தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Dhanusu Rasi Sani Peyarchi Palangal 2023-2026

தனுசு ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன்:
உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கிறார். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு ஏழரை சனி முடிவிற்கு வருகிறது. தடைகளும் தாமதங்களும் உங்கள் பாதையில் இருந்து விலகி விடும். நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும் முன்னேற்றமும் காண்பீர்கள். உங்கள் வாழ்வில் வியக்கத்தக்க வளர்ச்சியும் மாற்றமும் நீங்கள் காண்பீர்கள்.
சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்
உத்தியோகம்:
உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடல் போல பரந்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களில் ஒரு சிலர் உயர் பதவி கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் படைப்பாற்றல் பிறரின் கவனத்தைக் கவரும். சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் சவால்களை சந்திக்கும் வலிமை பெறுவீர்கள். உங்கள் முயற்சி மற்றும் தகவல் தொடர்பு திறன் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
காதல்/ குடும்ப வாழ்க்கை:
குடும்பத்தில் அமைதி நிலவும். இதற்கு முன்பு இருந்த பிரச்சினைகள் நீங்கிவிடும். குடும்பத்தில் இருக்கும் மூத்த வயதினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உறவு சுமுகமாக இருக்கும். குழந்தைகள் உங்கள் கருத்துக்கு எதிராக செயல்படுவார்கள். நீங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள். தங்கள் எதிர்பார்ப்புகளை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.
திருமண வாழ்க்கை:
திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு தக்க துணை தேர்ந்தெடுக்க இது உகந்த நேரம். தம்பதிகள் இனிமையான இல்லறம் காண்பார்கள். உறவில் பந்தமும் நெருக்கமும் சிறப்பாக இருக்கும். என்றாலும் சில சோதனைக் கட்டங்களை நீங்கள் சந்திக்க நேரும். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவில் அமைதியான சூழல் இருக்கும்.
நிதிநிலை:
உங்கள் நிதிநிலை பாதுகாப்பானதாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதார பிரச்சினைகள் காணாமல் போகும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடன்கள் இருந்தால் அதனை இந்த காலக்கட்டத்தில் அடைத்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் கேதுவின் சஞ்சாரம் காரணமாக அக்டோபர் 2023 வரை லாபங்கள் காண்பதில் சில தடைகள் இருக்கும்.
மாணவர்கள்:
மாணவர்கள் இந்த காலக்கட்டத்தில் கல்வியில் சிறந்த வெற்றி பெறுவார்கள். மிகவும் புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். அவர்களின் திறமை பளிச்சிடும். ஒரு சிலர் ஆய்வு அல்லது ஆராயச்சிக் கல்வியை மேற்கொள்வார்கள். மாணவர்கள் கவனமுடனும் ஆர்வத்துடனும் கல்வி பயில்வார்கள். ஒரு சிலருக்கு உயர் கல்வி படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி காண்பார்கள்.
ஆரோக்கியம்:
இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். இதற்கு முன்பு இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். அதிக சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்ப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது தற்காலிகமானதே. எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
பரிகாரங்கள் :-
- சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
- ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
- சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
- அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
- சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
- மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்
