கள். இதற்கு முன்பு இருந்த தடைகள் தாமதங்கள் நீங்கி விட்டன. உங்கள் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி காண்பீர்கள். கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்
உத்தியோகம்:
உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுக்காக காத்திருந்த காலம் இப்பொழுது முடிவுக்கு வரும். சனி பலன்களை அளிப்பதில் தாமதங்களை ஏற்படுத்துவாறே தவிர அளிக்காமல் விடமாட்டார். ஒரு சிலர் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. பொறுப்புகள் அதிகரிக்கும் சமயத்தில் உங்கள் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இந்த காலகட்டத்தில் புகழும் அங்கீகாரமும் உங்களை நாடி வரும்.
காதல் / குடும்ப உறவு
அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பற்றற்ற உணர்வு காணப்படும். விஷயங்கள் உங்கள் எதிர்பார்புகளுக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பில்லை. உங்கள் அன்புக்குரியவர் உங்கள் கருத்துகளுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உள்ளது. மூத்த உடன்பிறப்புகளுடைய ஆதரவு கிட்டுவது கடினம். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். அமைதி மேற்கொள்ளுங்கள். தனித்திருப்பவர்கள் தங்கள் உறவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
திருமண வாழ்க்கை:
ஒரு சில தடைகளை நீங்கள் சந்திப்பீர்கள். கேது உங்கள் ராசியிலும் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகுவின் சஞ்சாரம் காரணமாக சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். திருமணத்தில் சில தாமதங்கள் காணப்படும். இதுதற்காலிக பின்னடைவு மட்டுமே என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணமான தம்பதிகள் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
நிதிநிலை:
இந்த காலகட்டத்தில் நிதிநிலையில் இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். தேவையான பணம் கையில் புழங்கும். ஊக வணிகங்களில் பங்கு கொள்ளுதல் கூடாது. முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன் அதனை பற்றி நன்கு அறிந்து பின்னர் மேற்கொள்வது நல்லது. தனம் மற்றும் குடும்பத்தைக் குறிக்கும் உங்கள் இரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் சில தடைகள் இருந்தாலும் நல்ல பலன்கள் கிட்டும்.
மாணவர்கள் :
இந்த காலக்கட்டத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் கல்வியில் வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் இலக்குகளில் கவனமாக இருங்கள். மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுங்கள். கவனச்சிதறலுக்கு ஆளாகாதீர்கள். வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு ஏற்ற காலம். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை கிட்டும். கடின உழைப்பு ,கடமை உணர்வு மற்றும் ஈடுபாடு மூலம் வெற்றியும் புகழும் பெறுவீர்கள். உங்கள் படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சிறிய குறைபாடுகள் என்றாலும் அலட்சியம் காட்டாதீர்கள். உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புய்ள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் தேவை. மது அருந்துவதைத் தவிருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது..
பரிகாரங்கள் :-
- சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
- ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
- சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
- அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
- சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
- மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்
