AstroVed Menu
AstroVed
search
search

தனுசு செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Dhanusu Rasi Palan 2021

dateAugust 4, 2021

தனுசு செப்டம்பர் மாத 2021 பொதுப்பலன்:

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவி  உறவு சிறப்பாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்லுறவு காணப்படும். குடும்ப சூழ்நிலையும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். குடும்பத்தில் உள்ள பல பிரச்சினைகள் மற்றும் நிதி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடும். புதிய குடியிருப்புகளுக்குச் செல்ல இது சரியான மாதமாகவும் தெரிகிறது. உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் வெற்றி பெற இயலும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் சில வெளிநாட்டு கல்லூரிகளில்  உயர் கல்வியைத் தொடர வாய்ப்புகளைப் பெறலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.    

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்

காதல்/குடும்பம்:

கணவன்-மனைவி உறவு மிகவும் இணக்கமானதாக மாறக்கூடும். மேலும் திருமண பிணைப்பு நெருக்கமாகவும் நட்பாகவும் இருக்கும். உங்கள் உறவினர்கள் அனைவருடனும் நீங்கள் நல்லுறவைப் பேணலாம். மேலும் இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கக் கூடும். ஆனால் உங்கள் தாயார் சில உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம் மற்றும் அவருக்கு நல்ல கவனிப்பு தேவைப்படலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சந்திரன் பூஜை 

நிதிநிலை:

தொழில் அல்லது வியாபாரம் செய்யும் தனுசு ராசி அன்பர்கள்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம். பணப்புழக்கமும் வசதியாக இருக்கும். உங்களில் சிலர் இந்த மாதத்தில் நிலம் அல்லது பிற சொத்துக்களை வாங்கும்  அதிர்ஷ்டசாலியாகும் வாய்ப்பு உள்ளது.  குடும்பத்தில் விருந்து விசேஷங்கள்,  விழாக்கள் குறித்த செலவுகள் இருக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : கோ பூஜை 

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படலாம் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளலாம். இருப்பினும், புதிதாக இணைந்தவர்கள் அதிக வேலை பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும், இது அவர்களை மனச்சோர்வுக்குள்ளாக்க வாய்ப்புள்ளது. 

தொழில்:

வியாபாரம் செய்யும் தனுசு ராசி அன்பர்கள்  தங்கள் நிதியைப் பிரித்து பல தொழில்களில் முதலீடு செய்வது  நல்லது; இது அவர்களுக்கு சிறந்த  லாபம் ஈட்ட உதவும். கூட்டாண்மை வணிகங்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் தங்கள் வணிகங்களின் சீரான இயக்கம் மற்றும் வெற்றிக்காக வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தொழில் வல்லுனர்கள்:

பேராசிரியர்களாக மற்றும்  சட்டம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் தனுசு தொழில் வல்லுநர்கள் இந்தமாதம் சிறந்த முன்னேற்றங்களைக் காண இயலும். இவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பதன் காரணமாக பொருளாதார நிலையிலும் ஏற்றம் காண்பார்கள். தலைமை ஏற்று நடத்தும் பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள இயலும். இந்த மாதம் உங்கள் தொழில் வெற்றிகரமாக நடக்கும். 

உங்கள் வேலை மற்றும் தொழிலில் நீங்கள் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறிய ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும், மேலும் செரிமான அல்லது குடல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முயற்சிக்கவும், ஆரோக்கியமான உணவை உண்ணவும், இது வயிறு தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விலகி இருக்க உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : முருகர் பூஜை 

மாணவர்கள்:

இந்த மாதத்தில் மாணவர்கள் தங்கள் படிப்பில் பிரகாசிக்கச் செய்வார்கள். உங்களில் சிலருக்கு உதவித்தொகை அல்லது கல்வி உதவி கிடைக்கலாம். நீங்கள் பொதுவாக இப்போது தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு சாதகமான தருனமாக இருக்கும். 

கல்வியில் மேன்மை அடைய : துர்கா பூஜை 

சுப நாட்கள் : 01, 02, 08, 09, 10, 16, 26, 27 
அசுப நாட்கள் : 03, 04, 05, 06, 07, 12 24, 25 


banner

Leave a Reply