AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Kumbam 2022 – 2023)

dateMarch 24, 2022

கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:

இந்த வருடம் தங்களின் வாக்கு பலம் அதிகரிக்கும். புதிதாக வேலையில் சேருபவர்கள் வேலையின்  போக்கை அறிந்து பயணிப்பீர்கள். திருமணம் சற்று தாமதமாகவே நிறைவேறும். இந்த வருடம் நீங்கள் பல உலக விஷயங்களை கற்கும் நேரமாக இது அமையப்பெறும். சிலர் குழந்தை பெறுவதற்கு மருத்துவ உதவியை நாடுவீர்கள். அயல்நாட்டு தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனை வந்து சேரும். நேர்மறையான சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அதனால் மன அமைதி கிட்டும்.

தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்

காதல் / குடும்பம்:

காதல் கைகூடும் மற்றும் பெற்றவர்களின் ஆசியுடன் திருமணம் நிகழும். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் வருடப் பிற்பகுதியில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. பிரிவினை பெற்றவர்களுக்கு புதிய திருமணம் நடக்கும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேரில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

திருமண உறவில் நல்லிணக்கம் கூட அஷ்ட லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. எதிர் கால நலன் கருதி உங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். எழுத்து மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் இந்த வருடம் கணிசமாக பணம் சம்பாதிப்பார்கள்.

தன நிலையில் உயர்வு பெற சந்திரன் பூஜை

வேலை:

அரசாங்க ஊழியர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கக்கூடும் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் வேலைப்பளு உருவாகலாம். தனியார் நுறுவன ஊழியர்கள் செய்யும் செயலில் கவனமாகவும் சாதுரியமாகவும் பணி செய்யும்பொழுது அதில் வெற்றி கிடைக்கும்.

தொழில்:

தொழில் செய்பவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கப்பெற்று ஆதாயம் பெறுவார்கள் ஆயினும் அவர்களிடம் பண விசயத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். கூட்டுத்தொழிலில தொழில் விசயமாக அலைச்சல் உருவாக நேரிடும்.  வண்டி விற்பனை தொழிலில் ஏற்றம் காணப்படும்.

தொழில் வல்லுனர்கள்:

கட்டடத் தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் இந்த வருடம் சிறந்த வளர்ச்சி காண்பார்கள். உங்கள் பேச்சில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு நிர்வாகத் திறமை மற்றும் வாடிக்கையாளரை கவரும் பேச்சு இவை அனைத்தும் இந்த வருடம் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு ராகு பூஜை

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். சளி  மற்றும் ஒற்றைத்தலைவலி பிரச்சினைகளால் பாதிக்கப்படுவீகள். உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள். உணவில் விட்டமின் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பெரும் நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்பட செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதிக ஈடுபாட்டுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தொழில் சார்ந்த கல்வியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த வெற்றி காண்பார்கள். 

மாணவர்களின் கிரகிக்கும் தன்மை அதிகரிக்க புதன் பூஜை


banner

Leave a Reply