AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Viruchigam Rasi Palan 2021

dateAugust 4, 2021

விருச்சிகம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் காணப்படும். குழந்தைகளுடன் நல்லுறவையும் அனுபவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், குடும்ப பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே,  உங்கள் பேச்சில்  கவனமாக இருங்கள். நண்பர்கள் மூலம் சில லாபங்களை நீங்கள் பெறுவீர்கள். வர்த்தகம் மற்றும் கூட்டு வணிகங்களில் ஈடுபடுபவர்கள் இந்த மாதத்தில் சிறந்த  லாபத்தை எதிர்பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல்/குடும்ப உறவு: 

திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்புடனும், அனுசரணையுடனும் விட்டுக்கொடுத்தும் நடந்து கொள்வீர்கள். பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். இதன் மூலம் உறவில் நல்லிணக்கம் ஏற்படும். தவும். நண்பர்களுடன் நீங்கள் தொடர்ந்து நல்லுறவைக் கொண்டிருக்கலாம், அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவும் இருக்கலாம். ஆனால் குடும்பத்தில் வயதில் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை

நிதிநிலை:

​​இந்த மாதத்தில் ஓரளவு சிறந்த பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம். எனவே, உங்கள் பழைய கடன்களில் சிலவற்றை நீங்கள் அடைக்க முடியும். நீங்கள் நிலங்கள் அல்லது புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பங்குச் சந்தை போன்ற ஊக வர்த்தகங்கள் குறிப்பிடத்தக்க இலாபங்களை ஈட்டக்கூடும். ஆனால் இப்போது புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் வாழ்க்கையில் சில முன்னேற்றங்களைக் காணலாம். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு பணியிடத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தரும்.  உங்கள் சகாக்களும் உங்களுடன் மிகவும் நட்பாகவும் ஆதரவாகவும் இருக்கலாம்.

தொழில்:

கூட்டுத் தொழில்  செழிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகங்கள் மூலம் அதிக லாபம் ஈட்டக்கூடும். ஆனால், இப்போது புதிய கூட்டுத்தொழில் முயற்சிகளுக்கு புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது அவசியம். 

தொழில் வல்லுனர்கள்:

மருத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள விருச்சிக ராசி தொழில் வல்லுநர்கள் பணியில் பதற்றத்தை அனுபவிக்கலாம். ஆனால் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் உள்ளவர்கள் தங்கள் வேலைகளில் சிறந்து விளங்குவதைக் காணலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.  மேலும் உங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம்.

உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சற்று சவால்களை சந்திக்க வைக்கும். நீங்கள் சில சிறிய உடல்நலப் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். சிறிய உடல் உபாதைகள் என்றாலும் புறக்கணிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் வலி, தலைவலி போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்ளுங்கள், இது உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை 

மாணவர்கள்:

பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி பயில்வார்கள். வெளிநாட்டில் உயர் கல்வி கற்கத் திட்டமிடுவோர் தங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றலாம். ஆனால் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் கவனச்சிதறலுக்கு ஆட்பட நேரலாம். எனவே, அவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றிபெற முழு கவனம் செலுத்த வேண்டும்.

கல்வியில் மேன்மை அடைய : துர்கா பூஜை 

சுப நாட்கள் : 01, 02, 08, 09, 10, 13, 16, 17, 26, 27 
அசுப நாட்கள் : 04, 12, 18, 24, 25, 28, 29, 30


banner

Leave a Reply