AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023 (Dhanusu Rasi Guru Peyarchi Palangal Tamil 2022 to 2023)

dateFebruary 28, 2022

தனுசு ராசி குரு பெயர்ச்சி 2022 பொதுப்பலன்கள்

தனுசு ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கும் 4 ஆம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 க்குப் பின்னர், உங்களது 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது என்பது, உங்களுக்கு, குறிப்பிடத்தக்க ஆதாயங்களையும், வெற்றியையும் அளிக்கக் கூடும். காதல் வாழ்க்கை பரபரப்பாக இருக்கும் அதே நேரம், மண வாழ்க்கையில் ,சில கசப்புகள் தோன்றலாம். எனினும், வேலை, தொழில் மிகச் சிறப்பாக இருக்கக்கூடும். வேலையிலும், பொருளாதாரத்திலும், இந்த ஆண்டு, உங்களுக்கு வரவேற்கத்தக்கதாக அமையலாம். குடும்ப வாழ்க்கை, பொதுவாக, அமைதியாகச் செல்லக்கூடும்; குடும்பத்தினர் முக்கியத் தருணங்களில் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் எனலாம். நண்பர்களிடமிருந்தும், உடன் பணிபுரிவோரிடமிருந்தும் நீங்கள் ஆதாயம் பெறலாம். இந்த ஆண்டின் பெரும்பாலான நேரங்களில், அதிர்ஷ்டம் உங்களுக்குக் கைகொடுக்கக் கூடும். தவிர, புது சொத்து, வீடு, அல்லது வாகனம் வாங்கும் யோகமும் சிலருக்கு இருக்கலாம். குறிப்பாக, இந்த குரு பெயர்ச்சி 2022 இன் இரண்டாம் பாதியில் நீங்கள் அதிக வளம் பெறக்கூடும்.  

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

வேலை, தொழில்

பணியிடத்தில் நீங்கள், ஒரு பெரிய அணி அல்லது குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வெகுமதிகள் ஆகியவை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உயரதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவு தரலாம். சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளின் ஈடுபட்டு வருமானம் பெறக்கூடும். அலுவலகத்தில், உங்கள் நிலை, மதிப்பு, மரியாதை ஆகியவை வளர்ச்சியடையக் கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், பொழுதுபோக்கு அல்லது விளையாட்டுத் துறையில் உள்ள சிலரும் சிறந்து விளங்கும் வாய்ப்புள்ளது.    
மேலும், புது வேலையில் சேரவோ, புதுத் தொழில் துவங்கவோ திட்டமிடுபவர்கள், அதில் வெற்றி காணக்கூடும். இவ்வாறே, அச்சுத் துறை மற்றும் பதிப்புத் துறையில் உள்ளவர்களுக்கும் வெற்றி கிடைக்கலாம். சிலர், காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் உயர் பதவிக்கு உயரலாம். ஆசிரியப்பணி, ஜோதிடம், ஆன்மிகம், அமானுஷ்யக் கலை போன்றவற்றிலும் சிலர் முன்னேறலாம். தவிர, மருத்துவம், பொறியியல் துறைகளும் நல்ல வளர்ச்சியையும், வெற்றியையும் தரலாம்.

காதல், உறவுகள்

காதலர்களுக்கிடையே, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை ஆகியவை இல்லாத காரணத்தால், காதல் உறவில் சண்டை சச்சரவுகளும், பிரிவுகளும் ஏற்படக்கூடும். மேலும், உங்களது முறையான கவனமின்மை, அக்கரையின்மை காரணமாக, பல காதல் உறவுகள் நீண்டகாலம் நீடிக்காமல் போகலாம். காதலில் சிலர் ஏமாற்றப்படும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் துணையும் உங்களிடம் விசுவாசமில்லாமலும், ஆர்வம் இழந்தும் போகலாம். இளம்வயதில் உள்ள சிலர், காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டாலும், இவை எதுவும் நீண்ட நாள் நிலைத்திருக்க வாய்ப்பில்லை.        

திருமண வாழ்க்கை

இந்த ஆண்டு, உங்கள் மண வாழ்க்கையில், நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும் இல்லாத காரணத்தால், கசப்பு உணர்வும், தகராறுகளும், குழப்பங்களும் ஏற்படவும், சில கணவர்-மனைவி ஜோடிகள் பிரிந்து போகவும் வாய்ப்புள்ளது. எனினும், பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், சில தம்பதிகள் மீட்டும் சேரவும் கூடும். தவிர, பல விருச்சிக ராசி அன்பர்கள், கடும் வேலை பளு, அலுவலகத்தில் முன்னேற்றத்துக்கான தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வது போன்றவை காரணமாக, தங்கள் துணைகளுக்காக உரிய நேரம் ஒதுக்க இயலாமல் போகலாம். புது மணத் தம்பதிகளும், ஒருவருடன் ஒருவர் அனுசரித்துச் செல்வதற்குக், கஷ்டப்படலாம். ஆனால், பொறுமையும், முறையான பேச்சுவார்த்தையும், மணவாழ்க்கையில் இணக்கத்தையும், நம்பிக்கையையும் தரக் கூடும். 

நிதி

இது, தனுசு ராசி அன்பர்களுக்கு நல்ல பொருளாதார வளம் தரும் ஆண்டாக அமையக்கூடும். உங்கள் வசதிகளும், சுகங்களும் இந்த ஆண்டு அதிகரிக்கக்கூடும். தொழில் முனைவோருக்குக் கொழுத்த லாபம் கிடைக்கலாம். சிறு கடை நடத்துபவர்களுக்கும், மற்ற வியாபாரம் செய்பவர்களுக்கும் கணிசமான ஆதாயம் கிடைக்கலாம். செல்வமும், சேமிப்பும் அதிகரிப்பது, நிதிநிலையில் உங்களுக்கு நல்ல திருப்தி தரலாம். மேலும், பொழுதுபோக்கு, ஒப்பனைப் பொருட்கள், மரம், நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், ஆடைகள் தொடர்பான வியாபாரம் தழைத்தோங்கக் கூடும். உணவு, பயணம் போன்ற தொழில்களும், பெரும் லாபங்கள் தரலாம். காகிதம் முதலான எழுது பொருட்கள் விற்பனை செய்வோரும், இந்த ஆண்டு, நல்ல ஆதாயம் பெறக்கூடும்.  

கல்வி

தனுசு ராசி பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடும். ஆனால், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், வெற்றி பெற, கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கல்லூரியின் வழியாகவோ, பல்கலைக்கழகப் பட்டம் காரணமாகவோ சிலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகலாம். உங்கள் விடா முயற்சியும், நேர்முகத் தேர்வு, பொட்டித் தேர்வு ஆகியவற்றில் வெற்றி தரலாம். எனினும், சில மாணவர்கள் பரிட்சை நேரங்களில் கவனச் சிதறலுக்கோ, மனதை ஒருமுகப்படுத்த இயலாத நிலைக்கோ ஆளாகலாம். ஆனால், பொதுவாக, பெரும்பாலான மாணவர்கள் தேர்வுகளின் சிறந்து விளங்கும் வாய்ப்புள்ளது. எனினும், பொறியியல், மருத்துவ மாணவர்கள் கல்வியில் வெற்றியடைய, அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும்       
 

ஆரோக்கியம்

தனுசு ராசி அன்பர்கள், நோய்கள், காயங்கள் போன்றவை இன்றி, இந்த ஆண்டு, நல்ல உடல் நிலையுடன் இருப்பார்கள் எனலாம். உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் நன்றாக இருப்பதனால், எந்த உடல்நிலைப் பிரச்சனை ஏற்பட்டாலும், அவற்றிலிருந்து நீங்கள் விரைவாக விடுபடக்கூடும். எனவே உங்களுக்கு, அதிக மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், உங்கள் குடும்பத்தினர், துணை அல்லது துணைவர், குழந்தைகள் போன்றவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படக்கூடும். இது, உங்கள் மன அமைதி, சந்தோஷம் ஆகியவற்றைக் குறைத்துவிடக் கூடும். எனவே, இந்த ஆண்டு, இவர்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியிருக்கும்.    
 

பரிகாரங்கள்

  • தினமும் விஷ்ணு சாலிஸா பாராயணம் செய்யவும்
  • வியாழக்கிழமைகளில் இனிப்பு, வாழைப்பழம் வினியோகம் செய்யவும். 
  • விஷ்ணு ஆலயங்களில் பகவான் ராமருக்கு ஆரத்தி வழிபாடு செய்யவும்
  • தினமும் ஆலமரம் மற்றும் வாழை மரத்திற்குத் தண்ணீர் ஊற்றவும்
  • வியாழக்கிழமைகளில் மாமிச உணவைத் தவிர்க்கவும்
  • வியாழக்கிழமைகளில், அந்தணப் புரோகிதர்களுக்கு, துணி, பணம் தானம் செய்யவும்.  

banner

Leave a Reply