விருச்சிகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Viruchigam 2022 – 2023)

விருச்சிகம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
இந்த சுபகிருது வருடத்தில் உயரப் போகும் ராசிகளில் விருச்சிகம் அதிக நன்மையான பலன்கள் நடக்கும் விதமாக உள்ளது. வேலையில் ஏற்றமும் அதேசமயம் அந்த ஏற்றத்தினால் உயர்வும் அடைய பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு முதலீடு செய்து அதனால் லாபம் பெறுவீர்கள். கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை உயரும் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும்.
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
காதல் கைகூடும் காதலை திருமணமாக மாற்றம் நிலை உண்டாகும். தடைப்பட்டிருந்த திருமணம் நிகழும். அண்ணன் தங்கை உறவுகள் உறுதுணையாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இடையே உறவுகள் மேம்படும். எதிரிகள் கட்டுக்குள் வருவார்கள். வழக்கில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரம் உயர பெறுவீர்கள்.
குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை
நிதி நிலை:
குடும்பத்தில் அந்தஸ்து மற்றும் கௌரவமும் உயரும். புதிய வீடு மற்றும் விவசாய நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது பிற்காலத்தில் அதிக லாபத்தை கொடுக்கும். கும்பாபிஷேகம் மற்றும் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு அதிக செலவுகளும் செய்வீர்கள்.
நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை
வேலை:
அரசாங்க ஊழியர்கள் மேன்மையான நிலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு வேலையில் உயர்வு கிடைக்கும்.
தொழில்:
விவசாயிகள் தங்களுடைய விவசாயத்திற்கு உரிய அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெற்று அதில் லாபத்தை ஈட்டுவீர்கள். நிலம், கூட்டுத் தொழில் மேன்மை உண்டு. தொழில் செய்பவர்களுக்கு மொத்த ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று ஆதாயம் காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
சுயதொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் பொருளாதாரத்தில் உயர்வு பெறுவார்கள். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு அப்பணி நிரந்தரமாக மாறும் நேரமாக இது அமையும். பணிகள் அதிக அளவில் இருக்கும் காரணத்தால் நீங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க இயலாத நிலை ஏற்படும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் லாபம் கிடைக்க குரு பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வயதில் மூத்தவர்கள் பல் பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை மாறி மருந்துகளால் குணம் பெறுவீர்கள்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு சந்திர பூஜை
மாணவர்கள்:
மேல்படிப்புக்காக முயற்சி செய்தவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பினை தேர்வு செய்து அதிலும் வெற்றி காண்பீர்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி காண்பீர்கள். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக உள்ளது. உயர்கல்வி மாணவர்கள் தடைகள் அனைத்தும் விலகி படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை
