கன்னி ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Kanni 2022 – 2023)

கன்னி ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
இந்த வருடம் தங்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை கூடும் வருடமாக இருக்க போகிறது. இந்த வருடத்தின் பிற்பகுதி மிக நன்றாக இருக்கும். இந்த வருட மத்தியில் புது வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை பளு காரணமாக அலைச்சல் உண்டாகும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விப்பீர்கள்.
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு இடையே நல்லுறவு கூடும். திருமண உறவில் உள்ளவர்களுக்கு அன்யோன்யம் கூடும். தாம்பத்திய உறவில் நெருக்கம் அதிகரிக்கும். இசை மற்றும் கலை மீது ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்றுவர உகந்த காலகட்டமாக உள்ளது.
திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை
நிதி நிலை:
நன்கொடை போன்ற தரும காரியங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள். அடுத்தவரிடம் கொடுத்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண விசயத்தில் கவனம் தேவை. வீடு பராமரிப்பு பணிக்காகவும் செலவுகள் செய்வீகள்.
தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை
வேலை:
அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உள்ளூரில் வேலை செய்பவர்களுக்கு இட மாற்றம் உருவாகலாம் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு தன உயர்வு கிடைக்கும்.
தொழில்:
வெளிநாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கூட்டுத் தொழிலில் புதிய யுத்திகளைக் கையாள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள் துணி வியாபாரம் செய்பவர்கள் பணிக்கு புதிய ஆட்களை நியமிப்பதன் மூலம் நல்ல லாபத்தை அடைவீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
வெளிநாடு வேலையில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு தொழிலில் மேன்மையும் தன நிலையில் ஆதாயமும் கிடைக்கும். இதுவரையில் வெளிநாட்டு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு விசா பிரச்சனைகள் தீரும்.
உத்தியோகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
வயதானவர்களுக்கு கண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, மத்திம வயதில் உள்ளவர்களுக்கு முதுகு தண்டுவட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாயாருக்கு நரம்பு பிரச்சனைகள் மற்றும் நீரழிவு நோயால் பாதிப்புகள் உண்டாகலாம்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை
மாணவர்கள்:
விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறையில் படிக்கும் மாணவர்கள் கவனம் செலுத்தி கல்வி பயில்வார்கள். முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சி படிப்புகளில் இருப்போருக்கு கடின உழைப்பிற்குப் பிறகு வெற்றிகள் கிடைக்கும்.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
