Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

சூரியன் புதன் சேர்க்கை | Suriyan Budhan Serkai In Tamil

July 9, 2020 | Total Views : 25,075
Zoom In Zoom Out Print

சூரியன் புதன் சேர்க்கை:

சூரியன் : 

 நவகிரகங்களின் நாயகனாய் விளங்கும் சூரியன் ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். தந்தை,  தன்னம்பிக்கை, புகழ், கௌரவம் இவ்வாறாக இன்னும் பல தலைமை வகிக்கும் பல விஷயங்களுக்கு காரகராக சூரியன் விளங்குகிறார். சூரியன் ஒளிக்கு அதிபதி. ஒளி இல்லையேல் உலகில் உயிர்கள் இல்லை. உஷ்ணத்திற்கு அதிபதியாக சூரியன் விளங்குகிறார். உஷ்ணம் இல்லையேல் உயிர் தத்துவமே இல்லை. சூரியன் பிராணனை கொடுக்கக் கூடியவர்  சூரியன் இராஜவம்சம், பிரபுக்கள், ஜனாதிபதி, கவர்னர்கள், தேசத் தலைவர்கள், நாட்டின் முக்கியத் தலைவர்கள், அராசாங்க ஊழியர்கள், அதிகாரம் பெற்றவர்கள், அரசாங்க மாளிகைகள்  போன்றவற்றைக் குறிக்கும். உடலைப் பொறுத்த வரையில் இருதயம், முதுகெலும்பில் உள்ள நரம்புகள், கண்கள், தலை, ஜீவ சக்தி போன்றவற்றைக் குறிக்கும்.   மேலும் ஆத்மசக்தி, அதிகாரம், ஆர்வம், கர்வம் தைரியம், வீரம் இவைகளுக்கு சூரியன் காரகம் வகிக்கிறார். சூரியன் புதன் சேர்க்கை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிடம் வல்லுனர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

புதன் : 

நவகிரகங்களில் சிறிய கிரகமாக விளங்குபவர் மனிதர்களை இயக்கும் எண்ணங்களுக்கு அடிப்படை புதன். ஆகும். புதனைப் பொதுவாக புத்தி காரகன் என்று அழைப்பார்கள். புத்தி என்று வரும் போது  கல்வி, ஞானம், விவேகம், அனுபவம் எல்லாம் சேர்ந்ததாகும். புத்தியோடு தொடர்பு கொண்ட வித்தைக்கும்  அதிபதி புதனே. சூரியனுடன் புதன் சேரும் போது புத்தி மேலும் விஸ்தாராமாகின்றது. புதன் பேச்சாளர், எழுத்தாளர், குமாஸ்தா, பத்திரிகை ஆசிரியர், பத்திரிகைத் தொழில், கணக்கர், ஆசிரியர், ஜோதிடர், ஆடிட்டர், வக்கீல், கல்வி, கல்வி நிலையங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். உடலில் மூளை, நரம்புகள், தொண்டை, நாக்கு இவற்றிற்கு அதிபதி புதன்.
 
சூரியன் புதன் சேர்க்கை:

புதன் சூரியனுக்கு அருகில் உள்ளது. அளவில் சிறிய கிரகம். அது எப்பொழுதும் சூரியனை ஒட்டியே இருக்கும். புதன், சூரியன், சுக்கிரன் இந்த மூன்றும் முக்கூட்டு கிரகம் என்று கூறப்படும்  சூரியக்குடும்பத்தில் சூரியன், புதன், மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருங்கி அமைந்து உள்ளது.எனவே கோட்சாரத்தில் ராசிக்கட்டத்தில் சுற்றிவரும்போது தொடர்ச்சியான மூன்று முதல் நான்கு வீடுகளுக்குள்ளேயே இந்த கிரகங்களின் சஞ்சாரம் இருக்கும்.சில நேரங்களில் ஒரே வீட்டில் கூட மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கும். ராசிக்கட்டத்தில் இவை மூன்று வீட்டிற்கு மேல் ஒன்றை விட்டு மற்றொன்று விலகி செல்லமுடியாது இதனால்தான் இந்த மூன்று கிரகங்களும் முக்கூட்டு கிரகங்கள் என்று அழைக்கபடுகின் றது.
சூரியனுக்கு ஆதித்யன் என்ற பெயரும்  உண்டு. ஆன்மாவுக்கு காரகராக விளங்கும் சூரியனும் அறிவுக்கு காரகராக விளங்கும் புதனும் சேரும் போது புதாதித்ய யோகம் ஏற்படுகின்றது. அதிகாரம் தைரியம், வீரம், கர்வம் இவற்றுடன் புத்தி மற்றும் விவேகம் சேரும் போது  ஒருவரின் அறிவு சார்ந்த தன்மை மேலும் மேன்மை பெறுகின்றது. 

சூரியன் புதன் சேர்க்கையின் விளைவுகள்:

அதிகாரத்துக்கு காரகராகன சூரியனும் அறிவுக்கு காரகரான புதனும் இணையும் போது அகங்காரம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகி விடுகின்றது. இதனால் கல்வியில் மேன்மை, பெரியவர்களின் ஆசி, வியாபாரத்தில் ஈடுபாடு, அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். புதனும் ஆதித்தன் என்னும் சூரியனும் இணைந்து லக்கினத்திற்கு 1-4-8-ல் இருந்தால் புதாதித்ய யோகம் அமையும்.

ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அறிவு சார்ந்த கர்வம் மற்றும் அகங்காரம் ஏற்பட்டுவிடும். உலகில் உள்ள பெரும்பாலான  மக்களுக்கு  இந்த புத ஆதித்ய யோகம் அமைந்துவிடும். அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும் எனும் இறைவனின் கருனையால் ஏற்பட்ட இந்த யோகம் பல சமயங்களில்  உலகில் பலரையும் அகங்காரத்தோடு விளங்க காரணமாகிவிடுகிறது.
புத ஆதித்ய யோகத்தினால் அனைவருக்கும் அகங்காரம் ஏற்பட்டாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் புதன் நிற்கும் நிலையை பொறுத்து அங்காரத்தின் விளைவுகள் மாறுபட்டு அமைந்துவிடும். இன்று சமூகத்தில் கல்வியில் சிறந்தவர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள் இவர்களுக்குள் எப்போதும் ஒரு கர்வ நிலை இருப்பதற்கு இதுவே ஒரு காரணமாகிவிடுகிறது.

சூரியன் புதன் சேர்க்கை பெற்றவர்கள் அறிவுத் திறனுடன் செயல்படுபவர்கள்.  தன்னம்பிக்கை மிக்கவர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். சிறந்த பேச்சாளர்கள். எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்கள்.  பேராவல் மிக்கவர்கள். எழுத்துத் திறன் மிக்கவர்கள், சிந்தனைத் திறன், எழுத்தாற்றல், சொற்பொழிவு ஆற்றும் திறன் மிக்கவர்கள்.  விரைவாகச் செயல்படுவார்கள்.  வியாபார நுணுக்கங்கள் அறிந்தவர்கள்  நினைவாற்றல் மிக்கவர்கள். நகைச்சுவையாகப் பேசுபவர்கள். 

சூரியன் புதன் இனைவினால் புதன் வலிமை குறைவதால் நுரையீரல், நரம்புத் தொந்தரவு, போன்ற நோய்கள் ஏற்படும். 

ஒரு ஜாதகத்தில் சூரியன்+புதன் சேர்க்கை மற்ற கிரகங்களின் தொடர்பின்றி அமைந்து இருந்தால் அது புதாதித்ய யோகம் எனப்படும்.இந்த கிரக அமைப்பு ராசிகட்டத்தில் 1,4,5,7,8,9,10,11 போன்ற இடங்களில் அமையபெற்றால் மிகவும் சிறப்பு.

புதாதித்யயோகம்/நிபுனாயோகம் பலன்கள்:

புதாத்தித்ய யோகம் அமைந்துள்ள நபர்கள் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவார்கள். எதையும் உடனடியாக கிரகிக்கும் திறன், கற்றுக் கொள்ளும் திறன்   இவர்களிடம் இருக்கும். எளிதில் பற்றிக் கொள்ளும் கற்பூரம் போல, இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். 
கணிதம் மற்றும் ஜோதிடம் சம்பந்தமான துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அந்த துறையில் சாதிப்பதற்கான  வாய்ப்பு சூரியன் புதன் சேர்க்கை உள்ளவர்களுக்கு கிட்டும்.

கல்வி அல்லது தொழில்/வித்தையில் மிகச் சிறந்து விளங்குவார்கள். வியாபார விஷயங்களில் வல்லவர்களாக இருப்பார்கள். அது மட்டுமின்றி அதில் நிபுணத்துவம் பெறுவார்கள். 

சூரியன் புதன் சேர்க்கை புதாதித்ய யோகம் செயல்படாத தன்மை:

சூரியன், புதன் சேர்க்கை உள்ள எல்லா ஜாதகருக்கும் மேற்கண்ட பலன்கள் கிடைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சூரியனுடன் புதன் மிகவும் நெருங்கினால் அஸ்தங்கம் என்ற நிலை அடைந்து அதன் இயல்புத்  தன்மையை இழந்து  விடும். எனவே அஸ்தங்கம் இல்லாத சேர்க்கையாக இருத்தல் வேண்டும். இந்த சேர்க்கை இருக்கும்  இடமும் ந ல்ல இடமாக இருக்க  வேண்டும். 

  • இந்த அமைப்பு நீச வீடுகளில் இருத்தல் கூடாது
  • பாதக ஸ்தானங்களில் இருத்தல்  கூடாது.
  • பகை வீடுகளில் இருத்தல் கூடாது
  • மறைவு ஸ்தானங்களில் இருத்தல் கூடாது
banner

Leave a Reply

Submit Comment