ரிஷபம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Rishabam 2022 – 2023 )

ரிஷபம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
இந்த வருடம் வெளிநாட்டு பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் அலைச்சலுடன் தொழில் ரீதியில் நல்ல ஆதாயமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சுய தொழிலில் லாபம் அதிகாரிக்கும். கூட்டுத் தொழில் நன்றாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் குழந்தை பாக்கியமும் ஏற்படும். சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளில் வெற்றியைக் காண்பீர்கள். உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
காதல் கைகூடும். கணவருக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவனால் ஆதாயம் ஏற்படும். ஆயினும் பணம் கையாளுவதில் மனைவியின் கை ஓங்கி இருக்கும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கணவன் மற்றும் மனைவி பெற வேண்டும். குழந்தைகளால் ஆதாயம் உண்டு. அண்டை வீட்டு நண்பர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். வருடத்தில் பிற்பகுதியில் குடும்பத்தில் அமைதி மற்றும் சமாதானம் நிலவும்.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
தந்தைவழியில் சொத்து மற்றும் தன ஆதாயம் சிறிது தாமதம் ஆனாலும் கிடைக்கப்பெறும். மனைவியின் சொந்தங்கள் வழியில் செலவுகள் ஏற்படும். மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கப்பெற்று அதனை விற்று புதிய வீடு வாங்க வாய்ப்பு உள்ளது. கடன் வாங்குவதில் கவனம் தேவை.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
அரசு வேலை மற்றும் தனியார் உத்தியோகத்தில் நல்ல ஆதாயம் மற்றும் புகழ் கிடைக்கும். தனியார் உத்தியோகத்தில் உள்ள தங்களின் பணியிடத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் நீங்கள் நல்ல பெயர் பெறுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்
தொழில்:
பெண்களுக்கு சுய தொழில் மூலம் நல்ல ஆதாயங்களும் தொழிலில் லாபங்களும் அதிகமாகக் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். பல சரக்கு வியாபாரத்தில் வெற்றியுடன் அதிக லாபமும் கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
சுய தொழில் செய்யும் தொழில் வள்ளுனார்கள் வீட்டில் உள்ள அனுபவம் வாய்ந்த மூத்தவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுவது நன்மை பயக்கும். உயர்கல்வி தொடர்பான கற்பிக்கும் பணியில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு பதவி உயர்வு மற்றும் தன நிலையில் ஏற்றம் நிறைந்து காணப்படும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை
ஆரோக்கியம்:
அதிக அலைச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். கழுத்து வலி அல்லது கழூத்து நரம்பில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கழுத்துக்குறிய பயிற்ச்சியை செய்வதால் கழுத்துப்பிரச்சனை நீங்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானம் செய்வதன் மூலம் மனம் லேசாகும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் சாதிப்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆராய்ச்சி கல்வி மாணவர்கள் படிப்பில் முதல் நிலையை பெருவார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கனேஷா பூஜை
