சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 – 2023 (Tamil Puthandu Rasi Palangal Simmam 2022 – 2023 )

சிம்மம் ராசி தமிழ் புத்தாண்டு 2022 பொதுப்பலன்கள்:
பாக்ய ஸ்தானத்தில் ராகு அமர பெறுவதால் அதிர்ஷ்டமும் பாக்கியங்களும் வந்து சேரும். முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பதால் முயற்சிகளில் தடைகள் மற்றும் சவால்கள் உருவாகலாம். ஆயினும் சவால்களை வென்று வெற்றி காண்பீர்கள். உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெறுவீர்கள். தொழிலில் லாபம் அமையும். வேலை செய்பவர்களிடம் வருமானம் அதிகரிக்கும். தொழில் துறையில் முன்னேற்றம் அதிகரிக்கும்
தமிழ் புத்தாண்டு பலன்களை துல்லியமாக கணிக்க எங்கள் ஜோதிட நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்
காதல் / குடும்பம்:
திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். தாமதமான குழந்தை பாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நேரமாக அமையும். தங்களின் முயற்சிக்கு குடும்பம் துணையாக நிற்கும் அதேசமயம் சகோதர சகோதரி வழியில் பண உதவிகள் கிடைக்கும்.
குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை
நிதி நிலை:
பணவரவு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையான அளவு பொருளாதாரம் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் வாகன யோகங்கள் அமையும். ஆன்மீக சுற்றுலா மற்றும் ஆன்மீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள்.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
அரசாங்க ஊழியர்களுக்கு வேலைச்சுமையும் அதேசமயம் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்கள் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புது வேலை கிடைப்பதால் வீடு மாறும் வாய்ப்பு உள்ளது. உடன் பணிபுரியும் சக உழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் வாக்குவாததில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும்.
தொழில்:
தொழில் ரீதியான பிரச்சனைகள் வர நேரும். கடின உழைப்பிற்குப் பிறகு அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர் பார்க்கலாம். பட்டு ஜவுளி உற்பத்தி செய்பவர்கள் விற்பனை அதிகரிக்க காண்பார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
உயரதிகரிகளுடன் கருத்து மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உயர் அதிகாரியுடன் அனுசரித்து செல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சொந்தத் தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
சிறிதாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் பொழுதே மருத்துவ உதவிகளை நாடுங்கள். அவ்வாறு செய்தால் பெரிய மருத்துவ செலவை குறைக்க உதவும். ஒற்றை தலைவலி மற்றும் கழுத்து வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாயார் உடல்நலனில் அக்கறை தேவை.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் சாதிப்பீர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க எண்ணுவோர் ஆசை நிறைவேறும்.
உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் பிடித்த படிப்பை தேர்வு செய்து அதை பயிலக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை
