தனுசு ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Dhanusu 2022 – 2023)

தனுசு ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
இந்த வருடத்தில் வேலையில் சாதகமான மாற்றம் உண்டாகும். இந்த மாற்றத்தால் மேன்மைகள் பல உண்டாகும். அன்னையின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் உயரும். காதல் மணம் புரிபவர்களுக்கு பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் கைகூட வாய்ப்புள்ளது. பொறுமை காப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு உள்ள பிணிகள் தீரும் காலமாக இது அமையும். நீரழிவு மற்றும் அனைத்து வியாதிகளும் கட்டுக்குள் இருக்கும்.
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
காதல் கைகூடும் அதேசமயம் அதை திருமணமாக மாற்றுவதற்கு முயற்சியில் சற்று தொய்வு காணப்படும். இந்த தமிழ் வருடப் பிறப்பிற்கு பிறகு தடைப்பட்டிருந்த அனைத்துத் திருமணங்களும் நடந்தேறும். எளிதில் குழந்தை பாக்கியம் பெறும் யோகம் உண்டு. இரண்டாம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அதற்குரிய காலமாக இந்த வருடம் அமையும்.
திருமணமான தம்பதிகளுகிடையே ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
நீண்ட நாட்களாக தடை பட்டுக்கொண்டிருந்த பூர்வீக சொத்து கிடைக்க பெற்று அதில் ஆதாயமும் லாபமும் பெறுவீர்கள். கோயில் மற்றும் அன்னதானம் செய்வதற்காக அதிகம் செலவு செய்வீர்கள். முதியோர் இல்லம் சென்று தொண்டு செய்வது தங்களின் தனவரவை உயர்த்தும்.
தன நிலையில் உயர்வு பெற சந்திரன் பூஜை
வேலை:
புதிதாக வேலை கிடைத்தவர்களுக்கு ஆதாயமும் நல்ல அனுபவமும் கிடைத்து மேன்மை அடைவீர்கள். தனியார் துறையில் வேலையில் உள்ளவர்களுக்கு வேலையில் மாற்றம் உண்டு அதனால் ஏற்றமும் உண்டு. அரசாங்க ஊழியர்களுக்கு வேலை சுமை குறையும் வாய்ப்பு உள்ளது.
தொழில்:
பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பதால் குடும்பத் தொழில் மேன்மை பெற்று அதிக லாபங்களை அடைய முடியும். கூட்டுத் தொழிலில் கவனமாக சிந்தித்து செயல்படும் நிலையில் உள்ள உங்களுக்கு தொழிலில் மேன்மையும் வெற்றியும் கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
சுய தொழில் செய்யும் தொழில் வல்லுனர்களுக்கு சிறிது தடைகளுக்குப் பிறகு வெற்றி அடையும் நிலைவரும். அரசு உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு பேச்சில் சற்று கவனம் தேவை. கல்வித்துறையில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்க சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
அஜீரணக் கோளாறுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாலும் வாயு பிரச்சினைகள் வரும் என்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்திற்கு அரோக்கியமான உணவை எடுத்துகொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சிறப்பான உடல் ஆரோக்கியம் பெற வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் திடமாக படித்து அதில் சாதனைகள் படைப்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் உயரும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் மேன்மைகள் நடக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களின் லட்சியத்தை எட்ட செய்யப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். அதேசமயம் அதற்காக கடினமாக உழைக்க நேரிடும்.
கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை
