AstroVed Menu
AstroVed
search
search

துலாம் செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Thulam Rasi Palan 2021

dateAugust 4, 2021

துலாம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். என்றாலும் நீங்கள் அதனை சிறப்பாக ஏற்று நடத்துவீர்கள். சில நல்ல மனிதர்களுடனான உங்கள் நட்பு இப்போது வேலையில் லாபம் பெற உதவும். உங்கள் நிதி நிலையும் நம்பிக்கைக்குரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன; எனவே,  நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல்/ குடும்ப உறவு:

திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைக்கென தங்களின் தரமான  நேரத்தை ஒதுக்கி, அவர்களுடன் இனிமையான உரையாடல்களில் ஈடுபடக்கூடும். இது அவர்களின் பிணைப்பை பலப்படுத்தும். குழந்தைகளுடனான உங்கள் உறவும் வலுவாக மாறக்கூடும். மேலும் நீங்கள் குடும்பத்தில் அமைதியை அனுபவிக்க முடியும். நீங்கள் நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளலாம். குடும்பத்தில் நல்ல செயல்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான சாத்தியங்களும் உள்ளன.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

இந்த மாதம் கண்மூடித்தனமான செலவுகளை நீங்கள் மேற்கொள்ளக் கூடாது.  ஆடம்பரமான பொருட்களுக்கு செலவிடுவதை தவிர்க்கவும். கவனமாக திட்டமிடல் மற்றும் பட்ஜெட் அமைத்து செலவுகளை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். வீட்டை பராமரித்தல், வீட்டிற்கு வர்ணம் பூசுதல் போன்றவற்றுக்கு நீங்கள் பணத்தை செலவிட நேரலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : துர்கா பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ள இயலும். உங்களில் சிலர் வேலையில் பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம், மேலும் இது சம்பள அதிகரிப்பு மற்றும் அதிக வருமானத்திற்கு பங்களிக்கும். வெளிநாட்டு வேலை தேடுவோருக்கு அதற்கேற்ப வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

தொழில்:

கூட்டுத் தொழில் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.  இருப்பினும், இதுபோன்ற கூட்டாண்மை தொழில்  முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் இந்த மாதத்தில் அவர்களின் சுமூகமான நடவடிக்கைகள் மற்றும் வெற்றிக்கு நிறைய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தொழில் வல்லுனர்கள்:

துலாம் தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு பிரகாசமான மாதமாகத் தோன்றுகிறது. இது குறிப்பாக அரசாங்கத்தில் அல்லது ஆராய்ச்சி துறையில் பணிபுரிபவர்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும்.  உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சில ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், பொறுமையாக சிந்தித்து, அனைத்து சாதக பாதகங்களையும் கருத்தில் கொண்ட பின்னரே நீங்கள் எந்த முடிவையும் எடுப்பது நல்லது.

உங்கள் வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதத்தில் உங்களுக்கு பெரிய அளவிலான ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை. சில சிறிய குறைபாடுகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு உட்கொள்ளல் மூலம், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு சாதகமான மாதமாகத் தோன்றுகிறது, அவர்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றலாம் மற்றும் அவர்களின் படிப்பில் வெற்றி பெறலாம். உயர்கல்வியைத் தொடங்குபவர்களுக்கும் இந்த காலகட்டம் மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும். ஆராய்ச்சி துறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் படிப்பதற்கு நீண்ட நேரம் செலவிட வேண்டும், 

கல்வியில் மேன்மை பெற : கேது பூஜை

சுப நாட்கள் : 1, 2, 8, 9, 10, 12, 16  
அசுப நாட்கள் : 6, 7, 14, 15, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 


banner

Leave a Reply