AstroVed Menu
AstroVed
search
search

மீனம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Meenam 2022 – 2023)

dateMarch 24, 2022

மீனம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:

இந்த வருடம் சுய தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகள் கூடும். வேலையில் உள்ளவர்களுக்கு பெயர் மற்றும் புகழ் கூடும். மாணவர்கள் படிப்பில் சாதிப்பார்கள். வழக்குகளில் வெற்றி உண்டாகும். சகோதரர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஆதாயம் பெறுவீர்கள்.

தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்

காதல் / குடும்பம்:

இந்த வருடம் காதல் கைகூடும். காதலர்களுக்கு இடையே நல்லிணக்கம் காணப்படும். குடும்பத்தில் சில நேரங்களில் கருத்து வேறுபாடு உண்டாகும் நிலை வரும். அதனால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். திருமணத்திற்கு சில தடைகள் வந்து விலகும். குழந்தை பாக்கியம் தாமதமாக அமைய வாய்ப்புள்ளது.

தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

இந்த வருடம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும். புதிய தொழிலில் முதலீடு செய்யவும் எண்ணம் கொள்வீர்கள். பணம் தேவைப்படும் நண்பர்களுக்கு பணத்தைக் கடனாக அளிப்பீர்கள். அந்தப் பணம் நீங்கள் திரும்பக் கேட்கும் பொழுது பணம் வாங்கியவர்களால் மறுக்கப்படும் என்பதையும் கவனத்தில்  கொண்டு செயல்படுங்கள். 

தன நிலையில் உயர்வு பெற சந்திரன் பூஜை

வேலை:

அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் வேலையில் இலக்குகளை.  அடைந்து  அதில் சாதனை பெறுவார்கள். அதனால் பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள். தனியார் துறையில் பணியில் உள்ளவர்கள் பணியிடத்தில் உங்கள் படைப்பாற்றல் மற்றும் உங்கள் உற்சாக பணிக்கு உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களிடம் இருந்து உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில்:

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அனுகூலமான காலமாக இது அமையும். ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்களுக்கு அயல்நாட்டு தொடர்பால் நல்ல தன ஆதாயம் கிடைக்கும். தொழிலை பெரிய அளவில் எடுத்துச் செல்ல தெளிவான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. 

தொழில் வல்லுனர்கள்:

உத்தியோகத்தில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு உத்தியோக ரீதியில் சிறுசிறு மன அழுத்தம் வந்து செல்லும். திட்டமிட்டு செயல்களைத் தொடங்குவது அதிக முன்னேற்றத்தை தரும். புதிய பணிகள் மற்றும் பொறுப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் செயல் திறன் பிறரால் பாராட்டப்படும்.  

உத்தியோகம் மற்றும் தொழில் உயர்விற்கு சனி பூஜை

ஆரோக்கியம்:

சிறு சிறு உடல் உபாதைகள் வந்து செல்லும். அறுவை சிகிச்சையில் குணப்படுத்த வேண்டிய நிலைமை  மாறி மருந்துகளால் குணம்பெறும் நிலைமை உண்டாகும். வண்டி ஓட்டுவதில் கவனம் தேவை. நோய் வந்தாலும் எளிதில் குணமாகும்.  என்றாலும் உங்கள் உணவில் கவனம் தேவை.  தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம்.

அரோக்கியம் மேம்பட சிவன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களின் படிப்பில் சற்று தொய்வு காணப்படும் அதேசமயம் கடினமாக படித்தால் மேன்மையான மதிப்பெண்களைப் பெறலாம். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆனால் படிப்படியாக கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 

கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை


banner

Leave a Reply