AstroVed Menu
AstroVed
search
search

மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Meenam Rasi Sani Peyarchi Palangal 2023-2026

dateMarch 16, 2022

மீன ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன்:

உங்கள் ராசிக்கு பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் பெயர்ச்சி ஆகி சஞ்சரிக்கிறார். ஏழரை சனியின் ஆரம்ப காலக்கட்டம். எந்தவொரு விஷயத்தையும் நீங்கள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு சுமாரான பலன்களே கிட்டும். குறுக்கு வழியில் செல்வதோ அகங்காரம் கொள்வதோ கூடாது. உங்கள் தகுதிக்கு மிஞ்சிய எதையும் எதிர்பார்க்காதீர்கள். அனுதினமும் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். சோதனைக் காலங்களில் சவால்களை எதிர்கொள்ள இறைவழிபாடு உங்களுக்கு துணை நிற்கும். 

 சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்

உத்தியோகம்:

தொழிலைப் பொறுத்தவரை மந்தமான முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்க தாமதம் ஆகும். பணிகள் அதிகமாக இருக்கும். திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படி விஷயங்கள் நடக்கவில்லை என்றால் மனம் தளராதீர்கள். நீங்கள் வேலை மாற்றம் விரும்புகிறீர்கள் என்றால் கவனமாக செயல்பட வேண்டும். பொறுப்புகள் உங்களுக்கு அதிகரித்து காணப்படும். இதனால் நீங்கள் பதட்டமடைவீர்கள்.  உங்கள் தொழிலில் நீங்கள் வளர்ச்சி காண நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றாலும் ஊதியம் குறைவாக உணர்வீர்கள். என்றாலும் வேலையை ஓத்துக் கொண்டால் எதிர்காலத்தில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவிகரமாக இருக்கும்.  

காதல் / குடும்பம்

குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள், உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பில்லை. உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் எழும் வாய்ப்பு உள்ளது. அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். சனி வயதானவர்களைக் குறிக்கும் என்பதால் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை அளியுங்கள். குழந்தைகள் மூலம் நீங்கள் அதிக செலவுகளை மேற்கொள்ள நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

திருமண வாழ்க்கை:

ஆரம்பகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பின்னர் மெதுவாக  கருத்து வேறுபாடுகள் எழும் வாய்ப்பு உள்ளது.  அனுசரித்து  நடந்து கொள்வதன் மூலம்   நல்லிணக்க உறவு பேண இயலும்.      திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்வார்கள். தம்பதிகள் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் பிணைப்பு அதிகரிக்கும்.

நிதிநிலை:

கடந்த காலத்தில் சிறந்த லாபங்களை அனுபவித்தவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் சில தாமதங்களை சந்திக்க நேரும். முதலீடுகள் மேற்கொள்வதை ஒத்திப் போடுங்கள். உண்மையில் சொல்லப் போனால் உங்களுக்கு நெருங்கியவர்களே உங்களுக்கு சில தொல்லைகளை அளிக்கலாம். எனவே யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். இந்த காலக்கட்டத்தில் கடன் வாங்குவதைத் தவிருங்கள். ஊக வணிகங்களில் ஈடுபடாதீர்கள். புதிய தொழிலை மேற்கொள்வதாக  இருந்தால் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள்.

மாணவர்கள்:

மாணவர்கள் சிரத்தையுடன் பயில வேண்டும். அப்படி பயின்றால் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். தேவையற்ற பயம் காரணமாக படிப்பில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் வெற்றிகரமாக தங்கள் ஆராய்ச்சியை முடித்து அளிப்பார்கள். வெளிநாடு சென்று உயர் கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் தங்கள் கனவு நனவாகக் காண்பார்கள்.போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  மாணவர்கள் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். மாணவர்கள் தங்களின் தன்னம்பிகையை வளர்த்துக் கொள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும்.  

ஆரோக்கியம்:

ஆரோக்கியமே சிறந்த செல்வம். மருத்துவமனை  மற்றும் மருத்துவ செலவுகளை குறிக்கும் பன்னிரண்டாம் வீட்டில் சனியின் சஞ்சாரம் இருப்பதால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். யோகா, தியானம், உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள இயலும் துரித உணவுகளை தவிருங்கள்.அளவிற்கு மீறி உழைக்காதீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அதிவேகத்தில் பிரயாணம் செய்யாதீர்கள்.  சிறிய அளவிலான பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.  

பரிகாரங்கள் :-

  • சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
  • சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
  • அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
  • சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
  • மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள் 

banner

Leave a Reply