மீனம் ராசி பலன் ஏப்ரல் 2022 | April Matha Meenam Rasi Palan 2022

மீனம் ராசி ஏப்ரல் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் காதல் உறவு இனிமையாக இருக்கும். உங்களில் சிலருக்கு மனதில் காதல் அரும்பு மலரும். திருமணமான தம்பதியர் மனமொத்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு கூடும். இதனால் அன்னியோன்யம் அதிகரிக்கும். இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
உங்கள் வசீகரிக்கும் திறன் இந்த மாதம் கூடும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் மீதான ரசனை கூடும், மேலும் உங்கள் அழகு, கலைநயம் மற்றும் உங்கள் மனப் போக்கை விரும்புவார்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
தம்பதிகளுக்கு இடையே நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை
நிதி நிலை:
உங்கள் பொருளாதாரம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நீங்கள் எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர் என்றால் நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவீர்கள். இந்த மாதம் வீடு, வாகனம் மற்றும் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது நன்மை பயக்கும்.
வேலை:
உங்கள் உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவர் என்றால் உத்தியோகத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு சார்ந்த துறையில் நீங்கள் பணியில் இருந்தால் உங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக அனுகூலமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.
தொழில்:
சுய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த பண வரவைக் காண்பார்கள். நீங்கள் தொழிலில் சிறந்த முறையில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். நீங்கள் வெளி நாடு சார்ந்து தொழில் செய்யும் எண்ணம் கொண்டிருந்தால் உங்கள் எண்ணங்கள் இந்த மாதம் ஈடேறும். வெளிநாட்டுத் தொடர்புடைய உணவு ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக பண வரவைக் காண்பார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் அதிக பணிகள் காணப்படும். வாடிக்கையாளர்களை நீங்கள் திருப்தி படுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்ள நேரும். ஒய்வு ஒழிச்சல் இன்றி பணி புரிய நேரும். வேலை பளு காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் காணப்படும். என்றாலும் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
ஒய்வு ஒழிச்சல் இன்றி நீங்கள் வேலை செய்வதன் காரணமாக அசதி மற்றும் அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உணர்ச்சி வசப்படாதீர்கள். உண்ணும் உணவில் கவனமாக இருங்கள். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். ஆராய்ச்சி கல்வி மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் நிலையை பிடிப்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
3, 4, 6, 7, 8, 25.
அசுப நாட்கள்:
9, 10, 24, 29, 30.
