AstroVed Menu
AstroVed
search
search

மகரம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Magaram 2022 – 2023)

dateMarch 24, 2022

மகரம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:

இந்த வருடம் திருமணம் கைகூடும் அதேசமயம் தாமதமான புத்திர பாக்கியம் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவுகள் சற்று சராசரியான பலன்களை அளிக்கும். கடன் சுமை குறையும் அதேசமயம் புதிய கடன்களை வாங்கும் நிலை உருவாகும். நன்கு ஆராய்ந்த பிறகு கடன் வாங்குவதில் முடிவு செய்ய வேண்டும். வருடத்திற்கு பிற்பகுதியில்  அனைத்து முயற்சிகளும் கைகூடும். மன அமைதி கிடைக்க பெறுவீர்கள். 

தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்

காதல் / குடும்பம்:

காதல் உறவில் உள்ளவர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் உண்டாகலாம். வாக்கில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்து மறையும். பொறுமை மற்றும்  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது நன்மையை அளிக்கும். ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும் அதேசமயம் ஆன்மீக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். 

காதலில் வெற்றி பெற சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

நிலம் மற்றும் வீடு ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முன்  நன்கு ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்வது சிறப்பு. ஏற்றுமதி தொழிலில் நல்ல வருமானத்தை காண்பதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். 

நிதிநிலையில் ஏற்றம் உண்டாக ஸ்ரீம் ப்ரிஸீ லக்ஷ்மி பூஜை

வேலை:

தனியார் துறையில் இருப்பவர்கள் விட்டுக் கொடுத்து செல்லும் நிலை உருவாகும் அதனால் பதவி உயர்வும் ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு உத்தியோகத்தை பொறுத்தவரை மந்த நிலை  காணப்படும். உரித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் போகலாம்.

தொழில்:

தொழில் செய்பவர்களுக்கு கடின உழைப்பிற்குப் பிறகு ஆதாயமும் லாபமும் கிடைக்கும். தொழில் முதலீட்டுக்காக கடன் வாங்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பிரயாணம் சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்களுக்கு நல்ல தனலாபம் ஏற்படும். 

தொழில் வல்லுனர்கள்:

கல்வி நிறுவனத்தில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்களான நீங்கள் ஆன்மீக தொண்டு செய்வதால் மதகுருவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெற்று உத்தியோகத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையில் தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள்  சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்க செவ்வாய் பூஜை

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை வண்டி வாகனங்களை உபயோகிக்கும் பொழுது கவனமாக கையாள வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கிய உணவு உட்கொண்டு இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். வயது மூத்தவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.  

உடல் ஆரோக்கியம் மேன்மை அடைய செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்விபடிக்கும் மாணவர்கள் கவனச் சிதறல் போன்ற தடைகளையும் தாண்டி கல்வியில் வெற்றி காண்பார்கள். உயர்கல்வி படிக்கப்போகும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள படிப்பைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கும். எனவே கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று தேர்வு செய்வது சிறப்பு.
கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை


banner

Leave a Reply