கடகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Kadagam 2022 – 2023 )

கடகம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
குரு பாக்கிய ஸ்தானத்தில் வருவதால் பாக்கியங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். தந்தை வழியில் சொத்தினால் ஆதாயம் உண்டு. திருமணம் வாய்ப்புகள் கைகூடும். குழந்தை பேரு தாமதப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வினாயகர்ருக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வருவதால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
குடும்பத்தில் அமைதி நிலவும். காதலர்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்யோன்யம் கூடும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு தன உதவி செய்யும் பொழுது கவனம் தேவை. பணம் திரும்ப கிடைக்காமல் போகலாம். பூர்வீக ஊரில் சொத்துக்களை வாங்குவீர்கள். புதிய வண்டி மற்றும் வாகனம் அமையப் பெறுவீர்கள். சொத்துக்களை வாங்கும் வகையில் தன விரயங்கள் உண்டாகும்.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
அரசு உத்தியோகத்தில் பணியில் உள்ளவர்கள் தவறாக எந்த ஒரு வாக்குறுதியும் மேலதிகாரியிடம் மற்றும் வேலை செய்யும் இடத்தில் அளிக்க வேண்டாம். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். தனியார் உத்தியோகத்தை பொறுத்தவரை பணியிடத்தில் மந்த நிலை காணப்படும். உரித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் போகலாம்.
தொழில்:
சுய தொழில் செய்பவர்கள் அதில் வளர்ச்சி பெற்று தொழிலில் பல புதிய கிளைகளை உருவாக்குவீர்கள். பங்குச்சந்தை மற்றும் பொருள் வர்த்தகத்தக முதலீடுகளில் கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
கட்டுமானத் துறை மற்றும் இரும்பு உறுக்கு ஆலைகளில் வேலையில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் தன வருவாயில் ஏற்றங்கள் உண்டாகும். மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தம் வரலாம். தியானம் செய்வது மன அமைதியை கொடுக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்விற்கு சனி பூஜை
ஆரோக்கியம்:
சிறு உடல் உபாதைகள் வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று தீர்வு காணுங்கள். வயதில் முதியவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உங்களால் முடிந்த நன்மைகளை செய்வதால் உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உடல் பருமனால் அவதிபடுவீர்கள். உடல் மெலிந்து நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்க மருத்துவ உதவியை நாடுவீர்கள்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
உயர்கல்வி மாணவர்களின் படிப்பில் சிறிது கவனம் தேவை. சிறுசிறு தடைகள் உண்டாகி அதன் பிறகே தேர்வில் வெற்றி பெறும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வருவதால் படிப்பில் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
