துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Thulam 2022 – 2023)

துலாம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
இந்த வருடம் பூர்வீக சொத்து கிடப்பதில் இருந்துவந்த தாமதம் நீங்கி பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். அடமான நகைகளை மீட்க பொருளாதாரம் கிடைக்கப்பெறுவீர்கள். தங்களுடைய உத்யோகத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு வந்து மறையும்.
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
காதலில் வெற்றி உண்டாகும். தாமதமான திருமணம் மற்றும் தாமதமாக குழந்தை பாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்திம வயது உடையவர்கள் ஆன்மீக தொண்டுகளையும் ஆன்மீக பயணங்களையும் வருடத்திற்கு ஒருமுறை செய்வது பொருளாதாரம் மற்றும் தொழிலில் ஏற்றத்தை கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த வருடம் புதிய ஆடை அணிகலன்கள் மற்றும் வாகனம் அமைய வாய்ப்புள்ளது. ஆடை மற்றும் நகைகளுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். அடுத்தவர்கள் கடன் வாங்வதற்காக சாட்சிக் கையெழுத்து போடாமல் இருப்பது நலம். ஆன்மீக சுற்றுலா குடும்பத்துடன் சென்று வருவது தன நிலையில் ஏற்றத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் அதிக தன லாபம் கிடைக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
அரசு வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது சுயதொழிலுக்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் அதனால் உங்களுக்கு உயர்வும் நன்மையும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள், தங்களுக்கு பிடித்த வேலையை தேர்வு செய்து அதில் முன்னேற்றம் அடைவீகள்.
தொழில்:
தனம் சம்மந்தப்பட்ட தொழிலில் அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பது உத்தமம். சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் புதிய கிளைகளை உருவாக்க பண உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் புதிய வணிக வளாகங்களை கட்டி அதில் லாபத்தைப் பெறுவீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
புதிதாக வேலை தேடும் தொழில் வல்லுனர்களுக்கு வேலை கிடைக்கும் அதேசமயம் ஊதியம் திருப்தியாக இருக்காது. விளையாட்டுத் துறை சார்ந்த தொழில் வல்லுனர்கள் தொழிலில் சாதனை படைப்பீர்கள். சுய தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் புதியதாக தொழில் தொடங்கி உயரத்தை அடைவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு துர்கா பூஜை
ஆரோக்கியம்:
சூரிய நமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் மேன்மையான பலனைக் கொடுக்கும். காது மற்றும் கண் பிரச்சனைகளுக்காக மருத்துவ உதவியை நாடுவீர்கள். வயதானவர்களுக்கு சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற தீராத வியாதிகள் கட்டுக்குள் வரும். ரெய்கி போன்ற ஆன்மீகம் சார்ந்த சிகிச்சைகள் மூலம் நன்மைகள் நடக்க வாய்ப்புள்ளது.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி மாணவர்கள் படிப்பு சம்மந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். படிப்பிற்காக வெளிநாட்டுக்கு முயற்சி எடுக்கும் உயர்கல்வி படிக்கப்போகும் மாணவர்களுக்கு சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை
