மிதுனம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Mithunam 2022 – 2023 )

மிதுனம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
இந்த வருடம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வீட்டில் உள்ள பெரியவர்களின் சொல்படி நடக்க வேண்டும் என்று எண்ணி அதன்படி நடப்பீர்கள் அதனால் அனைவராலும் ஈர்க்கப்படுவார்கள். கனிவான பேச்சை கடை பிடிப்பீர்கள். சகோதரர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகரித்து காணப்படும். இளய சகோதரர்களுக்கு தன உதவி செய்வீர்கள். இந்த வருடம் ஆன்மீக அருள் கிடைக்கும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். குலதெய்வ வழிபாடும் இந்த ஆன்மீக பயணத்தில் அமையும்.
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
குழந்தைகளால் நற்பெயரும் நன்மையும் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். அமைதியான வாழ்விற்கு விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை வளர்ப்பது நலம். சொத்து சம்மந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் வெற்றி உண்டு.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
நிதி நிலை:
தாய் மற்றும் தாய்வழி சொந்தங்களால் சொத்து மற்றும் தன ஆதாயம் பெருகும். உங்களுக்கு இந்த வருடம் புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. புதிய சொத்து சேர்க்கைகள் ஏற்படும். இந்த வருடம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நன்மை பயக்கும். வீட்டில் உள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
வேலை:
தனியார் உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையில்லாத அடுத்தவர் விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு மதிப்பு மேன்மையும் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் உருவாகும்.
தொழில்:
கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் வெளிப்படை இல்லாத தன்மையால் தனது கூட்டாளியுடன் அவமானம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வெளிப்படையாக இருப்பது அவமானத்தை தவிர்க்கும். தை மாதத்திற்கு பிறகு புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நலம்.
தொழில் வல்லுனர்கள்:
புதிய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உறுவாகி சுய தொழில் சம்மந்தப்பட்ட பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். சுய தொழிலில் போட்டிகள் உருவாகும் நிலைவரும். தொழிலில் கவனமாக இருப்பது நலம்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
வயிறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நேரத்திற்கு உணவு அருந்துவதையும் நேரத்திற்கு தூங்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
வீர தீர சாகசங்கள் செய்யும் பள்ளி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உயர்கல்வி மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. படிப்பில் தடை மற்றும் தாமதங்கள் உண்டாகலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்து வர படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
