AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Mesham 2022 – 2023)

dateMarch 17, 2022

மேஷம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:

தொழில் மற்றும்  வேலை விஷயத்தில் சற்று கவனம் தேவை. வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி அமையும் அதேசமயம் கடினமாக உழைத்த  பிறகு மேன்மையான பலன்களை பெற முடியும். அடுத்தவர் பிரச்சினையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள்.

தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்பச் சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். தாமதமான திருமணம் மற்றும் தாமதமான புத்திர பாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடம். தனது முதல் துணையை இழந்தவர்களுக்கு இரண்டாவது விவாகம் நடக்க வாய்ப்புள்ளது.   

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். செலவு செய்வதிலும் கவனம் தேவை. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் பொழுது நன்கு ஆராய்ந்த பிறகு முதலீடு செய்யவும். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

அரசாங்க ஊழியர்களுக்கு வேலை சுமை அதிகமாக வாய்ப்புள்ளது அதேசமயம் பெயரும் மதிப்பும் உயரும். உத்தியோகம் செய்யும் இடத்தில் கடன் வாங்குவதை தவிர்க்கவும், தேவைப்பட்டால் மட்டும் மற்றவருக்கு உதவும். தங்கள் சக்திக்கு ஏற்ப செலவுகளைச் மேற்கொள்ளவும் கனரக வாகனங்களை உபயோகிக்கும் போது கவனம் தேவை   

தொழில்:

வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்பவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  சுபச் செலவாக மாற்றுவதற்கு முயற்சி செய்யவும். கூட்டுத்தொழில் முயற்ச்சிகள் கைகூடும். 

தொழில் வல்லுனர்கள்:

வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையப் பெறும். அரசு உத்தியோகத்தில் வேளையில் உள்ள தாங்கள் தங்களுடைய உயர் அதிகாரியுடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் தொழில் வல்லுனர்களுக்கு வேலை செய்யும் இடத்தில்  சிறிது பதட்டநிலை இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.  

உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு துர்கா பூஜை

ஆரோக்கியம்:

உங்களுக்கு தோல் நோய், சிறுநீரக பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மது அருந்துவதை குறைத்துக்கொள்ளவும். முதுகுதண்டு  மற்றும் மூட்டுவலி பிரச்சனைகள் வரலாம். அதிக பாரம் சுமப்பது கூடாது. ஆரோக்கிய உணவு மற்றும் நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி மாணவர்கள் படிப்பில் சாதிப்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ளது. பொறுப்புடன் படிப்பது நலம். போட்டித் தேர்வு எழுதூம் மாணவர்களுக்கு  போட்டித்தேர்வில் வெற்றி கிடைக்கும். பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்காண வாய்ப்புகள் ஏற்படும். 

மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷா பூஜை


banner

Leave a Reply